சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Khan11

என் மன வானில்! விடை யறியா தேடலிது

+16
சுறா
Farsan S Muhammad
முனாஸ் சுலைமான்
rammalar
Nisha
jaleelge
நண்பன்
jasmin sama
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
மீனு
ahmad78
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
20 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 5 Mar 2014 - 20:49

First topic message reminder :

எப்போதாவது என் சிந்தையில் உதிப்பவை இனி இங்கே தொடராய்
 
என் நிம்மதியின் பிறப்பிடமே!

என் நிம்மதியின் பிறப்பிடமே!
என் நம்பிக்கையே! என் நிறையே!
நின் குரல் கேட்டே நான் நிலைகுலைந்தேனே!
நான் நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிழலாய் வருபவரே,

நினைவலைகள் தொடர்ந்திட வேண்டும்,
நித்தமும் என்னை நடத்திட வேண்டும்.
நின் மகளாய் என்னை ஏற்றிட வேண்டும்.
மன்னித்து வழி நடத்திடவேண்டும்-

மலைகள் எல்லாம் அசைந்து விட்டாலும்,
காக்கும் கரமாய் நீ வரவேண்டும்,
வழியில் தடைகள் பல வந்தாலும்
வாழ்ந்து காட்டும் வரம் தரவேண்டும்

சோர்வுகள் என்னை சோதிக்கும் போது
சோலையாக மாற்றிட வேண்டும் .
வேதனை என்னை அமிழ்த்திடும் போது
நிமிர்ந்து ஜெயிக்க பெலன்தர வேண்டும்.

வாடி நிற்கும் நிலை வரும் போது
வண்ண மலராய் வாழ்த்திட வேண்டும்.
வறுமையிலே தவித்திடும் போது செழித்து
வாழ வளம் தர வேண்டும்.

இளமை என்னை தாண்டிடும் போது
இனிய நினைவாய் நீ வர வேண்டும்.
முதுமையிலே மூழ்கிடும் போது
முடங்கி விடாது காத்திட வேண்டும்.

வார்த்தை தேள்கள் என்னைக் கொட்டிடும் போது
நல் ஆறுதல் மொழிகள் நீ-தர வேண்டும்
நானிருக்குமிடமெல்லாம் நீயாயிருந்து
இறைவா! எனக்காய் நீ வர வேண்டும்

 )(( )((

Last edited by Nisha on Wed 19 Mar 2014 - 1:40; edited 3 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Tue 15 Apr 2014 - 10:51

Nisha wrote: இயற்கையில் இளகிடும்
மனதினைகொடுத்து
இமயமாய் அதிலொரு
கனவினைத்தொடுத்து
இளகிய மனமது
இறைவனைத்தேடுது
இனியொரு வரமில்லை
இறங்கி நீ வா...!

இன்னல்கள் தொல்லைகள்
இதுவரை போதும்
ஏன் இந்த வாழ்வென்ற
கேள்வியும் போதும் .
இருப்பதை உணர்ந்து
இனியேதும் வேண்டேன்
எனக்கென மறுபடி
இரங்கி நீ வா....!

நான் தவறிடும்
வேளையில் கலங்கிவிடாது
தவறுகள் சகித்து
தயங்கியே நித்தம்
தவித்திடும் வேளையில்
தாய் மடி நீயே

காத்திட வா!

இறைவனின் கரமே
இணையற்ற உறவாய்
எனை அணைத்திடும் நாளில்
இனியெனக்கில்லை இகமதில்
துன்பம் இறுமாந்திருப்பேன்
சீக்கிரம் வா!

இன்பத்தில் துன்பம்
இன்னல்கள் இல்லை
இனியென்றும் சுகமே
இறைவனின் கரத்தில்
இயலாமை அகன்று
இடுக்கண்கள் நீங்கி
நீடித்த நாட்கள் நிம்மதி
தந்திட வா...!

அலை மோதும் உலகினிலே
அன்பினைத்தேடி
யாரிடம் செல்வேன்
உம்மையே நான்
அண்டியே வந்தேன்
இறையே என்
அடைக்கலாமானாய்
எனக்காக வா!

அருமையான இறைக் கவி

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 21 Apr 2014 - 10:14

 எல்லாமே நீயானாய்

கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 10:51

Nisha wrote: எல்லாமே நீயானாய்

கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்

உங்கள் வரிகளோடு என்னவளின் முகமும் என்முன்னே.........
உங்களின் கருவும் துணையென்று நினைக்கிறேன் 
அருமை வாழ்த்துகள்

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 12:23

Nisha wrote: எல்லாமே நீயானாய்

கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்

அனுபவித்து எழுதிய வரிகள் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 21 Apr 2014 - 13:17

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote: எல்லாமே நீயானாய்

கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்

உங்கள் வரிகளோடு என்னவளின் முகமும் என்முன்னே.........
உங்களின் கருவும் துணையென்று நினைக்கிறேன் 
அருமை வாழ்த்து
நன்று நன்றி!

2009 ஆம் ஆண்டில்  என்னால் இது எழுதப்பட்டது எனக்கு வரமாக  கிடைத்த நட்பொன்றை மனதில் கொண்டே எழுதினேன்! . என் உயர்வில் மகிழ்ந்து நான் இன்று உயிர்போடும் உயர்வோடும் வாழ காரணமாய் நின்று பல காரணங்ளால் இன்று விலகி நின்றாலும்  எம் உயிர் போகும் இறுதி நொடி நான் பெற்றதும் கொடுத்ததும் ஜெயிக்கும் எனும் நம்பிக்கையில்  மௌனமாய் தொடர்கிறோம்.

இன்று இதை மீள் பார்வையாய் நினைக்க செய்ததும் எனக்கு வரமான இன்னொரு நட்புத்தான். அது என்னமோ என் இரத்த உறவுகளை விட என் உயர்வில் என் நலனில் அக்கறை கொண்டவர்களாய் நட்புக்கள் இருக்கின்றார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 13:20

Nisha wrote:

நிச்சயமான உண்மை நட்புகள் மட்டும் தான் வாழ்வில் அனைத்திலும் கூடவருகிறது உறவுகள் ஒரு படிக்கு மேல் எம்மை மறந்து எம்மை தூரமாக நோக்கிறது (துணையைத் தவிர)

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 21 Apr 2014 - 13:32

துணையின் புரிதலோடு தொடரும் நட்பூக்கள் தோற்பதில்லை என்பது என் அனுபவம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:34

துணைகள் என்றும் வெற்றிக்கனிகள்..
கவலைகள் சூழும்போது நம் 
கைகள் பற்றும் உயிர்கள்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 13:37

Nisha wrote:துணையின் புரிதலோடு தொடரும் நட்பூக்கள் தோற்பதில்லை என்பது என் அனுபவம்.

கண்டிப்பாக.... கொண்டவன் துணை இருந்தால் கூரை மேலே ஏறிக் கூவலாம்னு சொல்வாங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:38

பானுஷபானா wrote:
Nisha wrote:துணையின் புரிதலோடு தொடரும் நட்பூக்கள் தோற்பதில்லை என்பது என் அனுபவம்.

கண்டிப்பாக.... கொண்டவன் துணை இருந்தால் கூரை மேலே ஏறிக் கூவலாம்னு சொல்வாங்க.
அக்காவின் நக்கல்...தூக்கல்.. :}
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 22 Apr 2014 - 11:10

அச்சலா wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:துணையின் புரிதலோடு தொடரும் நட்பூக்கள் தோற்பதில்லை என்பது என் அனுபவம்.

கண்டிப்பாக.... கொண்டவன் துணை இருந்தால் கூரை மேலே ஏறிக் கூவலாம்னு சொல்வாங்க.
அக்காவின் நக்கல்...தூக்கல்.. :}

பானுவின்  வார்த்தையில் என்ன நக்கலை கண்டீர்கள் அச்சலா!  வார்த்தைகளில் கவனம் தேவை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Tue 22 Apr 2014 - 11:22

Nisha wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:துணையின் புரிதலோடு தொடரும் நட்பூக்கள் தோற்பதில்லை என்பது என் அனுபவம்.

கண்டிப்பாக.... கொண்டவன் துணை இருந்தால் கூரை மேலே ஏறிக் கூவலாம்னு சொல்வாங்க.
அக்காவின் நக்கல்...தூக்கல்.. :}

பானுவின்  வார்த்தையில் என்ன நக்கலை கண்டீர்கள் அச்சலா!  வார்த்தைகளில் கவனம் தேவை!

அதானே நானும் கவனிக்கல. ஊரில் பெரியவர்கள் கணவன் மனைவி பிரச்சனை வந்தால் இதை எடுத்துகாட்டாக சொல்வார்கள். அதைத் தான் சொன்னேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 22 Apr 2014 - 11:32

நீங்க சரியாகததான்  சொன்னீர்கள் பானு! அவரவர் ஆழ்மன எண்ணங்கள்  பல நேரம் இப்படித்தான் வெளிப்படும்!  நாம் அதை உணர்ந்து  கவனமாய் இருக்கணும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 11:43

Nisha wrote:துணையின் புரிதலோடு தொடரும் நட்பூக்கள் தோற்பதில்லை என்பது என் அனுபவம்.
நிச்சயமான உண்மை 
ஆனால் துணையின் புரிதல் என்பதுதான் சிலநேரங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது 
நாம் நட்பை தூயதென நிறுவியும் நிராகரிக்கும் துணைகளுமுண்டு 

உங்கள் வாக்கியம் பொருத்தமானது 
துணையின் புரிதலோடு தொடரும் நட்புகள் நிச்சயம் தோற்பதில்லை 
(எனது சில நட்புகளை துணையின் புரிதலைத் தாண்டி தொடர்கிறேன்)

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 22 Apr 2014 - 11:46

நாள் தோறும் தேடுகின்றேன்

தேவதைகள் வாழ்க்கையென்றும்
தேனாக இனிப்பதில்லை.
தினம் தோறும் தொடர்‍ந்து வரும்
கவலைகளும் அழிவதில்லை

விடையறியா தேடுதல்கள்
வலிபோக்கும் மருந்தானதில்லை
சோர்ந்து போன உள்ளமதில்
சுமையென்றும் அகல்வதில்லை.

அனைத்தையும் நேசிக்கிறேன்
அன்பை மட்டும் யாசிக்கிறேன்
வலியில்லத வாழ்வு ஒன்றை
நாள் தோறும் தேடுகின்றேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 11:53

கிடைத்திடுமா என்பது மட்டும் கேள்விக்குறி 
அதிலும் எம் உள்ளத்தோடு சம்பந்தப்படுகிறது வலியையும் சுகமாக்கி வாழப்பழகினால் தேடுவது கிடைத்துவிடும் என்பது என் கருத்து

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Tue 22 Apr 2014 - 12:04

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:துணையின் புரிதலோடு தொடரும் நட்பூக்கள் தோற்பதில்லை என்பது என் அனுபவம்.
நிச்சயமான உண்மை 
ஆனால் துணையின் புரிதல் என்பதுதான் சிலநேரங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது 
நாம் நட்பை தூயதென நிறுவியும் நிராகரிக்கும் துணைகளுமுண்டு 

உங்கள் வாக்கியம் பொருத்தமானது 
துணையின் புரிதலோடு தொடரும் நட்புகள் நிச்சயம் தோற்பதில்லை 
(எனது சில நட்புகளை துணையின் புரிதலைத் தாண்டி தொடர்கிறேன்)

ம் நிஜம் தான்!

புரிய வைப்பதும் புரிதலும் எங்கோ தவறும் போதுதான் எல்லாமே  புரிதலின்றி  போய் விடுகின்றது. என்னளவில்  இது வரை என்னைத்தெளிவாய் என்னவரிடம் புரிய வைத்ததனால்  எனக்கான நட்புக்கள் குறித்த தெளிவும் புரிதலும் எனக்கும் இருப்பதனால் எந்த எதிர்பார்ப்ம் இன்றி ஆண்பெண் வேறுபாடின்றி, இன்பதுன்ப நேரம் இளைப்பாறும் இடமாய் நட்பின் கரம் தொடர்ந்து   செல்கிறது.

ஆனாலும் பெண்கள் இந்த விடயத்தில் தம்கணவரின் பெண் தோழியை  மனமார ஏற்பதில்லைஎன்பதும் நிஜமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Wed 21 May 2014 - 8:55

வார்த்தைகள் மௌனமாய் ஆனதேன் தோழா!

வார்த்தைகள் மௌனமாய்
வாழ்க்கையோ வேகமாய்.
உணர்வுகள் நிறைந்ததாய்
உறக்கத்தை தொலைத்ததேன்!

ஊர்வலம் சென்றிடும் நினைவுகள்
இனியதாய் தோனறிய நாளிலே
பழகிய பாசமும் பகிர்ந்திட்ட நேசமும்
வேசமாய் போனதேன் தோழா!

தூங்கிக்கிடக்கும் வலிதனை
உணர்வுகள் கிழித்துப்போட்டதால்
கண்களில் வழியும் கனவுகள்,
இதயத்தைஅடைப்பதை அறிவாயோ தோழா!

தூங்கும் என் நினைவுகள் தூங்கட்டும்
வலிகளில் வடிந்திடும் குருதியில்
என் உயிர் நிசபதமாய் ஆகட்டும்
உன் மௌனமே வாழ்வினில் ஜெயிக்கட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by jasmin sama Wed 21 May 2014 - 9:14

அருமையான கவிதை நிஷா சகோதரியின் மன வானில் வார்த்தைகள் மவுனமாய் ஆனால்தான் அழகு ...சகோதரிக்கும் வார்த்தைகளுக்கும்

jasmin sama
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by பானுஷபானா Wed 21 May 2014 - 10:32

Nisha wrote: வார்த்தைகள் மௌனமாய் ஆனதேன் தோழா!

வார்த்தைகள் மௌனமாய்
வாழ்க்கையோ வேகமாய்.
உணர்வுகள் நிறைந்ததாய்
உறக்கத்தை தொலைத்ததேன்!

ஊர்வலம் சென்றிடும் நினைவுகள்
இனியதாய் தோனறிய நாளிலே
பழகிய பாசமும் பகிர்ந்திட்ட நேசமும்
வேசமாய் போனதேன் தோழா!    

தூங்கிக்கிடக்கும் வலிதனை
உணர்வுகள் கிழித்துப்போட்டதால்
கண்களில் வழியும் கனவுகள்,
இதயத்தைஅடைப்பதை அறிவாயோ தோழா!

தூங்கும் என் நினைவுகள் தூங்கட்டும்
வலிகளில் வடிந்திடும் குருதியில்
என் உயிர் நிசபதமாய் ஆகட்டும்
உன் மௌனமே வாழ்வினில் ஜெயிக்கட்டும்.

தோழனின் மெளனம் சொல்லொணாத் துயரம் தான்.

மனதில் வலி ஏற்படுத்தும் அருமையான கவி நிஷா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 30 May 2014 - 21:32

நன்றி பானு!

எந்த உறவும் அன்பாய், நட்பாய் உரிமையாய் பழகி விட்டு மௌனமாக காரணம் சொல்லாமல் விலகிசெல்லும் போது வலியை விட இப்படி ஏமாந்து விட்டோமே எனும் உணர்வு தான் ஏற்படணும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென புரிந்தும், தமமி மட்டும் தமக்கென மட்டும் வாழும் சுய நலவாதிகளென மனிதர்களை நன்கறிந்த பின்னும் மீண்டும் மீண்டும் அதே தவறுதல் விடுதல் தவறல்லவா!

இனி வரும் காலத்தில் அன்பையும் நம்பிக்கையைஉம், வாக்குச்சுத்தத்தையும் மியூசியத்தில் போட் தேட வேண்டி வரும்.

என்னள்வில் நானும் சில உறவுகளின் நம்பிக்கைகளை நம்பி இருக்கின்றேன். சிலர் அப்படி இருக்கமாட்டார்கள் என நம்பி இருந்தாலும் அந்த நம்பிக்கை பொய்த்தபின் விலகினால் மீண்டும் அந்த நம்பிக்கையை மீள கொண்டு வருவதில்லை என்பதில் கவனமாகவே இருக்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 30 May 2014 - 22:47

உயிருடலில் இருக்கும் வரை
உணர்விருக்கும்.
உணர்வென்னில் உள்ளவரை
உறவிருக்கும்
உறவில்லையென்றானால்
உணர்வாய் நானில்லை.
உணர்வுடனே  சொல்லிடலாம்
உரிமையாய் கேட்டிடலாம்
உள்ளமது சொன்னபடி
உண்மைதனை மறந்திடலாம்..!

தேவைகள் தேவதைகளாய்
உருப்பெறும் போது
தேடலுடன் நாடுகின்றோம்
பேசாத ஒரு நொடியில்
அசைவற்று போனதென
அன்பு வார்த்தை பல சொல்லி
அச்சமுகம் தோன்றுவதை
நெஞ்சமதில் விதைக்கின்றோம்.
வஞ்சமில்லா அன்புணர்ந்து
விதைப்பதுவே விளைவாகும்.

விளைவதெல்லாம் கனிதரும் தான்
விலைகளில்லா அன்பாயிருந்தால்..!
விலகல் சொல்ல ஆயிரம்
காரணங்கள்  நமக்கிருந்தாலும்..
விளைந்து விட்ட  விதையதிலே
காரணங்கள் வெந்நீராய் தாம் பொழியும்
அறியாது செய்து விட்டோம்
சொல்லித்தப்ப மூவைந்து
வயதும் நமக்கில்லை
பட்ட விதை பட்டதுதான்!

பட்ட மரம்  முளை விடலாம்
பட்டவைகள் மறந்திடுமா?
சொன்ன வார்த்தை தடம்மாறி
தந்த காயம் அழிந்திடுமா?
விதைகளெல்லாம் விளைவதில்லை
என்ற உண்மை புரிந்திடுமா?
இறைவனிடம் சரணடந்தாலும்
வாக்கு தனை மறந்து மனம்  
மாறிட்டதை உணர்ந்திடுமா!
இழந்ததென்ன புரிந்திடுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Fri 30 May 2014 - 23:03

பாசமென்பதும் அதில் வாசம் செய்வதும
அதீத நேசத்தால் மோசமாகுமோ!
என அகந்தையால் நான் இழந்ததும்
உந்தன் பாசத்தால் நீ இழப்பதும்
நாளை என்பதை தூரமாக்குமா!

அஞ்சி வாழ்வதும் கெஞ்சி நிற்பதும்
மிஞ்சிப்போனதால் எஞ்சியதென்ன?
பாசம் என்பது சிந்தை நோக வைத்திட்டால்
பாசத்தின் கட்டு நெஞ்சை இறுக்கிடும்
உண்மை நேசம் புரிந்தால் வாழ்வு இனித்திடும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 7:08

ஏக்கங்கள் வரிகளாகி 
சோகங்கள் ஊற்றாகி 
உருவாகும் வெறுப்புகளுக்கு 
மருந்தாகிறது படைப்புகள் 
மனதளவில் உள்ளவற்றை 
ஒப்புவித்து விடைபெறும் 
அற்புத மருந்தொன்று உங்கள்வசம் 
இங்கும் அப்படியே 
உங்களால் வடித்தவைகளை படிக்கின்ற போதே 
மனதுக்காறுதல் கிடைக்கிறதே பாராட்டுகள்

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Nisha Mon 2 Jun 2014 - 21:19

ஏக்கங்களும், சோகங்களுமாய் எழுதப்பட்டவைகள் நான்கைந்து வருடம் முன்னால் உதித்தவைகள்!

கொஞ்சம் டச்சப் மட்டும் இப்போது செய்தேன். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஹாசிம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் மன வானில்! விடை யறியா தேடலிது - Page 2 Empty Re: என் மன வானில்! விடை யறியா தேடலிது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum