சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

அமெரிக்க ஆங்கிலம் Khan11

அமெரிக்க ஆங்கிலம்

Go down

அமெரிக்க ஆங்கிலம் Empty அமெரிக்க ஆங்கிலம்

Post by Atchaya Tue 30 Aug 2011 - 19:24

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்கவிற்கும் பிரித்தானியாவிற்கும் வரி செலுத்தல் விடயமாக 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்த து அதைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சிப் பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.

சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.

அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.

(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது இவரது எண்ணம்.

1783 இல் இவரே முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.

அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி நோவா வெப்ஸ்டர் அவர்களாலேயே வெளியிடப்பட்டது. (First American Dictionary)
பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.

அதன் படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre
அமெரிக்க ஆங்கிலம்: center, theater

பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze

ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.

நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.

ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பலச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பலச் சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டுள்ளது.

இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

உதாரணம் சில சொற்கள்:

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
அமெரிக்க ஆங்கிலம்: Apartment

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
அமெரிக்க ஆங்கிலம்: Elavator

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
அமெரிக்க ஆங்கிலம்: Fries

மேலும் அமெரிக்காவின் Hollywood" திரைப்படத்துறை வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சியின் முதன்மை நிலை, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், போன்றவைகள் மற்றும் அமெரிக்க இணையத் தொழில் நுட்பம் போன்றன பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலத்தின் செல்வாக்கை உலகில் வலுப்படுத்தி வருகின்றது.

நன்றி இணைய தமிழ் உலகம்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum