சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

விலைமாது விடுத்த கோரிக்கை Khan11

விலைமாது விடுத்த கோரிக்கை

+3
நண்பன்
rammalar
Muthumohamed
7 posters

Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty விலைமாது விடுத்த கோரிக்கை

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 14:37

விலைமாது விடுத்த கோரிக்கை 564092_440642996023791_1244963912_n

விலைமாது விடுத்த கோரிக்கை
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.

என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.

சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.

திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.

பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?

பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?

காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.

கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.

நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.

நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.

என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.

எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!

வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு

எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.

ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.

தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.

என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..

ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.

இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.

இறுதியாக
இரு கோரிக்கை.

என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.

என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது

-- முக புத்தகத்தில் நான் ரசித்தது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty Re: விலைமாது விடுத்த கோரிக்கை

Post by rammalar Tue 9 Apr 2013 - 14:53

சூழ்நிலை காரணமாக இத்தொழிலுக்கு
வருபவர்கள் நிலைமை பரிதாபம்தான்...
-
பாலியல் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு சாதனங்கள்
வழங்கும் பியர் எஜிகேட்டார் (peer educator) ஆக ,
அதே தொழிலில் இருக்கும் சில பெண்கள் சேவை
செய்கிறார்கள்..
-
இது குறித்து 15-4-2013 குங்குமத்தில் நீண்ட
கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty Re: விலைமாது விடுத்த கோரிக்கை

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 15:18

படிக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது
இப்படியும் உள்ளதா என்று! :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty Re: விலைமாது விடுத்த கோரிக்கை

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 15:32

:!#: :pale: :oops:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty Re: விலைமாது விடுத்த கோரிக்கை

Post by veel Tue 9 Apr 2013 - 16:08

:pale:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty Re: விலைமாது விடுத்த கோரிக்கை

Post by எந்திரன் Tue 9 Apr 2013 - 16:56

rammalar wrote:சூழ்நிலை காரணமாக இத்தொழிலுக்கு
வருபவர்கள் நிலைமை பரிதாபம்தான்...
-
பாலியல் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு சாதனங்கள்
வழங்கும் பியர் எஜிகேட்டார் (peer educator) ஆக ,
அதே தொழிலில் இருக்கும் சில பெண்கள் சேவை
செய்கிறார்கள்..
-
இது குறித்து 15-4-2013 குங்குமத்தில் நீண்ட
கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது...
-
:( :(
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty Re: விலைமாது விடுத்த கோரிக்கை

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 6:41

ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.

இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.

ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு எப்படி இந்தப் பெயர் வரும்....

தவறுக்கு துணை ,தூண்டுபவன் நல்லவன்....

அதே தவறில் பங்கு கொண்ட பெண்ணுக்கு இத்தனை அவப் பெயர்கள் ..... #. #. #.

அவர்களை ஒழுங்காக வாழவிட்டால் இப்படி பொழைக்க அவர்களுக்கு என்ன விதியா `#

எங்கே போனாலும் ஒரு பார்வையில் பெண்களை கெட்ட பார்வையில் பார்த்து விட்டு ஒழுக்கம் பற்றி வாய் கிழிய பேசுவார்கள் இதில் பெண்ணுக்கு பெண்ணே கூட எதிரி ....


உனக்கென்று குடும்பம் இல்லையா அதில் பெண்கள் அம்மாவாக, தங்கையாக, அக்காவாக, மகளாக இல்லையா,

அது போல் பிற பெண்களை ஏன் நினைக்காமல் போகிறீர்கள் ...

உன் குடும்பப் பெண்கள் உசத்தி....மற்ற குடும்பத்து பெண்கள் இழி பிறவிகளா .#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விலைமாது விடுத்த கோரிக்கை Empty Re: விலைமாது விடுத்த கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum