சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் கையளிப்பு Khan11

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் கையளிப்பு

Go down

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் கையளிப்பு Empty பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் கையளிப்பு

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 1:05

இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசு காலம்
கடத்தவில்லை:




தினகரன் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு தன்னுடைய அறிக்கையை
6 மாதங்களுக்குள் சபாநாயகரின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமென்று
பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ்
பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை கொழும்பில் நேற்று சந்தித்து உரையாடிய அவர்
இவ்வாறு கூறினார்.அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை
காலதாமதப்படுத்துவதற்காகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அதனை அனுப்புவதாக
அறிவித்து ள்ளதென்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் ஆதாரமற்றது என்பது
நிரூபணமாகுமென்றும் அவர் சொன்னார்.
இலங்கையின் அரசியல் சாசனம் சகல உரிமைகளையும் இந்நாட்டு மக்களுக்கு பெற்றுக்
கொடுக்கும் சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கிறதென்று தெரிவித்த அமைச்சர், அதிலுள்ள
முக்கிய அம்சங்களை அமுலாக்குவதில் சில காலதாமதங்கள் ஏற்படுவது ஏதோ உண்மைதான் என்று
சொன்னார்.
அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளுடன்
கலந்துரையாடி எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இந்நாட்டு மக்களின் ஏகோபித்த
அங்கீகாரத்தை பெறக்கூடிய வகையிலான ஒரு நிரந்தர சமாதான
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது என்றும் அமைச்சர்
பசில் ராஜபக்ஷ கூறினார். ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்தவுடன் எல். ரி. ரி. ஈயுடன்
சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்தார். ஆயினும், எல். ரி. ரி. ஈயினர்
பல்வகையான போலிக் காரணங்களை எடுத்துக் காட்டி அந்தப் பேச்சுவார்த்தைகளின்
வெற்றிக்கு முட்டுக்கட்டைகளை விதித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.
மீள்குடியேற்றம்
இடம்பெயர்ந்த மக்களில் 1 இலட்சத்து 14ஆயிரம் பேர் அரசாங்கத்தினால் இதுவரை
வடபகுதியில் மீள் குடியேற்றப்ப ட்டிருக்கிறார்கள். டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு
முன்னர் மீள் குடியேற்றப் படாதுள்ள அனைவரும் மீள்குடியேற்றப் படுவார்கள் என்றும்
அமைச்சர் கூறினார்.
இதுவரை மீள் குடியேற்றப்பட்ட மக்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குமாறு தினகரன்
பிரதம ஆசிரியர் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப அமைச்சர் இது பற்றிய விளக்கமொன்றை
அளித்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்த தகவல்கள் வருமாறு, ஃ உள்ளூரில்
இடம்பெயர்ந்தவர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். இவர்களில் ஒருசாரார் 2009 ஆம் ஆண்டு
மே மாதத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் நாம் இனங்கண்டுள்ளோம். ஃ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2009 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று முதல் தடவையாக
மக்களை மீள் குடியேற்றும் திட்டத்தை ஆரம்பித்தது. கட்டுக்கரைக் குளம் மற்றும்
சிலாபத்துறை பிரதேசத்தில் எல். ரி. ரி. ஈயினரால் புதைக்கப்பட்ட தரைக்கண்ணி வெடிகள்
அகற்றப்பட்ட பின்னர் அங்கு ஒரு பகுதி முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட்டனர். ஃ
அப்பகுதியில் இருந்த தரைக்கண்ணி வெடிகளை வெளியேற்றுவதற்காக குறைஷியா, சொவிட்லானியா
ஆகிய நாடுகளில் இருந்து தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை இறக்குமதி
செய்ததன் மூலம் நாம் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினோம். இன்று
உலகநாடுகளில் இலங்கையில் மாத்திரமே தரைக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான அதிகளவிலான
இயந்திரங்கள் இருக்கின்றன. இவற்றின் உதவியினால் தான் இன்று தரைக்கண்ணி வெடிகளை
அகற்றி மக்களை காலதாமதமின்றி அரசாங்கத்தினால் மீள் குடியேற்றக்கூடியதாக
இருக்கின்றது. ஃ இன்று இரண்டு பிரதேச சபையின் எல்லைகளிலும் சில கிராம சேவகர்
பிரிவுகளிலும் +>!ரிஜி மூதுப்படுவ பந்துல, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில்
மாத்திரமே மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

50,000 வீடுகளில்
1000 வீடுகள் பூர்த்தி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியா சென்று பேச்சுவார்த்தை வெற்றிகரமாக
நடத்தியதை அடுத்து இந்திய அரசாங்கம் இலங்கையில் குடிபெயர்ந்த மக்களை மீள்குடியேற்று
வதற்காக 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்வந்தது. அதனடிப்படையில், பரீட்சார்த்த
அடிப்படையில் 1000 வீடுகளை மீள்குடியேறும் மக்களுக்காக இந்திய அரசாங்கம் தானே
தெரிவு செய்யும் கொந்தராத்துக்காரர்கள் மூலம் இவ்வீடுகளை நிர்மாணிக்க உள்ளதாக
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிளிநொச்சியில் 250 வீடுகளையும் யாழ்ப்பாணத்தில் 150 வீடுகளையும், வவுனியாவில் 175
வீடுகளையும் மன்னாரில் 175 வீடுகளையும், முல்லைத்தீவில் 150 வீடுகளையும்
நிர்மாணிக்கும் என்றும் இந்த நிர்மாண வேலைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம்
திகதிக்குள் நிறைவடையும் என்றும் கூறினார்.
இத்துடன் கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரம் வீடுகளையும் மலையகத்தில் மேலும் 4 ஆயிரம்
வீடுகளையும் இந்திய அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுக்குமென்றும் அமைச்சர்
தெரிவித்தார். இந்த வீடுகளை அமைக்கும் இரண்டாவது திட்டத்தின் கீழ் யுத்தத்தினால்
கூரைகள் சேதமடைந்த 4,500 வீடுகளின் கூரைகளை அவற்றின் உரிமையாளர்களே திருத்துவதற்காக
அரசாங்கம் இந்தியா வழங்கும் நிதி உதவியை இவர்களுக்கு பெற்றுக் கொடுக்குமென்றும்
தெரிவித்தார். இந்தத் தொகை காலப்போக்கில் 6 ஆயிரம் வீடுகளாக அதிகரிக்கும்
வாய்ப்பும் இருப்பதாக கூறினார்.

வடக்கு ஜீவனோபாயம்

வடபகுதி மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு துறைகளை
அபிவிருத்தி செய்து வருகிறதென்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ விவசாயத் துறை,
மீன்பிடித்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதுடன் இவற்றின் மூலம்
கிடைக்கும் விளைச்சல் மூலம் சிறந்த இலாபம் அடைவதற்கும் அரசாங்கம் சந்தைவாய்ப்புகளை
பெற்றுக் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
தென்னஞ் செய்கை, பனைச் செய்கை, மரமுந்திரிகை ஆகியவற்றிற்கும் அரசாங்கம் உரப்பசளை
போன்ற சகலவிதமான உதவிகளையும் மானிய அடிப்படையில் செய்து வருகிறது. நுவரெலியாவில்
உருளைக்கிழங்கு அறுவடை நடக்கும் காலத்தில் அரசாங்கம் உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு
மேலதிக தீர்வையை விதித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளித்தது.
அது போன்று, வட இலங்கையில் வெங்காய அறுவடையின் போது ஏற்றுமதி செய்யப்படும்
வெங்காயத்திற்கு தீர்வை விதித்து வடபகுதி விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கி
வருகின்றது. அதுமட்டுமன்றி இவர்களின் விலை பொருட்களை தம்புள்ள காய்கறி விற்பனை
நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பதில் கொழும்பில் பேலியகொடைக்கு அருகில்
சந்தைப்படுத்துவதற்கும் வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.
கடலட்டைகளை இனவிருத்தி செய்வதற்கும் முத்து, சிப்பிகள், கடல் பாசியை ஜப்பான் போன்ற
நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கும் பாரிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு இப்போது
அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்றார்.
வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாலை அப்பிரதேச மக்களுக்கு விற்பனை
செய்வதற்கும், கோழிப் பண்ணைகள், ஆட்டுப்பட்டிகளை விருத்தி செய்வதற்கும் அவற்றின்
உரிமையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் கடனுதவி செய்து வருவதாகவும் அமைச்சர்
தெரிவித்தார்.
கடலிலுள்ள உவர் நீர் தரைக்கு வருவதை தடுப்பதற்காக 12 அணைகள்
ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் நன்னீரை சேமிக்கக்கூடியதாகவும்
இருக்கின்றது.
வடபகுதியில் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின்
பெருமுயற்சியில் கிளிநொச்சியில் பாரிய சர்வதேச விளையாட்டரங்கொன்று நிர்மாணித்து
வருவதாகவும் இதன் மூலம் சகல விளையாட்டுகளையும் மேம்படுத்த முடியும். இதற்காக
விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தடவை
வடபகுதி மெய்வல்லுநர்கள் தேசிய மெய்வல்லுநர் போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்
என்றும் ஆளுநர் சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.
வடபகுதியின் கபடி அணி அகில இலங்கை ரீதியிலான கபடிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை
பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

தமிழுக்கும் சிங்களத்துக்கும்
அரசு முன்னுரிமை


அரசாங்கம் சர்வதேச மொழியான ஆங்கிலத்தை புறக்கணிக்காவிட்டாலும் தமிழ் சிங்கள மொழிப்
பிரயோகத்திற்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.
அதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய வேலைப் பளுவையும்
பொருட்படுத்தாமல் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி சிங்கள மொழியில்
மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் பொதுமேடைகளில் பேசும் நற்பண்பை கடைப்பிடித்து
வருகிறார் எனவும் அமைச்சர் பசில் கூறினார்.
எனக்கு யாராவது தமிழ் பேசினால் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த
அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தமிழ் பேசுவதில் சற்று சங்கடப்படுகிறேன் அதனால் உங்களுடன்
சிங்கள மொழியில் பேசுகிறேன் என்று கூறினார்.
ஜனாதிபதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் அனைத்தும் தமிழிலும்
சிங்களத்திலும் மொழிபெயர்க்க வேண்டுமென்ற கட்டாய நடைமுறையை இப்போது செயற்படுத்தி
வருகிறார். எவ்வளவு அவசரமான அமைச்சரவை பிரேரணையாக இருந்தாலும் அதற்கு தமிழ், சிங்கள
மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென்று
ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» வறிய குடும்ப மாணவிக்கு இன்று வீடு கையளிப்பு
» பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு
» 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மே முதல் வாரத்தில் தாக்கல்
» ஜெயராஜின் நினைவு சுவடுகள்’ நூல் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு
» யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum