சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார் Khan11

ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்

Go down

ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார் Empty ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 6:26

புதுடில்லி: காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவக்குகிறார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து, ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க, மக்கள் நாடுமுழுவதும் தயாராகி விட்டனர். ராம்லீலா மைதானத்தை நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரத்துவங்கியுள்ளனர். மேலும், ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் அலை வேகமாக பரவுகிறது. டில்லியில் தடையை மீறி, உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, காந்தியவாதி அன்னா ஹசாரேயை, போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தில் இருந்தே, மத்திய அரசின் இக்கட்டானநிலை வெளிச்சத்திற்கு வந்தது. அதை மாற்ற, மத்திய அரசு, ஹசாரே விடுவிப்பு அறிக்கையில் இருந்து, அடுத்தடுத்த சமரச நடவடிக்கைகளில் இறங்கியது. 40 மணி நேரம் நடந்த பேச்சுக்களுக்குப் பின், உண்ணாவிரதம் நடத்தப்படும் இடம் ராம்லீலா மைதானம் என்று முடிவானதுடன், சில அர்த்தமுள்ள நடைமுறைகளும் இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் நேற்று காலை தான் உறுதியானது. இருப்பினும், ராம்லீலா மைதானம் தயாராகாததால், நேற்றும் திகார் சிறையிலேயே ஹசாரே, உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டார். ராம்லீலா மைதானத்தில் இன்று உண்ணாவிரதத்தை ஹசாரே முறைப்படி துவக்குகிறார். இதற்காக, இன்று திகார் சிறையிலிருந்து வெளியே வருகிறார். இத்தகவலை அவரது நெருங்கிய ஆதரவாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆர்.கே.சிங் பேட்டி: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து நேற்று டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உள்துறை செயலர் ஆர்.கே. சிங் கூறியதாவது: போராட்டம் நடத்துவது குறித்து, ஹசாரே குழுவினருடன் டில்லி போலீசார் சுமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், அரசு தலையிடவில்லை. செப்டம்பர் 2ம் தேதி (15 நாட்கள்) வரை, ராம்லீலா மைதானத்தில், ஹசாரே உண்ணாவிரதம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில வழக்கமான நிபந்தனைகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகள் என்றால், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் விஷயத்தில், ஏற்கனவே குறிப்பிடப்பட்டது பொருந்தும். டாக்டர்கள் பரிசோதனை நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைப்பாளர்களுக்கும், டில்லி போலீசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சிங் கூறினார்.

கிரண் பேடி: "உடல் நிலை ஒத்துழைக்கும் வரை ஹசாரே உண்ணாவிரதத்தை தொடர்வார்' என, அவரது குழுவில் உள்ள கிரண் பேடி தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஹசாரேயின் உண்ணாவிரதம் காலவரையற்றது. சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அல்ல. அவர் உடல்நிலை ஒத்துழைக்கும்வரை நீண்ட காலம் உண்ணாவிரதத்தை தொடர்வார். அவரது உடல் நிலை மோசமடைய அனுமதிக்கக்கூடாது' என்றார். "ஹசாரேவுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால், அதை கொடுக்கவேண்டும்' என, டாக்டர் நரேஷ் தெரஹான் குழுவினர் தெரிவித்தனர்.

தடை வாபஸ்: ஹசாரே முதலில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த ஜே.பி. பார்க் உட்பட மத்திய டில்லி முழுவதும் பிறப்பித்து இருந்த தடை உத்தரவை, டில்லி போலீசார் நேற்று வாபஸ் பெற்றனர். ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஈடுபட்டனர். போராட்டம் நடத்துவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளுடன் , நேற்று இரவுதான் மைதானம் தயாரானது.

ஊர்வலம்: திகார் சிறையிலிருந்து இன்று காலை வெளியே வரும ஹசாரே, தனது குழுவினருடன் ஊர்வலமாக ராம்லீலா மைதானம் செல்கிறார். இத் தகவலை, சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஹசாரேக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் நன்றாக இருக்கிறார். ரத்த அழுத்தம் நன்றாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக அவர் உணவு எதையும் உட்கொள்ளவில்லை' என்றார்.

மக்கள் தயார்: இன்று ஹசாரேயுடன் உண்ணாவிரதம் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தயாராக உள்ளனர். இதற்கு நாடு முழுவதும் ஆதரவு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும் அலை, நாடு முழுவதும் அதிகமாக பரவுகிறது. ஹசாரேயின் ஆதரவாளர்கள் அனைவரும் ராம்லீலா மைதானத்தை நோக்கி வாருங்கள் என, அவரது குழுவில் இடம்பெற்ற மேதா பட்னாகர் நேற்று அழைப்பு விடுத்தார். ஊழலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு உணர்வுக்கு முதல்கட்ட வெற்றியாக இது கருதப்படுகிறது. இதனால், பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியாக சிவில் அமைப்புகள் நடத்தும் எதிர்ப்பு உணர்வு தவறானதாகாது என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது.


ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் ராம்லீலா மைதானம், டில்லி ரயில் நிலையம் அருகில் உள்ளது.
*புகழ்பெற்ற ராம்லீலா கொண்டாட்டம் இங்குதான் நடைபெறும். 25 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது.

* மத விழாக்கள், அரசியல் மாநாடுகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இங்கு அதிகம் நடைபெறும்.


தினமலர்..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார் Empty Re: ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 6:27

இதுவும் ஒரு பொழுதுபோக்குதானே
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானிலும் அன்னா அலை- ஊழலை எதிர்த்து தொழிலதிபர் உண்ணாவிரதப் போராட்டம்
» நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்
» உலகம் முழுவதும் பரவுகிறது "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம்: ரோம் நகரில் வெடித்தது வன்முறை
» 15 நாள் உண்ணாவிரதம் இருக்க ஹசாரேவுக்கு அனுமதி
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum