Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளுக்கான பாடல்கள்
3 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
குழந்தைகளுக்கான பாடல்கள்
First topic message reminder :
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
என் பொன்னுகுட்டி
பொன்னுக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
பொழுதுவரும் முன்னே எழுந்திருக்குதாம்!
அம்முக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
அழகு மின்னல் பளிச்சிட பல்துலக்குதாம்!
தங்கக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
தண்ணியிலே குளிப்பதற்குத் தானேபோகுதாம்!
கண்ணுக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
கடவுளிடம் கிருபை வாங்கப் போகுதாம்!
சின்னக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
சிறியதட்டில் சிந்தாமல் உண்ணப்போகுதாம்!
சித்திரக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
சீப்பாலே தலைவாரிக் கொள்ளப் போகுதாம்!
அழகுக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
அருமையான சீருடையை அணியப் போகுதாம்!
முத்துக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
முத்தமொன்று அம்மாவுக்குக் கொடுக்கப் போகுதாம்!
பாப்பாக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
பள்ளிக் கூடத்திற்குப் பறக்கப் போகுதாம்!
பொன்னுக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
பொழுதுவரும் முன்னே எழுந்திருக்குதாம்!
அம்முக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
அழகு மின்னல் பளிச்சிட பல்துலக்குதாம்!
தங்கக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
தண்ணியிலே குளிப்பதற்குத் தானேபோகுதாம்!
கண்ணுக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
கடவுளிடம் கிருபை வாங்கப் போகுதாம்!
சின்னக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
சிறியதட்டில் சிந்தாமல் உண்ணப்போகுதாம்!
சித்திரக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
சீப்பாலே தலைவாரிக் கொள்ளப் போகுதாம்!
அழகுக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
அருமையான சீருடையை அணியப் போகுதாம்!
முத்துக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
முத்தமொன்று அம்மாவுக்குக் கொடுக்கப் போகுதாம்!
பாப்பாக்குட்டி இப்போ என்ன பண்ணுதாம்?
பள்ளிக் கூடத்திற்குப் பறக்கப் போகுதாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தங்கத் தமிழைப் போற்றிடு!
காலையிலே விழித்தெழு
கடவுளையே தொழுதிடு
சாலவும் நீ கற்றிடு
சரியாய்ப் பள்ளி சென்றிடு!
திருக்குறளைக் கற்றிடு
தெளிவு நீ பெற்றிடு
அருளும் நல்ல மொழிகளை
அனைவருக்கும் உரைத்திடு!
பாரதியின் பாடல்களை
படித்து நீயும் தெளிந்திடு
காரசார மாகவே
கருத்து மேடை வழங்கிடு!
கம்பன் தந்த கவிதனை
கவனமாய் நீ படித்திடு
சிம்மக் குரலில் நீயுமே
சீறி எழுந்தே முழங்கிடு!
ஆங்கில மோகம் தணிந்திடு
ஆயின் அதைக் கற்றிடு
தங்கத் தமிழைப் போற்றிடு
தரணி எங்கும் பரப்பிடு!
காலையிலே விழித்தெழு
கடவுளையே தொழுதிடு
சாலவும் நீ கற்றிடு
சரியாய்ப் பள்ளி சென்றிடு!
திருக்குறளைக் கற்றிடு
தெளிவு நீ பெற்றிடு
அருளும் நல்ல மொழிகளை
அனைவருக்கும் உரைத்திடு!
பாரதியின் பாடல்களை
படித்து நீயும் தெளிந்திடு
காரசார மாகவே
கருத்து மேடை வழங்கிடு!
கம்பன் தந்த கவிதனை
கவனமாய் நீ படித்திடு
சிம்மக் குரலில் நீயுமே
சீறி எழுந்தே முழங்கிடு!
ஆங்கில மோகம் தணிந்திடு
ஆயின் அதைக் கற்றிடு
தங்கத் தமிழைப் போற்றிடு
தரணி எங்கும் பரப்பிடு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வாழை மரம்!
வாழை மரமாம் வாழை மரம்
வளமே நல்கும் வாழை மரம்
ஏழைக்கு ஏற்ற வாழை மரம்
இன்பம் நல்கும் வாழை மரம்!
ஏழையின் ஆப்பிள் என்றேதான்
ஏற்றம் பெற்ற வாழை மரம்
தோழர் தோழி அனைவரும்
சொகுசாய் உண்ண உதவுமே!
வள்ளலாக அமைந்தேதான்
வளமை தருமே வாழை மரம்
நல்லோர் தீயோர் பாகுபாடு
நாளும் இல்லா வாழை மரம்!
எல்லா உறுப்பும் பயன்படும்
ஏற்றம் தந்தே மகிழ்ந்திடும்
பொல்லாப் பில்லா சமுதாயம்
புகழை வளர்க்கும் வாழை மரம்!
சத்தம் இன்றி சத்தினைத்
தருமே நல்ல வாழைமரம்
புத்தம் புதிய கன்றுகளை
பூரிப்பாய் அளிக்கும் வாழைமரம்!
வாழையின் எல்லாப் பாகமும்
வஞ்ச மின்றிப் பயன்தரும்
ஏழைகள் வீட்டில் எல்லாமே
இனிதாய்க் காணும் வாழைமரம்
வாழை மரமாம் வாழை மரம்
வளமே நல்கும் வாழை மரம்
ஏழைக்கு ஏற்ற வாழை மரம்
இன்பம் நல்கும் வாழை மரம்!
ஏழையின் ஆப்பிள் என்றேதான்
ஏற்றம் பெற்ற வாழை மரம்
தோழர் தோழி அனைவரும்
சொகுசாய் உண்ண உதவுமே!
வள்ளலாக அமைந்தேதான்
வளமை தருமே வாழை மரம்
நல்லோர் தீயோர் பாகுபாடு
நாளும் இல்லா வாழை மரம்!
எல்லா உறுப்பும் பயன்படும்
ஏற்றம் தந்தே மகிழ்ந்திடும்
பொல்லாப் பில்லா சமுதாயம்
புகழை வளர்க்கும் வாழை மரம்!
சத்தம் இன்றி சத்தினைத்
தருமே நல்ல வாழைமரம்
புத்தம் புதிய கன்றுகளை
பூரிப்பாய் அளிக்கும் வாழைமரம்!
வாழையின் எல்லாப் பாகமும்
வஞ்ச மின்றிப் பயன்தரும்
ஏழைகள் வீட்டில் எல்லாமே
இனிதாய்க் காணும் வாழைமரம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
படகின் கதை!
கரையோரம் படகுகள்
கண்கவர் காட்சிகள்
திரைகடலின் செல்வங்கள்
ஏழைக்கவை தெய்வங்கள்!
நுரை சிந்தும் அலைகளில்
எதிர் கொண்டு பாய்ந்திடும்
வலை வீசும் வேகத்தில்
வந்து விழும் மீன்களாம்!
மீனவர்கள் பயணித்து
மீளுவதும் சோகமாம்
தினந்தினம் கண்ணீரில்
வாழ்வதும் வரலாறாம்!
துடுப்பெனும் துணையோடு
மிடுக்குடன் சென்றிடுமாம்
துடிப்போடு வரும் போது
செல்வத்தைக் கொணருமாம்!
படகுக்கும் பகையுண்டு
பெரும்புயல் பேரலைகள்
நேர்ந்தாலும் துயரமாம்
சேதங்கள் விளையுமாம்!
இருந்தாலும் பலங்கொண்டு
பலகாலம் வாழ்ந்திடும்
படகுகள் கதைபோன்று
அனைவரும் உழைத்திடுவோம்
கரையோரம் படகுகள்
கண்கவர் காட்சிகள்
திரைகடலின் செல்வங்கள்
ஏழைக்கவை தெய்வங்கள்!
நுரை சிந்தும் அலைகளில்
எதிர் கொண்டு பாய்ந்திடும்
வலை வீசும் வேகத்தில்
வந்து விழும் மீன்களாம்!
மீனவர்கள் பயணித்து
மீளுவதும் சோகமாம்
தினந்தினம் கண்ணீரில்
வாழ்வதும் வரலாறாம்!
துடுப்பெனும் துணையோடு
மிடுக்குடன் சென்றிடுமாம்
துடிப்போடு வரும் போது
செல்வத்தைக் கொணருமாம்!
படகுக்கும் பகையுண்டு
பெரும்புயல் பேரலைகள்
நேர்ந்தாலும் துயரமாம்
சேதங்கள் விளையுமாம்!
இருந்தாலும் பலங்கொண்டு
பலகாலம் வாழ்ந்திடும்
படகுகள் கதைபோன்று
அனைவரும் உழைத்திடுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வேண்டும்
அன்புடன் பழகுதல் வேண்டும்
ஆர்வத்துடன் படித்தல் வேண்டும்
இன்பமே முடிவில் வேண்டும்
ஈகையுடன் வாழ்தல் வேண்டும்!
உண்மையே வாக்கில் வேண்டும்
ஊருக்கும் உழைத்தல் வேண்டும்
எண்ணத்தில் உயர்தல் வேண்டும்
ஏற்றம் செயலில் வேண்டும்!
ஐயங்கள் நீங்குதல் வேண்டும்
ஒன்றாய் சேருதல் வேண்டும்
ஓயாது உழைத்தல் வேண்டும்
உண்மையாய் இருத்தல் வேண்டும்!
ஒüவையார் நினைவில் வேண்டும்!
அவர்வழி நடத்தல் வேண்டும்
இவற்றை நினைவில் சூடி
எப்போதும் இருப்போம் நன்று
அன்புடன் பழகுதல் வேண்டும்
ஆர்வத்துடன் படித்தல் வேண்டும்
இன்பமே முடிவில் வேண்டும்
ஈகையுடன் வாழ்தல் வேண்டும்!
உண்மையே வாக்கில் வேண்டும்
ஊருக்கும் உழைத்தல் வேண்டும்
எண்ணத்தில் உயர்தல் வேண்டும்
ஏற்றம் செயலில் வேண்டும்!
ஐயங்கள் நீங்குதல் வேண்டும்
ஒன்றாய் சேருதல் வேண்டும்
ஓயாது உழைத்தல் வேண்டும்
உண்மையாய் இருத்தல் வேண்டும்!
ஒüவையார் நினைவில் வேண்டும்!
அவர்வழி நடத்தல் வேண்டும்
இவற்றை நினைவில் சூடி
எப்போதும் இருப்போம் நன்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பாப்பா பாப்பா
குதிரைகள் ஓடின;
குளம்பொலி கேட்டது!
மந்திகள் தாவின;
மரக்கிளைகள் அசைந்தன!
பறவைகள் பாடின;
காலை புலர்ந்தது!
முகில்கள் கூடின;
மழை பொழிந்தது!
கொடிகள் ஆடின;
தென்றல் வந்தது!
மீன்கள் துள்ளின;
நீர்நிலை அசைந்தது!
பயிர்கள் முற்றின;
கதிர்தலை சாய்ந்தது!
கனிகள் பருத்தன;
கொப்புத் தாழ்ந்தது!
வண்டுகள் பாடின;
ரீங்காரம் கேட்டது!
புற்கள் சிலிர்த்தன;
பனித்துளி உதிர்ந்தது!
அலைகள் தோன்றின;
ஆரவாரம் கேட்டது!
மின்னல் வெட்டின;
இடி முழக்கம் கேட்டது!
கதிர்கள் தேய்ந்தன;
மாலை மறைந்தது!
வெள்ளிகள் முளைத்தன;
வானம் மிளிர்ந்தது!
=========================
குதிரைகள் ஓடின;
குளம்பொலி கேட்டது!
மந்திகள் தாவின;
மரக்கிளைகள் அசைந்தன!
பறவைகள் பாடின;
காலை புலர்ந்தது!
முகில்கள் கூடின;
மழை பொழிந்தது!
கொடிகள் ஆடின;
தென்றல் வந்தது!
மீன்கள் துள்ளின;
நீர்நிலை அசைந்தது!
பயிர்கள் முற்றின;
கதிர்தலை சாய்ந்தது!
கனிகள் பருத்தன;
கொப்புத் தாழ்ந்தது!
வண்டுகள் பாடின;
ரீங்காரம் கேட்டது!
புற்கள் சிலிர்த்தன;
பனித்துளி உதிர்ந்தது!
அலைகள் தோன்றின;
ஆரவாரம் கேட்டது!
மின்னல் வெட்டின;
இடி முழக்கம் கேட்டது!
கதிர்கள் தேய்ந்தன;
மாலை மறைந்தது!
வெள்ளிகள் முளைத்தன;
வானம் மிளிர்ந்தது!
=========================
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பள்ளி செல்ல வாபாப்பா
பள்ளி செல்லவா பாப்பா
பாடம் பயிலவா பாப்பா
துள்ளி மகிழ்ந்தே வா பாப்பா
தோழர்கள் உடனே வா பாப்பா!
கல்வி கருத்தின் ஒளியாகும்
கற்றால் தானே தெளிவாகும்
சொல்லிக் கொடுக்கும் ஆசானைத்
தொடர்ந்து நீயும் நட பாப்பா!
தாமத மின்றிச் சென்றிடுவோம்
தரமான கல்வியைக் கற்றிடுவோம்
நாமத் திற்குப் பின்னாலே
நல்ல பட்டங்கள் ஏற்றிடுவோம்!
கல்வி கடவுச் சீட்டாகும்
கால தேசம் வேறின்றி
செல்லும் இடங்கள் யாவிலுமே
சிறப்பை நல்கும் சிகரமிதே!
எழுதும் தேர்வில் அனைவர்க்கும்
எளிதாய் முதலிடம் தரும் கல்வி
பழுதாய் படித்துப் பாழாவோர்
பயனில் லாத மிருகந்தான்!
ஆற்றல் பலவும் கற்பதற்கே
அடிப்படை யாகும் கல்விதானே
போற்றற்குரிய மேதைகளை
புவிக்கு அளிப்பதும் கல்விதானே!
கல்வி கலங்கரை விளக்காகும்
கணக்கும் மொழியும் இலக்காகும்
பல்கலை கற்ற வல்லார்முன்
பகையும் படையும் அடங்கிடுமே!
அழியாச் செல்வம் கல்வி மட்டும்
ஆயுள் கடந்தும் புகழ் தருமே
செழிப்பை நல்கும் இதனை நாம்
சிறப்பாய்க் கற்று உயர்வோமே!
பள்ளி செல்லவா பாப்பா
பாடம் பயிலவா பாப்பா
துள்ளி மகிழ்ந்தே வா பாப்பா
தோழர்கள் உடனே வா பாப்பா!
கல்வி கருத்தின் ஒளியாகும்
கற்றால் தானே தெளிவாகும்
சொல்லிக் கொடுக்கும் ஆசானைத்
தொடர்ந்து நீயும் நட பாப்பா!
தாமத மின்றிச் சென்றிடுவோம்
தரமான கல்வியைக் கற்றிடுவோம்
நாமத் திற்குப் பின்னாலே
நல்ல பட்டங்கள் ஏற்றிடுவோம்!
கல்வி கடவுச் சீட்டாகும்
கால தேசம் வேறின்றி
செல்லும் இடங்கள் யாவிலுமே
சிறப்பை நல்கும் சிகரமிதே!
எழுதும் தேர்வில் அனைவர்க்கும்
எளிதாய் முதலிடம் தரும் கல்வி
பழுதாய் படித்துப் பாழாவோர்
பயனில் லாத மிருகந்தான்!
ஆற்றல் பலவும் கற்பதற்கே
அடிப்படை யாகும் கல்விதானே
போற்றற்குரிய மேதைகளை
புவிக்கு அளிப்பதும் கல்விதானே!
கல்வி கலங்கரை விளக்காகும்
கணக்கும் மொழியும் இலக்காகும்
பல்கலை கற்ற வல்லார்முன்
பகையும் படையும் அடங்கிடுமே!
அழியாச் செல்வம் கல்வி மட்டும்
ஆயுள் கடந்தும் புகழ் தருமே
செழிப்பை நல்கும் இதனை நாம்
சிறப்பாய்க் கற்று உயர்வோமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நேருமாமா
நேரு மாமா என்பவராம்
நேர்மைக் குணத்தைப் பெற்றவராம்
பாரில் அமைதி நிலவிடவே
பாடு பட்டு வந்தவராம்!
இளஞ் சிவப்பு ரோஜாவை
என்றும் சட்டையில் அணிந்தவராம்
தெளிந்த மனமாய் இருந்தவராம்
தேசம் காக்க வந்தவராம்!
இந்திய நாடே கோவிலாய்
இருக்கும் மக்களே தெய்வமென்று
என்றும் சொன்ன தலைவராம்
இதயக் கோவிலில் வாழ்பவராம்!
அண்ணல் காந்தி நட்புகொண்டு
அகிம்சைப் போரை நடத்தியவராம்
மண்ணின் விடுதலை பெறுவதற்கு
பலமுறை சிறைக்குச் சென்றவராம்!
செல்வம் அனைத்தும் நாட்டிற்கு
சேர்த்து விட்ட வள்ளலாம்
சொல்வாக்கு மிகுதி பெற்றவராம்
செல்வாக்கு மிக்க தலைவராம்!
பிரதமராக மூன்றுமுறை
பெருமை யாக ஆண்டவராம்
சிறுவர் முதலாய் பெரியவரும்
சேர்ந்து வாழ்த்திப் போற்றுவோம்
நேரு மாமா என்பவராம்
நேர்மைக் குணத்தைப் பெற்றவராம்
பாரில் அமைதி நிலவிடவே
பாடு பட்டு வந்தவராம்!
இளஞ் சிவப்பு ரோஜாவை
என்றும் சட்டையில் அணிந்தவராம்
தெளிந்த மனமாய் இருந்தவராம்
தேசம் காக்க வந்தவராம்!
இந்திய நாடே கோவிலாய்
இருக்கும் மக்களே தெய்வமென்று
என்றும் சொன்ன தலைவராம்
இதயக் கோவிலில் வாழ்பவராம்!
அண்ணல் காந்தி நட்புகொண்டு
அகிம்சைப் போரை நடத்தியவராம்
மண்ணின் விடுதலை பெறுவதற்கு
பலமுறை சிறைக்குச் சென்றவராம்!
செல்வம் அனைத்தும் நாட்டிற்கு
சேர்த்து விட்ட வள்ளலாம்
சொல்வாக்கு மிகுதி பெற்றவராம்
செல்வாக்கு மிக்க தலைவராம்!
பிரதமராக மூன்றுமுறை
பெருமை யாக ஆண்டவராம்
சிறுவர் முதலாய் பெரியவரும்
சேர்ந்து வாழ்த்திப் போற்றுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
புண்ணிய பூமி!
புத்தனும் காந்தியும் பிறந்த பூமி!
புண்ணிய தலங்கள் பல நிறைந்த பூமி!
நேருவும் - நேதாஜியும் வாழ்ந்த பூமி!
நேசமும் - நெஞ்சுரமும் படைத்த பூமி!
இமயமும் குமரியுமாய் இணைந்த பூமி!
இதிகாசம், காப்பியங்கள் தந்த பூமி!
இலக்கண இலக்கியங்கள் மலர்ந்த பூமி!
இவ்வையம் போற்றும் நம் அன்னை பூமி!
கங்கையும் - காவிரியும் கரை புரளும் பூமி!
கழனியும் வயல்களும் செழிக்கும் பூமி!
கன்னலும் செந்நெல்லும் விளையும் பூமி!
கண்கொள்ளா காட்சியாய் - பசுமை நிறைந்த பூமி!
ஒற்றுமைப் பயிரை வளர்த்த பூமி!
வேற்றுமைக் களையை வேரறுத்த பூமி!
பன்மையாய் "நாம்'' என இணைந்த பூமி!
ஒருமையாய் "நான்'' என்பதை மறந்த பூமி!
"வந்தே மாதரம்'' மண்ணில் நிலைத்த பூமி!
"வலிமை பாரதம்'' எனப் பெயர் எடுத்த பூமி!
"வல்லரசு நாம்'' என உயர்ந்த பூமி!
"நல்லரசு நாம்'' என நானிலம் போற்றும் வழி!
புத்தனும் காந்தியும் பிறந்த பூமி!
புண்ணிய தலங்கள் பல நிறைந்த பூமி!
நேருவும் - நேதாஜியும் வாழ்ந்த பூமி!
நேசமும் - நெஞ்சுரமும் படைத்த பூமி!
இமயமும் குமரியுமாய் இணைந்த பூமி!
இதிகாசம், காப்பியங்கள் தந்த பூமி!
இலக்கண இலக்கியங்கள் மலர்ந்த பூமி!
இவ்வையம் போற்றும் நம் அன்னை பூமி!
கங்கையும் - காவிரியும் கரை புரளும் பூமி!
கழனியும் வயல்களும் செழிக்கும் பூமி!
கன்னலும் செந்நெல்லும் விளையும் பூமி!
கண்கொள்ளா காட்சியாய் - பசுமை நிறைந்த பூமி!
ஒற்றுமைப் பயிரை வளர்த்த பூமி!
வேற்றுமைக் களையை வேரறுத்த பூமி!
பன்மையாய் "நாம்'' என இணைந்த பூமி!
ஒருமையாய் "நான்'' என்பதை மறந்த பூமி!
"வந்தே மாதரம்'' மண்ணில் நிலைத்த பூமி!
"வலிமை பாரதம்'' எனப் பெயர் எடுத்த பூமி!
"வல்லரசு நாம்'' என உயர்ந்த பூமி!
"நல்லரசு நாம்'' என நானிலம் போற்றும் வழி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பணிவுடன் பழகுங்கள்
சின்ன சின்ன அரும்புகளே
சிரித்து பேசி மகிழுங்களேன்!
அம்மா, அப்பா ஆசிரியர்க்கு,
அடங்கி பணிவுடன் பழகுங்களேன்!
பெரியோர் கூறும் அறிவுரையை,
பொறுப்புடன் கேட்டு நடந்திடுவீர்!
பொறாமை, வஞ்சம், கோபந்தனை,
பொசுக்கி போட்டு வாழ்ந்திடுவீர்!
பொறுமை, அன்பு, அஹிம்சதனை,
புவியில் மிஞ்ச ஏதுண்டு!
புரிந்தே நீவிர் நடந்திடுவீர்!
புதுமை பலவும் செய்திடுவீர்!
சின்ன சின்ன அரும்புகளே
சிரித்து பேசி மகிழுங்களேன்!
அம்மா, அப்பா ஆசிரியர்க்கு,
அடங்கி பணிவுடன் பழகுங்களேன்!
பெரியோர் கூறும் அறிவுரையை,
பொறுப்புடன் கேட்டு நடந்திடுவீர்!
பொறாமை, வஞ்சம், கோபந்தனை,
பொசுக்கி போட்டு வாழ்ந்திடுவீர்!
பொறுமை, அன்பு, அஹிம்சதனை,
புவியில் மிஞ்ச ஏதுண்டு!
புரிந்தே நீவிர் நடந்திடுவீர்!
புதுமை பலவும் செய்திடுவீர்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மாறு வேடப் போட்டி
மாறு வேடப் போட்டி
மாண வர்க்குப் போட்டி
நூறு பேர்முன் நடக்கும்
நுட்ப மான போட்டி
பேச்சை மாற்றி நடிப்பார்
பிறரைப் போலச் சிறார்கள்
கூச்சம் இன்றி நடிப்பார்
கொள்ளைச் சிரிப்பை வெடிப்பார்
தம்பி பெண்போல் நடிப்பான்
தங்கை ஆண்போல் நடிப்பாள்
செம்மை யாக நடித்துச்
சிறந்த பரிசைப் பெறுவார்
பள்ளி மாண வர்க்கு
பயன ளிக்கும் போட்டி
பள்ளி ஆண்டு விழாவில்
பாங்காய் நடக்கும் போட்டி
ஆசை யாகச் சிறார்கள்
அழகாய்க் கலந்து கொள்வார்
ஆசான் பள்ளி முதல்வர்
அப்பா அம்மா புகழ்வார்.
மாறு வேடப் போட்டி
மாண வர்க்குப் போட்டி
நூறு பேர்முன் நடக்கும்
நுட்ப மான போட்டி
பேச்சை மாற்றி நடிப்பார்
பிறரைப் போலச் சிறார்கள்
கூச்சம் இன்றி நடிப்பார்
கொள்ளைச் சிரிப்பை வெடிப்பார்
தம்பி பெண்போல் நடிப்பான்
தங்கை ஆண்போல் நடிப்பாள்
செம்மை யாக நடித்துச்
சிறந்த பரிசைப் பெறுவார்
பள்ளி மாண வர்க்கு
பயன ளிக்கும் போட்டி
பள்ளி ஆண்டு விழாவில்
பாங்காய் நடக்கும் போட்டி
ஆசை யாகச் சிறார்கள்
அழகாய்க் கலந்து கொள்வார்
ஆசான் பள்ளி முதல்வர்
அப்பா அம்மா புகழ்வார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அறிவியல் அற்புதங்கள்!
அணுவைப் பிளந்து உள்ளிருக்கும்
ஆற்றலைக் கண்டதும் அறிவியலே!
கணினி, வானொலி, தொலைக்காட்சிக்
கருவிகள் கண்டதும் அறிவியலே!
வண்ண நிலவில் கால்பதித்து
வலமாய் வந்ததும் அறிவியலே!
சின்னச் சோதனைக் குழாய்க்குள்ளே
சிசுவை வளர்த்ததும் அறிவியலே!
அன்னை தந்தை தொடர்பின்றி
அறிதாய்ப் பிரிதோர் உயிர் செய்யக்
கண்டு பிடித்து நமையெல்லாம்
கலக்கி எடுத்ததும் அறிவியலே!
இன்னும் இதுபோல் உலகினையே
ஏகப்பட்ட அற்புதத்தால்
உன்னைப் போன்றோர் துணையுடனே
உலுக்கப் போவதும் அறிவியலே!
அணுவைப் பிளந்து உள்ளிருக்கும்
ஆற்றலைக் கண்டதும் அறிவியலே!
கணினி, வானொலி, தொலைக்காட்சிக்
கருவிகள் கண்டதும் அறிவியலே!
வண்ண நிலவில் கால்பதித்து
வலமாய் வந்ததும் அறிவியலே!
சின்னச் சோதனைக் குழாய்க்குள்ளே
சிசுவை வளர்த்ததும் அறிவியலே!
அன்னை தந்தை தொடர்பின்றி
அறிதாய்ப் பிரிதோர் உயிர் செய்யக்
கண்டு பிடித்து நமையெல்லாம்
கலக்கி எடுத்ததும் அறிவியலே!
இன்னும் இதுபோல் உலகினையே
ஏகப்பட்ட அற்புதத்தால்
உன்னைப் போன்றோர் துணையுடனே
உலுக்கப் போவதும் அறிவியலே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மழை
மழையாய் மாமா வந்தாரு
மணமாய் மழையைப் பொழிந்தாரு
மண்ணும் மனமும் குளிர்ந்திட
மகிழ்ச்சி யோடு போனாரு!
போன மாசம் போனவரு
போன உடனே திரும்பினாரு
அதிரடி யாகப் பொழிந்தாரு
சாமி யாட்டம் ஆடினாரு!
இடியும் மின்னலும் ஒருபக்கம்
காற்றும் புயலும் மறுபக்கம்
பசியும் பிணியும் ஒருபக்கம்
குளிரும் கூச்சலும் மறுபக்கம்
காடுகள் எல்லாம் ஏரியாச்சு
ரோடுகள் எல்லாம் ஆறாச்சு
வீடுகள் எல்லாம் குளமாச்சு
நாடுதான் மூழ்கிக் கடலாச்சு!
காவிரி வெள்ளம் கரைபுரள
கொள்ளிட வெள்ளம் கரையுடைய
ஏரிகள் நிறைந்து வழிந்திட
ஊர்கள் உடைமைகள் மிதந்தன!
சென்னை போன்ற நகர்களிலே
வெள்ளம் போக வழியின்றி
வீடுகளில் வெள்ளம் புகுந்திட
வீட்டில் வேதனை புகுந்தது!
பள்ளிகள் மூழ்கின பாடமில்லை
சாலைகள் மூழ்கின வழியில்லை
வீடுகள் மூழ்கின உணவில்லை
ஊர்கள் மூழ்கின இடமில்லை!
நீரின்றேல் எதுவும் இல்லை
நீரின்றி இன்றோ எதுவுமில்லை
நீரால் சூழ்ந்த இடங்களில்
கண்ணீரால் கதறும் கூட்டம்!
பஞ்சம் போக்கும் மழைமாமா
பஞ்ச மாக்க வந்தாரோ?
கொஞ்ச நஞ்சப் பொருளையும்
கொண்டு போக வந்தாரோ?
எங்களைத் தண்டிக்கும் இயற்கையே
நாங்கள் செய்த தவறென்ன?
சுனாமி ஆனாய் போதாதோ?
சுற்றிச் சுற்றி வருகின்றாய்!
போதும் மழையே உன்கண்ணீர்
போதும் மழையே உன்சீற்றம்
போதும் நாங்கள் பட்டதுயர்
போய்வா மழையே போய்வா!
மழையாய் மாமா வந்தாரு
மணமாய் மழையைப் பொழிந்தாரு
மண்ணும் மனமும் குளிர்ந்திட
மகிழ்ச்சி யோடு போனாரு!
போன மாசம் போனவரு
போன உடனே திரும்பினாரு
அதிரடி யாகப் பொழிந்தாரு
சாமி யாட்டம் ஆடினாரு!
இடியும் மின்னலும் ஒருபக்கம்
காற்றும் புயலும் மறுபக்கம்
பசியும் பிணியும் ஒருபக்கம்
குளிரும் கூச்சலும் மறுபக்கம்
காடுகள் எல்லாம் ஏரியாச்சு
ரோடுகள் எல்லாம் ஆறாச்சு
வீடுகள் எல்லாம் குளமாச்சு
நாடுதான் மூழ்கிக் கடலாச்சு!
காவிரி வெள்ளம் கரைபுரள
கொள்ளிட வெள்ளம் கரையுடைய
ஏரிகள் நிறைந்து வழிந்திட
ஊர்கள் உடைமைகள் மிதந்தன!
சென்னை போன்ற நகர்களிலே
வெள்ளம் போக வழியின்றி
வீடுகளில் வெள்ளம் புகுந்திட
வீட்டில் வேதனை புகுந்தது!
பள்ளிகள் மூழ்கின பாடமில்லை
சாலைகள் மூழ்கின வழியில்லை
வீடுகள் மூழ்கின உணவில்லை
ஊர்கள் மூழ்கின இடமில்லை!
நீரின்றேல் எதுவும் இல்லை
நீரின்றி இன்றோ எதுவுமில்லை
நீரால் சூழ்ந்த இடங்களில்
கண்ணீரால் கதறும் கூட்டம்!
பஞ்சம் போக்கும் மழைமாமா
பஞ்ச மாக்க வந்தாரோ?
கொஞ்ச நஞ்சப் பொருளையும்
கொண்டு போக வந்தாரோ?
எங்களைத் தண்டிக்கும் இயற்கையே
நாங்கள் செய்த தவறென்ன?
சுனாமி ஆனாய் போதாதோ?
சுற்றிச் சுற்றி வருகின்றாய்!
போதும் மழையே உன்கண்ணீர்
போதும் மழையே உன்சீற்றம்
போதும் நாங்கள் பட்டதுயர்
போய்வா மழையே போய்வா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
எலி
எலி இரண்டு எங்கள் வீட்டில்
குடும்பம் நடத்துது; -அதன்
வலிமையெல்லாம் சொல்லிச் சொல்லி
வாய் வலிக்குது!
பரண்மேலே ஏறி வைத்த
பொருளைத் தள்ளுது; -அது
பரபரப்பாய் வீடு முழுவதும்
பொந்து போடுது!
கட்டுதுணி கோணி எல்லாம்
கடித்துக் குதறுது; -இது
எட்டுபத்துக் குட்டி போட்டு
இனத்தைப் பெருக்குது!
மூடிவைக்கும் உணவை இரவில்
திறந்து தின்னுது; -பார்த்தால்
ஓடி ஓடி வீட்டுக் குள்ளே
ஒளிந்து கொள்ளுது!
பானை சட்டி அடுக்கை எல்லாம்
புழங்கி உடைக்குது; -வரும்
பூனை இந்த எலியைக் கண்டு
மிரண்டு ஓடுது!
விளைந்தவயல் நெல்லை எல்லாம்
திருடிப் போகுது; -இப்போ
வளையில் போட்ட நஞ்சை உண்டு
செத்துக் கிடக்குது!
எலி இரண்டு எங்கள் வீட்டில்
குடும்பம் நடத்துது; -அதன்
வலிமையெல்லாம் சொல்லிச் சொல்லி
வாய் வலிக்குது!
பரண்மேலே ஏறி வைத்த
பொருளைத் தள்ளுது; -அது
பரபரப்பாய் வீடு முழுவதும்
பொந்து போடுது!
கட்டுதுணி கோணி எல்லாம்
கடித்துக் குதறுது; -இது
எட்டுபத்துக் குட்டி போட்டு
இனத்தைப் பெருக்குது!
மூடிவைக்கும் உணவை இரவில்
திறந்து தின்னுது; -பார்த்தால்
ஓடி ஓடி வீட்டுக் குள்ளே
ஒளிந்து கொள்ளுது!
பானை சட்டி அடுக்கை எல்லாம்
புழங்கி உடைக்குது; -வரும்
பூனை இந்த எலியைக் கண்டு
மிரண்டு ஓடுது!
விளைந்தவயல் நெல்லை எல்லாம்
திருடிப் போகுது; -இப்போ
வளையில் போட்ட நஞ்சை உண்டு
செத்துக் கிடக்குது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நாய்க்குட்டி
சின்னச்சின்ன நாய்க்குட்டி
சிங்கார நாய்க்குட்டி
வண்ண வண்ண நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
பொன்னைப் போன்ற வண்ணமும்
பொலிவுமிக்க வதனமும்
மின்னல்போலத் துள்ளிடும்
மேனி கொண்ட நாய்க்குட்டி
காலைக்காலை சுற்றிவந்து
பாலைப்பாலைக் கேட்டிடும்
பாலைத் தட்டில் ஊற்றிவைக்க
வாலையாட்டிக் குடித்திடும்
காலைமாலை வேளையில்
காற்று வாங்கச்சென்றிடும்
காற்றுவாங்கி வந்தபின்னர்
சோற்றைக் கேட்டு நின்றிடும்
நல்லநல்ல நாய்க்குட்டி
நயமுடைய நாய்க்குட்டி
நாக்கை நாக்கை நீட்டிடும்
மூக்கைமூக்கைக் நக்கிடும்
கன்னத்தோடு கன்னம் வைத்துக்
கொஞ்சுமெந்தன் நாய்க்குட்டி
என்னுடைய சித்தப்பா
எனக்குத் தந்த நாய்க்குட்டி
சின்னச்சின்ன நாய்க்குட்டி
சிங்கார நாய்க்குட்டி
வண்ண வண்ண நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
பொன்னைப் போன்ற வண்ணமும்
பொலிவுமிக்க வதனமும்
மின்னல்போலத் துள்ளிடும்
மேனி கொண்ட நாய்க்குட்டி
காலைக்காலை சுற்றிவந்து
பாலைப்பாலைக் கேட்டிடும்
பாலைத் தட்டில் ஊற்றிவைக்க
வாலையாட்டிக் குடித்திடும்
காலைமாலை வேளையில்
காற்று வாங்கச்சென்றிடும்
காற்றுவாங்கி வந்தபின்னர்
சோற்றைக் கேட்டு நின்றிடும்
நல்லநல்ல நாய்க்குட்டி
நயமுடைய நாய்க்குட்டி
நாக்கை நாக்கை நீட்டிடும்
மூக்கைமூக்கைக் நக்கிடும்
கன்னத்தோடு கன்னம் வைத்துக்
கொஞ்சுமெந்தன் நாய்க்குட்டி
என்னுடைய சித்தப்பா
எனக்குத் தந்த நாய்க்குட்டி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
குழந்தை தொழிலை ஒழிப்போம்!
பள்ளி செல்லும் பருவமது; நீ
பணிக்கு அனுப்பும் கொடுமையது.
பெற்றோர்களே கேளுங்கள்; நமது
பிள்ளைகளுக்கு கல்வி கொடுங்கள்
கூடி திரியும் குழந்தையது: நீ
கூவி அழைத்து கல்வி கொடு
குழந்தை தொழிலை ஒழித்துப்பாடு;
சமுதாய நலனில் விழித்துப்பாடு;
சின்னஞ் சிறார்களை பணிக்கனுப்பாதே; அது
சிறியோர் செயலது பணயம் வைக்காதே.
தொழிற்சாலை செல்லும் பிள்ளையை நிறுத்து; உடனே
கல்வி சாலைக்கு திசை திருப்பு.
பூஜ்ஜியம் கண்டு பிடித்தது இந்தியரே; எனவே
பூஜ்ஜியமாக்குவோம் குழந்தை தொழிலாளரை
நாளைய உலகம் மாணவர் கையில்; எனவே
கல்வி கொடுப்போம் அப்துல் கலாம் வழியில்.
பள்ளி செல்லும் பருவமது; நீ
பணிக்கு அனுப்பும் கொடுமையது.
பெற்றோர்களே கேளுங்கள்; நமது
பிள்ளைகளுக்கு கல்வி கொடுங்கள்
கூடி திரியும் குழந்தையது: நீ
கூவி அழைத்து கல்வி கொடு
குழந்தை தொழிலை ஒழித்துப்பாடு;
சமுதாய நலனில் விழித்துப்பாடு;
சின்னஞ் சிறார்களை பணிக்கனுப்பாதே; அது
சிறியோர் செயலது பணயம் வைக்காதே.
தொழிற்சாலை செல்லும் பிள்ளையை நிறுத்து; உடனே
கல்வி சாலைக்கு திசை திருப்பு.
பூஜ்ஜியம் கண்டு பிடித்தது இந்தியரே; எனவே
பூஜ்ஜியமாக்குவோம் குழந்தை தொழிலாளரை
நாளைய உலகம் மாணவர் கையில்; எனவே
கல்வி கொடுப்போம் அப்துல் கலாம் வழியில்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
என் கடமை!
நாயே! நாயே! வந்திடுவாய்
நாமும் ஆடிப் பாடிடலாம்!
என்னை வளர்க்கும் வீட்டைநான்
காக்க வேண்டும் வரமாட்டேன்!
பசுவே! பசுவே! வருவாயா!
பந்துகள் உருட்டி ஆடிடுவோம்!
அருமைப் பாலைத் தரவேண்டும்
அப்பா! நானும் வரமாட்டேன்
காளை மாடே! வருவாயா!
களிப்பில் நாமும் திளைத்திடலாம்!
வண்டியை இழுக்க வேண்டும் நான்
மறந்தே நானும் வரமாட்டேன்!
நிற்கும் கழுதையே நீ வந்தால்
நிம்மதி யாக ஆடிடலாம்!
பொதியைச் சுமந்து செல்லவேண்டும்!
போ! போ! நானும் வரமாட்டேன்!
இவைகள் எல்லாம் கடமைக்கே
இமையாய் மாறி உழைக்கிறதே!
இவைகள் உணர்த்தும் பாடத்தை
இதயம் கற்றால் நல்லதுதான்!
விருப்ப முடனே பள்ளிக்கு
விரைந்தே செல்வது என்கடமை!
அருமைக் கல்வியை நான்கற்று
அகிலந் தன்னை வென்றிடுவேன்!
நாயே! நாயே! வந்திடுவாய்
நாமும் ஆடிப் பாடிடலாம்!
என்னை வளர்க்கும் வீட்டைநான்
காக்க வேண்டும் வரமாட்டேன்!
பசுவே! பசுவே! வருவாயா!
பந்துகள் உருட்டி ஆடிடுவோம்!
அருமைப் பாலைத் தரவேண்டும்
அப்பா! நானும் வரமாட்டேன்
காளை மாடே! வருவாயா!
களிப்பில் நாமும் திளைத்திடலாம்!
வண்டியை இழுக்க வேண்டும் நான்
மறந்தே நானும் வரமாட்டேன்!
நிற்கும் கழுதையே நீ வந்தால்
நிம்மதி யாக ஆடிடலாம்!
பொதியைச் சுமந்து செல்லவேண்டும்!
போ! போ! நானும் வரமாட்டேன்!
இவைகள் எல்லாம் கடமைக்கே
இமையாய் மாறி உழைக்கிறதே!
இவைகள் உணர்த்தும் பாடத்தை
இதயம் கற்றால் நல்லதுதான்!
விருப்ப முடனே பள்ளிக்கு
விரைந்தே செல்வது என்கடமை!
அருமைக் கல்வியை நான்கற்று
அகிலந் தன்னை வென்றிடுவேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
ஆரோக்கிய சைக்கிள்
குட்டி குட்டி சைக்கிளு
திருச் செந்தூரு சைக்கிளு
எட்டி எட்டி மிதித்திட
ஏக வேகம் எடுக்குமே
பட்டி தொட்டி பறக்கலாம்
பாட்டி வீடும் போகலாம்
துட்டு ஏதும் இன்றியே
தூத்துக் குடியும் போகலாம்
பட்டணத் தையும் சுற்றலாம்
பணத்தை மிச்ச படுத்தலாம்
சொட்ட சொட்ட வியர்வையில்
சுகத்தை பெற்று வாழலாம்
அதிக தூரம் சைக்கிளில்
ஆனந்த மாய் செல்லலாம்
தூரத்தி வரும் நோயினை
தூர ஓட்டி மகிழலாம்
குட்டி குட்டி சைக்கிளு
திருச் செந்தூரு சைக்கிளு
எட்டி எட்டி மிதித்திட
ஏக வேகம் எடுக்குமே
பட்டி தொட்டி பறக்கலாம்
பாட்டி வீடும் போகலாம்
துட்டு ஏதும் இன்றியே
தூத்துக் குடியும் போகலாம்
பட்டணத் தையும் சுற்றலாம்
பணத்தை மிச்ச படுத்தலாம்
சொட்ட சொட்ட வியர்வையில்
சுகத்தை பெற்று வாழலாம்
அதிக தூரம் சைக்கிளில்
ஆனந்த மாய் செல்லலாம்
தூரத்தி வரும் நோயினை
தூர ஓட்டி மகிழலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
ஊனமில்லை
ஊனம் என்பது குறையுமல்ல!
உணராதவர் மனம் மனமல்ல!
உடலில் எதுவும் ஊனமில்லை,
ஊனம் - பார்வையில்தான்!
போதிமரமில்லை எனில்
புத்தர் மனம் ஊனம் தான்!
மீதிமரங்கள் இல்லையெனில்
பூவுலகே ஊனம் தான்!
மனவளர்ச்சியில் ஊனமிருந்தால் என்ன?
மனசாட்சியில் ஊனமில்லை!
கண்களில் ஊனமிருந்தால் என்ன?
கற்பனையில் ஊனமில்லை...!
கைகளில் ஊனமிருந்தால் என்ன?
ஈகையில் ஊனமில்லை!
காலில் ஊனமிருந்தால் என்ன?
நடத்தையில் ஊனமில்லை!
செவிகளில் ஊனமிருந்தால் என்ன?
செய்கையில் ஊனமில்லை!
வாயில் ஊனமிருந்தால் என்ன?
புன்னகையில் ஊனமில்லை!
ஊனம் என்பதை மறந்துவிட்டால்
உலக வாழ்வே சொர்க்கமாகும்!
காணும் கண்களில் ஊனம்வந்தால்
காண்கின்ற காட்சியிலே ஊனம் வரும்
ஊனம் என்பது குறையுமல்ல!
உணராதவர் மனம் மனமல்ல!
உடலில் எதுவும் ஊனமில்லை,
ஊனம் - பார்வையில்தான்!
போதிமரமில்லை எனில்
புத்தர் மனம் ஊனம் தான்!
மீதிமரங்கள் இல்லையெனில்
பூவுலகே ஊனம் தான்!
மனவளர்ச்சியில் ஊனமிருந்தால் என்ன?
மனசாட்சியில் ஊனமில்லை!
கண்களில் ஊனமிருந்தால் என்ன?
கற்பனையில் ஊனமில்லை...!
கைகளில் ஊனமிருந்தால் என்ன?
ஈகையில் ஊனமில்லை!
காலில் ஊனமிருந்தால் என்ன?
நடத்தையில் ஊனமில்லை!
செவிகளில் ஊனமிருந்தால் என்ன?
செய்கையில் ஊனமில்லை!
வாயில் ஊனமிருந்தால் என்ன?
புன்னகையில் ஊனமில்லை!
ஊனம் என்பதை மறந்துவிட்டால்
உலக வாழ்வே சொர்க்கமாகும்!
காணும் கண்களில் ஊனம்வந்தால்
காண்கின்ற காட்சியிலே ஊனம் வரும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
உயர்வை எண்ணி..
வீட்டு மனையை வாங்கணும்
வேண்டும் காலியிடம் விடணும்
வீட்டை நடுவில் அமைக்கணும்
வெளிச்சம் காற்று வரவேணும்!
வீட்டுத் தோட்டம் போடணும்
விரும்பும் காய்கள் கீரையெல்லாம்
போட்டு நன்கு வளர்க்கணும்
பக்குவமாகக் காக்கணும்!
கழிவு நீரைப் பாய்ச்சணும்
தேக்க மின்றிச் செய்யணும்
அழகாய்க் கால்வாய் எடுக்கணும்
ஈக்கள் கொசுக்கள் தடுக்கணும்!
கீரை காய்கள் பறிக்கணும்
சுற்றத் தார்க்கும் கொடுக்கணும்
உழைப்பின் பலனை அறியணும்
உயர்வை எண்ணிப் போற்றணும்
வீட்டு மனையை வாங்கணும்
வேண்டும் காலியிடம் விடணும்
வீட்டை நடுவில் அமைக்கணும்
வெளிச்சம் காற்று வரவேணும்!
வீட்டுத் தோட்டம் போடணும்
விரும்பும் காய்கள் கீரையெல்லாம்
போட்டு நன்கு வளர்க்கணும்
பக்குவமாகக் காக்கணும்!
கழிவு நீரைப் பாய்ச்சணும்
தேக்க மின்றிச் செய்யணும்
அழகாய்க் கால்வாய் எடுக்கணும்
ஈக்கள் கொசுக்கள் தடுக்கணும்!
கீரை காய்கள் பறிக்கணும்
சுற்றத் தார்க்கும் கொடுக்கணும்
உழைப்பின் பலனை அறியணும்
உயர்வை எண்ணிப் போற்றணும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அன்பை நாளும்...
அம்மா சொல்லும் வேலைகளை
மகிழ்வுடன் நானும் செய்திடுவேன்!
அப்பா சொல்லும் வேலைகளை
பணிவுடன் நானும் செய்திடுவேன்!
அக்காள் சொல்லும் வேலைகளை
உடனே நானும் செய்திடுவேன்!
பாட்டி சொல்லும் வேலைகளை
பாசமுடன் நானும் செய்திடுவேன்!
தாத்தா சொல்லும் வேலைகளை
ஆசையுடன் நானும் செய்திடுவேன்!
அத்தனை பேரும் என்மீது
அன்பை நாளும் பொழிகின்றார்
அம்மா சொல்லும் வேலைகளை
மகிழ்வுடன் நானும் செய்திடுவேன்!
அப்பா சொல்லும் வேலைகளை
பணிவுடன் நானும் செய்திடுவேன்!
அக்காள் சொல்லும் வேலைகளை
உடனே நானும் செய்திடுவேன்!
பாட்டி சொல்லும் வேலைகளை
பாசமுடன் நானும் செய்திடுவேன்!
தாத்தா சொல்லும் வேலைகளை
ஆசையுடன் நானும் செய்திடுவேன்!
அத்தனை பேரும் என்மீது
அன்பை நாளும் பொழிகின்றார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சாக்கட்டி
கருப்பு நிறப் பலகையில்
வெள்ளை நிறச் சின்னவன்
எழுதும் விந்தைச் சித்திரம்
மனதில் பதியும் அற்புதம்
மெழுகு போலக் கரைகின்றான்
மெல்ல மனதில் மறைகின்றான்!
பள்ளி முதல் கல்லூரி வரை
சாக்குக் கட்டி நிகழ்த்துகின்
சாதனைகள் தாராளம்!
சாக்குக் கட்டி சாதனையால்
சரித்திரங்கள் மாறியதற்கு
சான்றுகளே ஏராளம்!
ஆசானுக்கு அல்வாக் கட்டி
மாணவனுக்கு மந்திரக் குச்சி
மற்றவர்க்கோ சுண்ணாம்புக் கட்டி
மலிவு விலை மாவுக் கட்டி
பள்ளிக் கூடம் அனைத்திலும்
பஞ்சாய்ப் பறக்கும் சாக்குக் கட்டி
கருப்பு நிறப் பலகையில்
வெள்ளை நிறச் சின்னவன்
எழுதும் விந்தைச் சித்திரம்
மனதில் பதியும் அற்புதம்
மெழுகு போலக் கரைகின்றான்
மெல்ல மனதில் மறைகின்றான்!
பள்ளி முதல் கல்லூரி வரை
சாக்குக் கட்டி நிகழ்த்துகின்
சாதனைகள் தாராளம்!
சாக்குக் கட்டி சாதனையால்
சரித்திரங்கள் மாறியதற்கு
சான்றுகளே ஏராளம்!
ஆசானுக்கு அல்வாக் கட்டி
மாணவனுக்கு மந்திரக் குச்சி
மற்றவர்க்கோ சுண்ணாம்புக் கட்டி
மலிவு விலை மாவுக் கட்டி
பள்ளிக் கூடம் அனைத்திலும்
பஞ்சாய்ப் பறக்கும் சாக்குக் கட்டி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
முத்தமிழ்
மூன்று பால்கள் உள்ளது
முத்தமிழின் சொத்து
என்றும் இனிய வழிகளை
எடுத்து நமக்குச் சொல்வது!
இரு வரியில் சின்னதாய்
இருக்கும் மிகவும் எளியதாய்
அருமையென்று உலகமே
அதிசயிக்கும் நூலது!
அதிகாரங்கள் இருப்பினும்
அனைவருக்கும் பிடிக்குமே
புதிய புதிய கருத்துகள்
பயிலப் பயில கிடைக்குமே!
நல்ல வாழ்க்கை வாழவே
நமக்குத் தேவை யானதை
தெள்ளுத் தமிழில் சொல்லிடும்
திகட்டிடாத நண்பனாம்!
உலகுக் கதுவே பொதுமû
உணர்ந்து படிக்கும் ஒருவரை
நலமுடனே வாழவே
வைக்குமந்த திருமறை!
அள்ள அள்ளக் குறைந்திடா
அரிய தந்த நூல் எது?
வள்ளுவர் தாம் எழுதிய
வளமை மிகு திருக்குறள்!
நித்தமொரு குறளென
நேரமொதுக்கி வாசிப்போம்
முத்துப் போன்ற குறளினை
மனக் கிடங்கில் சேமிப்போம்!
மூன்று பால்கள் உள்ளது
முத்தமிழின் சொத்து
என்றும் இனிய வழிகளை
எடுத்து நமக்குச் சொல்வது!
இரு வரியில் சின்னதாய்
இருக்கும் மிகவும் எளியதாய்
அருமையென்று உலகமே
அதிசயிக்கும் நூலது!
அதிகாரங்கள் இருப்பினும்
அனைவருக்கும் பிடிக்குமே
புதிய புதிய கருத்துகள்
பயிலப் பயில கிடைக்குமே!
நல்ல வாழ்க்கை வாழவே
நமக்குத் தேவை யானதை
தெள்ளுத் தமிழில் சொல்லிடும்
திகட்டிடாத நண்பனாம்!
உலகுக் கதுவே பொதுமû
உணர்ந்து படிக்கும் ஒருவரை
நலமுடனே வாழவே
வைக்குமந்த திருமறை!
அள்ள அள்ளக் குறைந்திடா
அரிய தந்த நூல் எது?
வள்ளுவர் தாம் எழுதிய
வளமை மிகு திருக்குறள்!
நித்தமொரு குறளென
நேரமொதுக்கி வாசிப்போம்
முத்துப் போன்ற குறளினை
மனக் கிடங்கில் சேமிப்போம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நல்வழி
பாமா பாமா கதை கேளு - இந்த
தாத்தா சொல்லும் கதை கேளு
தந்தையும் தாயும் கேட்ட கதை - நீ
தரத்தில் உயர சொல்லும் கதை
கோடை வெயிலில் சுற்றாதே - நீ
எழில் மேனியை கெடுக்காதே
படிப்பே உனக்கு சொத்தென்று - நீ
கனிவுடன் பாடத்தை படிபாமா.
கோடை விடுமுறையை பயனுடன் - நீ
கணினி கல்வி படி பாமா
கோடை விடுமுறை முடிந்ததும் - நீ
கல்விக் கூடம் செல் பாமா
கல்விக் கூடம் கோவிலம்மா - நீ
கற்கும் ஆசான் தெய்வமம்மா
வாடி வதங்கி நிற்காமல் - நீ
வனப்பாய் நின்று படி பாமா
புத்தக பையை சுமந்து - நீ
புதுமைகள் பலவும் செய்பாமா
தத்துவ மேதையாய் திகழ - நீ
தரமான கல்வியை படிபாமா
சாதி மத பேதமின்றி - நீ
சமத்துவ நெறியில் படிபாமா
சத்திய வழியில் நித்தமும் - நீ
புத்துணர்வுடன் படி பாமா.
பாமா பாமா கதை கேளு - இந்த
தாத்தா சொல்லும் கதை கேளு
தந்தையும் தாயும் கேட்ட கதை - நீ
தரத்தில் உயர சொல்லும் கதை
கோடை வெயிலில் சுற்றாதே - நீ
எழில் மேனியை கெடுக்காதே
படிப்பே உனக்கு சொத்தென்று - நீ
கனிவுடன் பாடத்தை படிபாமா.
கோடை விடுமுறையை பயனுடன் - நீ
கணினி கல்வி படி பாமா
கோடை விடுமுறை முடிந்ததும் - நீ
கல்விக் கூடம் செல் பாமா
கல்விக் கூடம் கோவிலம்மா - நீ
கற்கும் ஆசான் தெய்வமம்மா
வாடி வதங்கி நிற்காமல் - நீ
வனப்பாய் நின்று படி பாமா
புத்தக பையை சுமந்து - நீ
புதுமைகள் பலவும் செய்பாமா
தத்துவ மேதையாய் திகழ - நீ
தரமான கல்வியை படிபாமா
சாதி மத பேதமின்றி - நீ
சமத்துவ நெறியில் படிபாமா
சத்திய வழியில் நித்தமும் - நீ
புத்துணர்வுடன் படி பாமா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
யானை
பானை வயிறு யானை
பார்த் திடுதே வானை
ஓங்கிப் பிளிறும் சத்தம்
உனது காதை எட்டும்
தூண்கள் போல கால்கள்
துடிப்பாய் இரண்டு கண்கள்
இறக்கை போல காது
இயல்பாய் ரொம்ப சாது
தூணைக் கூட யானை
தும்பிக் கையால் உடைக்கும்
நம்பிக் கைதான் வேண்டும்
நாமும் செய்து காட்ட!
பானை வயிறு யானை
பார்த் திடுதே வானை
ஓங்கிப் பிளிறும் சத்தம்
உனது காதை எட்டும்
தூண்கள் போல கால்கள்
துடிப்பாய் இரண்டு கண்கள்
இறக்கை போல காது
இயல்பாய் ரொம்ப சாது
தூணைக் கூட யானை
தும்பிக் கையால் உடைக்கும்
நம்பிக் கைதான் வேண்டும்
நாமும் செய்து காட்ட!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» குழந்தைகளுக்கான தளம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum