Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளுக்கான பாடல்கள்
3 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
குழந்தைகளுக்கான பாடல்கள்
First topic message reminder :
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அன்பே கடவுள்!
கல்லில் வடிப்பது
கடவுளப்பா! - தம்பி
கல்லே கடவுள் இல்லையப்பா!
கற்பனை வடிவைக் கண்ணெதிரில்
காட்சிப் பொருளாய் உணர்த்துதப்பா!
ஆலயம் செல்வது நன்றப்பா! - தம்பி
அதனினும் நன்று பண்பப்பா!
தூய மனமும்
நற்குணமும்
மாந்தர்தம் மனதில்
கடவுளப்பா!
கல்வியைத் தருபவர்
கடவுளப்பா! - தம்பி
கருணை காட்டுபவர்
கடவுளப்பா!
கண்ணை இமையும்
காப்பதுபோல்
காக்கும் அன்னையும்
பிதாவும் கடவுளப்பா!
கல்லில் வடிப்பது
கடவுளப்பா! - தம்பி
கல்லே கடவுள் இல்லையப்பா!
கற்பனை வடிவைக் கண்ணெதிரில்
காட்சிப் பொருளாய் உணர்த்துதப்பா!
ஆலயம் செல்வது நன்றப்பா! - தம்பி
அதனினும் நன்று பண்பப்பா!
தூய மனமும்
நற்குணமும்
மாந்தர்தம் மனதில்
கடவுளப்பா!
கல்வியைத் தருபவர்
கடவுளப்பா! - தம்பி
கருணை காட்டுபவர்
கடவுளப்பா!
கண்ணை இமையும்
காப்பதுபோல்
காக்கும் அன்னையும்
பிதாவும் கடவுளப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
இனிக்கும் தமிழ்!
தமிழன் என்று சொல்லடா!
தலைமை ஏற்று செல்லடா!
அமிழ்தினும் இனிய மொழியடா!
தமிழ்இன்றி வேறு ஏதடா!
வள்ளுவன் கண்ட மொழியடா!
வெல்பவன் எவனும் இல்லடா!
தெள்ளு தமிழ் மொழியடா!
நல்ல தமிழ் உரையடா!
வாய் வழி வந்த முதல் மொழியடா!
வாழ வழி வகுத்த தமிழ் மொழியடா!
தாய் வழி வந்த மொழியடா!
தாய் போல் நாளும் துதியடா!
செம்மொழியாய் இனிக்கும் மொழியடா!
செந்தமிழாய் மணக்கும் மொழியடா!
பைந்தமிழாய் சிறக்கும் மொழியடா!
வண்டமிழாய் வளரும் மொழியடா!
தமிழால் - நீ - உயர்வு கொள்ளடா!
மகிழ்வால் உலகை வெல்லடா!
"தமிழே'' உயிர்மூச்சாய் கொள்ளடா! நம்
வாழ்வே தமிழுக்குத் தானடா!
தமிழன் என்று சொல்லடா!
தலைமை ஏற்று செல்லடா!
அமிழ்தினும் இனிய மொழியடா!
தமிழ்இன்றி வேறு ஏதடா!
வள்ளுவன் கண்ட மொழியடா!
வெல்பவன் எவனும் இல்லடா!
தெள்ளு தமிழ் மொழியடா!
நல்ல தமிழ் உரையடா!
வாய் வழி வந்த முதல் மொழியடா!
வாழ வழி வகுத்த தமிழ் மொழியடா!
தாய் வழி வந்த மொழியடா!
தாய் போல் நாளும் துதியடா!
செம்மொழியாய் இனிக்கும் மொழியடா!
செந்தமிழாய் மணக்கும் மொழியடா!
பைந்தமிழாய் சிறக்கும் மொழியடா!
வண்டமிழாய் வளரும் மொழியடா!
தமிழால் - நீ - உயர்வு கொள்ளடா!
மகிழ்வால் உலகை வெல்லடா!
"தமிழே'' உயிர்மூச்சாய் கொள்ளடா! நம்
வாழ்வே தமிழுக்குத் தானடா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
துடைப்பம்
துடைப்பக் கட்டை என்று
தூற்று வார்கள் என்னை
துடைப்ப மான என்னைத்
தூரப் போட்டு வைப்பார்.
வீட்டைப் பெருக்கிக் கூட்ட
வீட்டைக் கழுவித் தள்ள
வீட்டில் வெள்ளை யடிக்க
விரும்பு வார்கள் என்னை.
உண்ணும் இலைகள் தைக்க
உதவும் பொருளும் ஆவேன்
சின்ன பல்லும் குத்த
சிறிய துரும்பும் ஆவேன்.
உதவி செய்யும் பிறரை
உயர்வாய்
நினைப்ப தில்லை
இதுவே மனிதர் புத்தி
என்று திருந்து வாரோ?
நானில் லாத வீடு
நானி லத்தில் இல்லை
ஏனோ மனிதர் என்னை
இழிவாய்க் கருது கின்றார்.
இழிந்த பொருளும் என்றே
எதுவும் உண்டோ உலகில்?
இழிந்த மனிதர்க் கன்றோ
இழிந்த குணங்கள்
தோன்றும்?
துடைப்பக் கட்டை என்று
தூற்று வார்கள் என்னை
துடைப்ப மான என்னைத்
தூரப் போட்டு வைப்பார்.
வீட்டைப் பெருக்கிக் கூட்ட
வீட்டைக் கழுவித் தள்ள
வீட்டில் வெள்ளை யடிக்க
விரும்பு வார்கள் என்னை.
உண்ணும் இலைகள் தைக்க
உதவும் பொருளும் ஆவேன்
சின்ன பல்லும் குத்த
சிறிய துரும்பும் ஆவேன்.
உதவி செய்யும் பிறரை
உயர்வாய்
நினைப்ப தில்லை
இதுவே மனிதர் புத்தி
என்று திருந்து வாரோ?
நானில் லாத வீடு
நானி லத்தில் இல்லை
ஏனோ மனிதர் என்னை
இழிவாய்க் கருது கின்றார்.
இழிந்த பொருளும் என்றே
எதுவும் உண்டோ உலகில்?
இழிந்த மனிதர்க் கன்றோ
இழிந்த குணங்கள்
தோன்றும்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வண்ணக் கிளி
பச்சை வண்ணக் கிளி
பாலர் விரும்பும் பைங்கிளி
கொச்சை மொழியே பேசிடும்
கொத்திக் கனிகள் தின்றிடும்
வண்ணக் கழுத்தில் ஆரம்
வனப்பு மிக்க தோற்றம்
அச்சம் இன்றியே கிளைகளில்
ஆடிப் பாடி மகிழ்ந்திடும்
வண்ண நெருப்பு மூக்கு
வளைந்த கூர்மை அலகு
சின்னக் கொட்டையை உடைக்கும்
சிதறும் பருப்பை உண்ணும்
அக்கா வென்றே உவப்புடன்
உறவைச் சொல்லி அழைக்கும்
என்னைக் கவர்ந்த உன்னையே
இருக்க வைத்தேன் கூண்டிலே
இரும்புக் கூட்டைக் கடித்திடும்
இழுத்து நீக்க முயன்றிடும்
பறந்து செல்லத் துடித்திடும்
பாலர் விரும்பும் பைங்கிளி
பச்சை வண்ணக் கிளி
பாலர் விரும்பும் பைங்கிளி
கொச்சை மொழியே பேசிடும்
கொத்திக் கனிகள் தின்றிடும்
வண்ணக் கழுத்தில் ஆரம்
வனப்பு மிக்க தோற்றம்
அச்சம் இன்றியே கிளைகளில்
ஆடிப் பாடி மகிழ்ந்திடும்
வண்ண நெருப்பு மூக்கு
வளைந்த கூர்மை அலகு
சின்னக் கொட்டையை உடைக்கும்
சிதறும் பருப்பை உண்ணும்
அக்கா வென்றே உவப்புடன்
உறவைச் சொல்லி அழைக்கும்
என்னைக் கவர்ந்த உன்னையே
இருக்க வைத்தேன் கூண்டிலே
இரும்புக் கூட்டைக் கடித்திடும்
இழுத்து நீக்க முயன்றிடும்
பறந்து செல்லத் துடித்திடும்
பாலர் விரும்பும் பைங்கிளி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அகிலம் உன்னை வணங்கிடுமே
* காலையில் சீக்கிரம் எழுந்திடுவாய்
காலைக் கடன்களை முடித்திடுவாய்
குளிர்ந்த நீரில் குளித்திடுவாய்
தூய உடைகளை உடுத்திடுவாய்
* பாதையின் ஓரம் நடந்திடுவாய்
பள்ளிக்கூடம் சென்றிடுவாய்
பாடங்களை நன்கு படித்திடுவாய் - நல்ல
பண்புகளைப் பெற்றிடுவாய்
* நல்லவரோடு பழகிடுவாய்
நானிலம் போற்ற வாழ்ந்திடுவாய்
சொல்லில் உண்மை பேசிடுவாய்
சோம்பலை தூர விலக்கிடுவாய்
* ஆசிரியர் சொல்படி நடந்திடுவாய்
அறிவை நீயும் கற்றிடுவாய்
அன்னை தந்தை வணங்கிடுவாய்
அகிலம் உன்னை வணங்கிடுமே!
* காலையில் சீக்கிரம் எழுந்திடுவாய்
காலைக் கடன்களை முடித்திடுவாய்
குளிர்ந்த நீரில் குளித்திடுவாய்
தூய உடைகளை உடுத்திடுவாய்
* பாதையின் ஓரம் நடந்திடுவாய்
பள்ளிக்கூடம் சென்றிடுவாய்
பாடங்களை நன்கு படித்திடுவாய் - நல்ல
பண்புகளைப் பெற்றிடுவாய்
* நல்லவரோடு பழகிடுவாய்
நானிலம் போற்ற வாழ்ந்திடுவாய்
சொல்லில் உண்மை பேசிடுவாய்
சோம்பலை தூர விலக்கிடுவாய்
* ஆசிரியர் சொல்படி நடந்திடுவாய்
அறிவை நீயும் கற்றிடுவாய்
அன்னை தந்தை வணங்கிடுவாய்
அகிலம் உன்னை வணங்கிடுமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பார்த்து மகிழலாம்
பட்டாம் பூச்சி அழகுதான்
பறந்து திரியும் உயரவே!
தத்திக் குதித்து நீந்தியே
தவளை ஆடும் நீரிலே!
குறுகுறு வென்றே பார்த்திடும்
குருவிக் குஞ்சு பொந்திலே!
விறுவிறு வென்றே தாவிடும்
வேலி ஓணான் கொம்பிலே!
அவற்றைப் பார்த்து மகிழலாம்
அடித்து வருத்தக் கூடாதே!
தவறு செய்யும் தோழரும்
திருந்தச் செய்யணும் நீயுமே!
பட்டாம் பூச்சி அழகுதான்
பறந்து திரியும் உயரவே!
தத்திக் குதித்து நீந்தியே
தவளை ஆடும் நீரிலே!
குறுகுறு வென்றே பார்த்திடும்
குருவிக் குஞ்சு பொந்திலே!
விறுவிறு வென்றே தாவிடும்
வேலி ஓணான் கொம்பிலே!
அவற்றைப் பார்த்து மகிழலாம்
அடித்து வருத்தக் கூடாதே!
தவறு செய்யும் தோழரும்
திருந்தச் செய்யணும் நீயுமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சிட்டுக் குருவிகள்
பட்டுப் போன்ற
சின்னச்சிட்டுகள்,
சட்டம் ஒன்றில்
கட்டும் கூடு,
நிலைப்பு இன்றி
நிலத்தில் வீழ;
களைப்பே யறியா
கன்னிச் சிட்டுக்கள்,
விழுந்தக் கீற்றை
விரைந்தே *****,
கலைந்த கூட்டை
கட்டின மீண்டும்.
கொஞ்சிப் பேச
மஞ்சம் வேண்டுமே!
பஞ்சினைக் கொண்டு
குஞ்சம் வைத்தன.
பக்கத்திலிருந்து
பார்த்தன கூட்டை.
வெட்கத்தில் சற்றே
குனிந்தது ஒன்று.
கிட்டும் வாழ்வில்
வெற்றியைச் சேர்க்க,
சிட்டுக் குருவியின்
செயலினைக் காண்பீர்.
பட்டுப் போன்ற
சின்னச்சிட்டுகள்,
சட்டம் ஒன்றில்
கட்டும் கூடு,
நிலைப்பு இன்றி
நிலத்தில் வீழ;
களைப்பே யறியா
கன்னிச் சிட்டுக்கள்,
விழுந்தக் கீற்றை
விரைந்தே *****,
கலைந்த கூட்டை
கட்டின மீண்டும்.
கொஞ்சிப் பேச
மஞ்சம் வேண்டுமே!
பஞ்சினைக் கொண்டு
குஞ்சம் வைத்தன.
பக்கத்திலிருந்து
பார்த்தன கூட்டை.
வெட்கத்தில் சற்றே
குனிந்தது ஒன்று.
கிட்டும் வாழ்வில்
வெற்றியைச் சேர்க்க,
சிட்டுக் குருவியின்
செயலினைக் காண்பீர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
கோழி
கோழி இது கோழிதான்
குஞ்சைக் காக்கும் கோழிதான்
இரையை கொத்தித் தின்னும் கோழிதான்
கொக்கரக்கோ சேவலோடு
சேர்ந்து விட்ட கோழியே
முட்டை நிறைய போடுவாய்
அக்கறையாய் அடை காத்திடுவாய்
கோழி முட்டை தன்னையே பச்சையாக குடிக்கலாம்
ஆம்லெட்டும் போடலாம்
ஆசையாய் தின்னலாம்
அவித்த முட்டை தின்றாலோ
அழியாது சத்தும்தான்!
மண்ணில் உள்ள புழுவை உண்டு
மண்ணை சுத்தம் செய்யும் நீயும்தான்
மாந்தருக்கு நலம் தரும்
கோழி நீ வாழியே
கோழி இது கோழிதான்
குஞ்சைக் காக்கும் கோழிதான்
இரையை கொத்தித் தின்னும் கோழிதான்
கொக்கரக்கோ சேவலோடு
சேர்ந்து விட்ட கோழியே
முட்டை நிறைய போடுவாய்
அக்கறையாய் அடை காத்திடுவாய்
கோழி முட்டை தன்னையே பச்சையாக குடிக்கலாம்
ஆம்லெட்டும் போடலாம்
ஆசையாய் தின்னலாம்
அவித்த முட்டை தின்றாலோ
அழியாது சத்தும்தான்!
மண்ணில் உள்ள புழுவை உண்டு
மண்ணை சுத்தம் செய்யும் நீயும்தான்
மாந்தருக்கு நலம் தரும்
கோழி நீ வாழியே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நாய்க்குட்டி
குட்டி, குட்டி நாய்க்குட்டி
குரைக்கும் நன்றாய் இக்குட்டி.
வீட்டைக் காவல் காப்பதில்,
வீரன் இந்த நாய்க்குட்டி.
வேற்று மனிதரைக் கண்டால்,
விரைந்து அது விரட்டிடும்,
வீட்டு மனிதரைக் கண்டால்,
விரும்பி அருகில் வந்திடும்.
காலை நீட்டிப் படுத்திது,
கண்ணை உருட்டிப்
பார்த்திடும்,
கள்ளர் உள்ளே வந்திடில்,
கடுமை யாகத் தாக்கிடும்.
சோம்பல் இல்லை இதனிடம்,
சோறும், பாலும் உண்டிடும்.
அச்சம் இல்லை இதனிடம்,
அதனின் நன்றி யாரிடம்?
குட்டி, குட்டி நாய்க்குட்டி
குரைக்கும் நன்றாய் இக்குட்டி.
வீட்டைக் காவல் காப்பதில்,
வீரன் இந்த நாய்க்குட்டி.
வேற்று மனிதரைக் கண்டால்,
விரைந்து அது விரட்டிடும்,
வீட்டு மனிதரைக் கண்டால்,
விரும்பி அருகில் வந்திடும்.
காலை நீட்டிப் படுத்திது,
கண்ணை உருட்டிப்
பார்த்திடும்,
கள்ளர் உள்ளே வந்திடில்,
கடுமை யாகத் தாக்கிடும்.
சோம்பல் இல்லை இதனிடம்,
சோறும், பாலும் உண்டிடும்.
அச்சம் இல்லை இதனிடம்,
அதனின் நன்றி யாரிடம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வெற்றியாய்...
செங்கதிராய் சிரித்திடு
ஜெகமெல்லாம் ஜொலித்திடு
மண்ணெங்கும் மலர்ந்திடு
மனமெங்கும் நிறைந்திடு
சின்னப் பூவாய்
செடியிலே பூத்திடு - தம்பி
உண்மைதான் நன்மையென்று
எந்நாளுமதை காத்திடு
முழுநிலவாய் வந்திடு
முழுமையாக நின்றிடு
அழும் கண்ணீர் துடைத்திடு
அகிலம் மகிழ உழைத்திடு
வானமாக விரிந்திடு
வண்ணமாக வளர்ந்திடு
எண்ணமாக எழுந்திரு
திண்ணமாக உயர்ந்திரு
புன்னகையாய் இருந்திடு
பொன்னகையாய் மின்னிடு
வெண்மையாய் உலவிடு
வெற்றியாய் விளைந்திடு.
செங்கதிராய் சிரித்திடு
ஜெகமெல்லாம் ஜொலித்திடு
மண்ணெங்கும் மலர்ந்திடு
மனமெங்கும் நிறைந்திடு
சின்னப் பூவாய்
செடியிலே பூத்திடு - தம்பி
உண்மைதான் நன்மையென்று
எந்நாளுமதை காத்திடு
முழுநிலவாய் வந்திடு
முழுமையாக நின்றிடு
அழும் கண்ணீர் துடைத்திடு
அகிலம் மகிழ உழைத்திடு
வானமாக விரிந்திடு
வண்ணமாக வளர்ந்திடு
எண்ணமாக எழுந்திரு
திண்ணமாக உயர்ந்திரு
புன்னகையாய் இருந்திடு
பொன்னகையாய் மின்னிடு
வெண்மையாய் உலவிடு
வெற்றியாய் விளைந்திடு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பலூன்காரர்
கிர்ரீச்! கிர்ரீச்! சத்தத்தை
அடுத்தத் தெருவில் கேட்டதும்
தூங்கும் குழந்தை எழுந்திடும்!
சத்தம் போட்டே அழுதிடும்!
குச்சி ஒன்றில் விசிறிபோல்
அமைந்த கம்பைத் தோளின்மேல்
தூக்கிக் கொண்டே நடப்பாரு!
தூங்கும் போதே வருவாரு!
வண்ண வண்ண பொம்மைகள்
வரிசை யாக சிரிக்குமே!
ஆப்பிள் போன்ற பலூன்கள்
ஆடி அசைந்து நிற்குமே!
கண்ணில் போடும் கண்ணாடி,
அழகாய்த் தெரியும் பைனாகுலர்,
விதவித மாக செல்போன்கள்
விசில், ஊதி என்றேதான்
வகைவகை யாக வைத்திருப்பார்
எதனை எடுக்க என்றேதான்
குழந்தை சிணுங்கித் திணறுமே!
கூட நிற்கும் அப்பாவோ
கோபங் கொண்டே சீறுவார்!
கேட்டதை வாங்கித் தந்ததுமே
குழந்தை அழகாய் சிரித்திடுமே!
கிர்ரீச்! கிர்ரீச்! சத்தமுடன்
நகர்ந்தே செல்வார் பலூன்காரர்!
கிர்ரீச்! கிர்ரீச்! சத்தத்தை
அடுத்தத் தெருவில் கேட்டதும்
தூங்கும் குழந்தை எழுந்திடும்!
சத்தம் போட்டே அழுதிடும்!
குச்சி ஒன்றில் விசிறிபோல்
அமைந்த கம்பைத் தோளின்மேல்
தூக்கிக் கொண்டே நடப்பாரு!
தூங்கும் போதே வருவாரு!
வண்ண வண்ண பொம்மைகள்
வரிசை யாக சிரிக்குமே!
ஆப்பிள் போன்ற பலூன்கள்
ஆடி அசைந்து நிற்குமே!
கண்ணில் போடும் கண்ணாடி,
அழகாய்த் தெரியும் பைனாகுலர்,
விதவித மாக செல்போன்கள்
விசில், ஊதி என்றேதான்
வகைவகை யாக வைத்திருப்பார்
எதனை எடுக்க என்றேதான்
குழந்தை சிணுங்கித் திணறுமே!
கூட நிற்கும் அப்பாவோ
கோபங் கொண்டே சீறுவார்!
கேட்டதை வாங்கித் தந்ததுமே
குழந்தை அழகாய் சிரித்திடுமே!
கிர்ரீச்! கிர்ரீச்! சத்தமுடன்
நகர்ந்தே செல்வார் பலூன்காரர்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
இயற்கையை காத்திடு!
புலரும் பொழுது உனக்கு- எனவே
புதுமைச்செயலில் விளக்கு
சிலந்தியின் வலை போல் வாழ்வு-அதிலுன்
சிந்தை தவறினால் தாழ்வு
மலர்ந்த பூக்கள் அழகாகும்-காய்ந்து
மடிந்த பூக்களும் விதையாகும்
உலகில் புகழுடன் வாழ்ந்திடு-உண்மை
ஓரிரைத் தத்துவம் சூழ்ந்திடு!
தென்றல் வீசுவது நமக்கு-அதனில்
தீமையை விதைப்பது எதற்கு
அன்புடன் அதை நீ காத்திடு- தூய்மை
அனுதினம் நீயும் சேர்த்திடு
அன்னை போல் அன்பைநினைத்திடு
- பூமியில்
ஐக்கியம் என்பதை இணைத்திடு
தொன்மை பூமியை காப்போம்-துன்பம்
தொடாது அதனை மீட்போம்!
குடிக்கும் நீரோ குறைவுதான்- அதனை
கொள்வோர் உலகில் நிறையத்தான்
அடிப்படை இதனை புரிந்திடு-தண்ணீர்
அசுத்தம் ஆவதை தடுத்திடு
நெடிய வாழ்வை கண்டிட- நமது
நிம்மதி என்றும் வென்றிட
துடிப்புடன் செயலில் இறங்குவோம்-
இரவில் துணிவுடன் அனைவரும் உறங்குவோம்!!
புலரும் பொழுது உனக்கு- எனவே
புதுமைச்செயலில் விளக்கு
சிலந்தியின் வலை போல் வாழ்வு-அதிலுன்
சிந்தை தவறினால் தாழ்வு
மலர்ந்த பூக்கள் அழகாகும்-காய்ந்து
மடிந்த பூக்களும் விதையாகும்
உலகில் புகழுடன் வாழ்ந்திடு-உண்மை
ஓரிரைத் தத்துவம் சூழ்ந்திடு!
தென்றல் வீசுவது நமக்கு-அதனில்
தீமையை விதைப்பது எதற்கு
அன்புடன் அதை நீ காத்திடு- தூய்மை
அனுதினம் நீயும் சேர்த்திடு
அன்னை போல் அன்பைநினைத்திடு
- பூமியில்
ஐக்கியம் என்பதை இணைத்திடு
தொன்மை பூமியை காப்போம்-துன்பம்
தொடாது அதனை மீட்போம்!
குடிக்கும் நீரோ குறைவுதான்- அதனை
கொள்வோர் உலகில் நிறையத்தான்
அடிப்படை இதனை புரிந்திடு-தண்ணீர்
அசுத்தம் ஆவதை தடுத்திடு
நெடிய வாழ்வை கண்டிட- நமது
நிம்மதி என்றும் வென்றிட
துடிப்புடன் செயலில் இறங்குவோம்-
இரவில் துணிவுடன் அனைவரும் உறங்குவோம்!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
கோலிக்குண்டு!
அழிவூட்டி வெடிக்கும் குண்டுக்கும்
`கேடு' என்று பேரு!
விளையாடி அடிக்கும் குண்டை நீ
`கோலி' என்று கூறு!
*கண்ணாடி உருண்டை
வடிவத்தில்
கடைதோறும் விற்கும்!
கொண்டாடி தளிர்கள்
அதை வாங்கி
குதித்தாடி நிற்கும்!
* விரல்களில் பிடித்து
தெறித்து நீ
வீசு கோலிக்குண்டு!
கரங்களில் பலம் வரும்
பயிற்சிக்கு
கண்ணா நீ முந்து!
*பூவே நீ கோலிக்குண்டு
போட்டிகளை நடத்து!
சாவே தரும் வெடிகுண்டுச்
சதி மறையத் துதித்து!
அழிவூட்டி வெடிக்கும் குண்டுக்கும்
`கேடு' என்று பேரு!
விளையாடி அடிக்கும் குண்டை நீ
`கோலி' என்று கூறு!
*கண்ணாடி உருண்டை
வடிவத்தில்
கடைதோறும் விற்கும்!
கொண்டாடி தளிர்கள்
அதை வாங்கி
குதித்தாடி நிற்கும்!
* விரல்களில் பிடித்து
தெறித்து நீ
வீசு கோலிக்குண்டு!
கரங்களில் பலம் வரும்
பயிற்சிக்கு
கண்ணா நீ முந்து!
*பூவே நீ கோலிக்குண்டு
போட்டிகளை நடத்து!
சாவே தரும் வெடிகுண்டுச்
சதி மறையத் துதித்து!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வானொலி
குட்டி குட்டி பாப்பா
சின்ன சின்ன பாப்பா
இதை கொஞ்சம் கேளு
உனக்கு ரொம்ப பிடிக்குமே!
காதை திருகி பாரு
செய்தியை தருமாம் கேளு
மார்க்கோனி தந்த வானொலி
நம்மின் செல்லப்பிள்ளை ஆகுமே!
நல்ல நிகழ்ச்சிகள் பல உண்டு
அதை நீ உன் காதில்
போட்டுக்கொண்டு
நாளும் உன் அறிவை
வளர்த்துக்கொண்டு
உன் புகழை புவியில் நிலை
நிறுத்திக்கொள்வாயே!
செய்திகள் கேட்டு நாட்டு நடப்பையும்
சான்றோர் நற்சொல் கேட்டு நல்வழியையும்
அருள் மொழி கேட்டு தெய்வீக அருளையும்
திரையிசை கேட்டு நீ ஆடி மகிழவும்
உற்ற தோழனாய் உனக்கு வானொலி
நேயர் மடலில் நீயும் கடிதம் தீட்டி
உன் பெயரையும் உன் குடும்பத்தினரின்
நற்பெயரையும்கேட்டு மகிழ்வாயே!
குட்டி குட்டி பாப்பா
சுட்டி சுட்டி பாப்பா
அறிவியலின் அரசனாம் வானொலி
உனக்கு நல்லாசிரியராகுமே!
குட்டி குட்டி பாப்பா
சின்ன சின்ன பாப்பா
இதை கொஞ்சம் கேளு
உனக்கு ரொம்ப பிடிக்குமே!
காதை திருகி பாரு
செய்தியை தருமாம் கேளு
மார்க்கோனி தந்த வானொலி
நம்மின் செல்லப்பிள்ளை ஆகுமே!
நல்ல நிகழ்ச்சிகள் பல உண்டு
அதை நீ உன் காதில்
போட்டுக்கொண்டு
நாளும் உன் அறிவை
வளர்த்துக்கொண்டு
உன் புகழை புவியில் நிலை
நிறுத்திக்கொள்வாயே!
செய்திகள் கேட்டு நாட்டு நடப்பையும்
சான்றோர் நற்சொல் கேட்டு நல்வழியையும்
அருள் மொழி கேட்டு தெய்வீக அருளையும்
திரையிசை கேட்டு நீ ஆடி மகிழவும்
உற்ற தோழனாய் உனக்கு வானொலி
நேயர் மடலில் நீயும் கடிதம் தீட்டி
உன் பெயரையும் உன் குடும்பத்தினரின்
நற்பெயரையும்கேட்டு மகிழ்வாயே!
குட்டி குட்டி பாப்பா
சுட்டி சுட்டி பாப்பா
அறிவியலின் அரசனாம் வானொலி
உனக்கு நல்லாசிரியராகுமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சின்னச் சின்னக் கண்ணிலே
அன்பையே விதைக்கணும்...!
மனித நேயத்தையும்
வளர்க்கணும்...
எதிர்காலத்திலே
எல்லைக்கோடுகளே
இல்லாமல் ஆக்கணும்...!
அறிவியலில் நாம்
வளர்ந்தாலும்...
ஆன்மீகத்தையும்
நாம் மதிக்கணும்...!
அன்பெனும் சக்தியால்...
மதங்களை ஒன்றாக
இணைக்கணும்...!
நூலகங்களுக்கு தினமும்
செல்லணும்...
நூல்கள் நிறைய படிக்கணும்...!
சிந்தனையை நீங்க வளர்த்துக்கிட்டால்
சிறைச்சாலையே இல்லா உலகை படைக்கலாம்...!
பிறர் தீங்கு செய்தாலும்...
மன்னிக்கின்ற குணத்தை நீங்க வளர்க்கணும்
மண்ணில் மகாத்மா மறைந்தாலும்...
நம் மனதில் என்றும் வாழ்வதை போல்
நாமும் வாழ்ந்து காட்டணும்!
அன்பையே விதைக்கணும்...!
மனித நேயத்தையும்
வளர்க்கணும்...
எதிர்காலத்திலே
எல்லைக்கோடுகளே
இல்லாமல் ஆக்கணும்...!
அறிவியலில் நாம்
வளர்ந்தாலும்...
ஆன்மீகத்தையும்
நாம் மதிக்கணும்...!
அன்பெனும் சக்தியால்...
மதங்களை ஒன்றாக
இணைக்கணும்...!
நூலகங்களுக்கு தினமும்
செல்லணும்...
நூல்கள் நிறைய படிக்கணும்...!
சிந்தனையை நீங்க வளர்த்துக்கிட்டால்
சிறைச்சாலையே இல்லா உலகை படைக்கலாம்...!
பிறர் தீங்கு செய்தாலும்...
மன்னிக்கின்ற குணத்தை நீங்க வளர்க்கணும்
மண்ணில் மகாத்மா மறைந்தாலும்...
நம் மனதில் என்றும் வாழ்வதை போல்
நாமும் வாழ்ந்து காட்டணும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சின்னச் சின்னக் கண்ணிலே
அன்பையே விதைக்கணும்...!
மனித நேயத்தையும்
வளர்க்கணும்...
எதிர்காலத்திலே
எல்லைக்கோடுகளே
இல்லாமல் ஆக்கணும்...!
அறிவியலில் நாம்
வளர்ந்தாலும்...
ஆன்மீகத்தையும்
நாம் மதிக்கணும்...!
அன்பெனும் சக்தியால்...
மதங்களை ஒன்றாக
இணைக்கணும்...!
நூலகங்களுக்கு தினமும்
செல்லணும்...
நூல்கள் நிறைய படிக்கணும்...!
சிந்தனையை நீங்க வளர்த்துக்கிட்டால்
சிறைச்சாலையே இல்லா உலகை படைக்கலாம்...!
பிறர் தீங்கு செய்தாலும்...
மன்னிக்கின்ற குணத்தை நீங்க வளர்க்கணும்
மண்ணில் மகாத்மா மறைந்தாலும்...
நம் மனதில் என்றும் வாழ்வதை போல்
நாமும் வாழ்ந்து காட்டணும்!
அன்பையே விதைக்கணும்...!
மனித நேயத்தையும்
வளர்க்கணும்...
எதிர்காலத்திலே
எல்லைக்கோடுகளே
இல்லாமல் ஆக்கணும்...!
அறிவியலில் நாம்
வளர்ந்தாலும்...
ஆன்மீகத்தையும்
நாம் மதிக்கணும்...!
அன்பெனும் சக்தியால்...
மதங்களை ஒன்றாக
இணைக்கணும்...!
நூலகங்களுக்கு தினமும்
செல்லணும்...
நூல்கள் நிறைய படிக்கணும்...!
சிந்தனையை நீங்க வளர்த்துக்கிட்டால்
சிறைச்சாலையே இல்லா உலகை படைக்கலாம்...!
பிறர் தீங்கு செய்தாலும்...
மன்னிக்கின்ற குணத்தை நீங்க வளர்க்கணும்
மண்ணில் மகாத்மா மறைந்தாலும்...
நம் மனதில் என்றும் வாழ்வதை போல்
நாமும் வாழ்ந்து காட்டணும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அம்மா சொல்லை கேள்
அம்மா சொல்கேள் அன்போடு
ஆசான் சொல்கேள் அறிவோடு
சும்மா இருந்தால் புகழ் ஏது?
சோம்பல் நீக்கி நலந்தேடு.
கதிரவன் வருமுன் எழுந்திடு
கருத்துடன் பாடம் படித்திடு
புதுப்புது கலைகள் பயின்றிடு
பொய்மொழி விலக்கி பணிந்திடு
அம்மா சொல்கேள் அன்போடு
ஆசான் சொல்கேள் அறிவோடு
சும்மா இருந்தால் புகழ் ஏது?
சோம்பல் நீக்கி நலந்தேடு.
கதிரவன் வருமுன் எழுந்திடு
கருத்துடன் பாடம் படித்திடு
புதுப்புது கலைகள் பயின்றிடு
பொய்மொழி விலக்கி பணிந்திடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பண்டம் விற்கும் பாட்டி
பள்ளிக் கூடத் தருகில்
பண்டம் விற்கும் பாட்டி
வெள்ளை விபூதி அணிந்து
விளங்கும் எளிய பாட்டி.
நல்ல நல்ல பண்டம்
நயமாய் விற்கும் பாட்டி
எல்லாப் பண்டங்களுமே
இருக்கும் தூய்மையாக
ஈக்கள் மொய்த்த பண்டம்
எதையும் விற்க மாட்டாள்
ஈக்கள் மொய்க்கா வண்ணம்
எல்லாம் மூடி வைப்பாள்
காசு கொடுத்துப் பண்டம்
கனிவாய் வாங்கச் சொல்வாள்
காசில்லாமல் பண்டம்
கடனாய்க் கொடுக்க மாட்டாள்.
சும்மா கேட்கும் பழக்கம்
சும்மா வாங்கும் பழக்கம்
தம்பி தங்கை மாரின்
தப்புப் பழக்கம் என்பாள்.
பள்ளிக் கூடத் தருகில்
பண்டம் விற்கும் பாட்டி
வெள்ளை விபூதி அணிந்து
விளங்கும் எளிய பாட்டி.
நல்ல நல்ல பண்டம்
நயமாய் விற்கும் பாட்டி
எல்லாப் பண்டங்களுமே
இருக்கும் தூய்மையாக
ஈக்கள் மொய்த்த பண்டம்
எதையும் விற்க மாட்டாள்
ஈக்கள் மொய்க்கா வண்ணம்
எல்லாம் மூடி வைப்பாள்
காசு கொடுத்துப் பண்டம்
கனிவாய் வாங்கச் சொல்வாள்
காசில்லாமல் பண்டம்
கடனாய்க் கொடுக்க மாட்டாள்.
சும்மா கேட்கும் பழக்கம்
சும்மா வாங்கும் பழக்கம்
தம்பி தங்கை மாரின்
தப்புப் பழக்கம் என்பாள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மூட்டை பூச்சி
வட்டமான உடலுடைய மூட்டையாரே!
வாயுமக்கு ஊசிதானோ மூட்டையாரே!
திட்டமிட்டு எமதுரத்தம் மூட்டையாரே!
தினமுறிஞ்சிக் குடிக்கிறீரேமூட்டையாரே!
கட்டில் மெத்தை தலையணைகள் மூட்டையாரே!
கதவிடுக்கில் வசிக்கிறீரே மூட்டையாரே!
தொட்டிலே குழந்தை கூட மூட்டையாரே!
தூங்கிடாமல் கடிக்கிறீரே மூட்டையாரே!
முட்டை மூலம் உமதினத்தை மூட்டையாரே!
முழுமூச்சாய் வளர்க்கிறீரே மூட்டையாரே!
நட்டநடுச் சாமத்திலும் மூட்டையாரே!
நரகவேதை கொடுக்கிறீரே மூட்டையாரே!
அட்டை போல உழைத்திடாமல் மூட்டையாரே!
அடுத்தவரை உறிஞ்சுவோரை மூட்டையாரே!
ஒட்டுமொத்தமாகச் சேர்த்து மூட்டையாரே!
உம்முடன் நசுக்க வேண்டும் மூட்டையாரே!
வட்டமான உடலுடைய மூட்டையாரே!
வாயுமக்கு ஊசிதானோ மூட்டையாரே!
திட்டமிட்டு எமதுரத்தம் மூட்டையாரே!
தினமுறிஞ்சிக் குடிக்கிறீரேமூட்டையாரே!
கட்டில் மெத்தை தலையணைகள் மூட்டையாரே!
கதவிடுக்கில் வசிக்கிறீரே மூட்டையாரே!
தொட்டிலே குழந்தை கூட மூட்டையாரே!
தூங்கிடாமல் கடிக்கிறீரே மூட்டையாரே!
முட்டை மூலம் உமதினத்தை மூட்டையாரே!
முழுமூச்சாய் வளர்க்கிறீரே மூட்டையாரே!
நட்டநடுச் சாமத்திலும் மூட்டையாரே!
நரகவேதை கொடுக்கிறீரே மூட்டையாரே!
அட்டை போல உழைத்திடாமல் மூட்டையாரே!
அடுத்தவரை உறிஞ்சுவோரை மூட்டையாரே!
ஒட்டுமொத்தமாகச் சேர்த்து மூட்டையாரே!
உம்முடன் நசுக்க வேண்டும் மூட்டையாரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
எங்கள் டீச்சர்
எங்கள் டீச்சர் தமிழரசி
அவரே தமிழின் நாவரசி
அன்பைச் சொல்லும் பண்பரசி
அழகுறக் கற்பிக்கும் கலையரசி!
எளியத் தோற்றம் எம்டீச்சர்
எங்களுக்குப் பிடித்த தங்க டீச்சர்
அம்மா போல அவர் இருப்பார்
அப்பா போல அறிவு சொல்வார்!
மதிக்கும் எட்டும் செய்திகளை
இனிக்க இனிக்கச் சொல்லிடுவார்
தெளிந்த ஓடை நீர் போல
தெளிவாய் இருக்கும் அவர் பேச்சு!
கலைகள் யாவும் அவர் சொல்ல
கருத்தாய் நாங்கள் படித்ததனால்
ஒன்றும் அறியா இருந்த எம்மை
உலகே வியக்க அவர் செய்தார்!
எங்கள் ஊரின் மந்திரியும்
எங்கள் ஊரின் மருத்துவரும்
எங்கள் ஊரின் காவலரும்
அவரிடம் படித்த மாணவராம்!
தாத்தா பாட்டி சொன்னாங்க
தலை நிமிர்ந்தே சொன்னாங்க!
நாடும் அவரைப் போற்றிடுதே!
நாமும் அவரை வணங்கிடுவோம்!!
எங்கள் டீச்சர் தமிழரசி
அவரே தமிழின் நாவரசி
அன்பைச் சொல்லும் பண்பரசி
அழகுறக் கற்பிக்கும் கலையரசி!
எளியத் தோற்றம் எம்டீச்சர்
எங்களுக்குப் பிடித்த தங்க டீச்சர்
அம்மா போல அவர் இருப்பார்
அப்பா போல அறிவு சொல்வார்!
மதிக்கும் எட்டும் செய்திகளை
இனிக்க இனிக்கச் சொல்லிடுவார்
தெளிந்த ஓடை நீர் போல
தெளிவாய் இருக்கும் அவர் பேச்சு!
கலைகள் யாவும் அவர் சொல்ல
கருத்தாய் நாங்கள் படித்ததனால்
ஒன்றும் அறியா இருந்த எம்மை
உலகே வியக்க அவர் செய்தார்!
எங்கள் ஊரின் மந்திரியும்
எங்கள் ஊரின் மருத்துவரும்
எங்கள் ஊரின் காவலரும்
அவரிடம் படித்த மாணவராம்!
தாத்தா பாட்டி சொன்னாங்க
தலை நிமிர்ந்தே சொன்னாங்க!
நாடும் அவரைப் போற்றிடுதே!
நாமும் அவரை வணங்கிடுவோம்!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சொற்பொருள்
மாடென்றால் செல்வ மென்ற
மகிமை தெரியுமா? - பெண்ணே!
மாடுகொம்பால் குத்திச் சாய்க்கும்
மரணம் தெரியுமா?
ஆறென்றால் அடித்துச் செல்லும்
அலையைத் தெரியுமா? -
பெண்ணே!
ஆறெனிலோ வழியைச் சொல்லும்
அதனைத் தெரியுமா?
ஓடு போட்ட வீட்டுக் கூரை
தீப்பிடிக்குமா? - பெண்ணே
ஓடென்றே விரட்டும் போது
நிற்க முடியுமா?
ஆடென்றால் நாட்டி யம்தான்
மாற்ற முடியுமா? - பெண்ணே!
ஆடென்றால் வேலி தாண்டி
மேயும் தெரியுமா?
நாடென்றால் விருப்பம் அந்த
பொருளைத் தெரியுமா? - பெண்ணே!
நாடுதாண்டும் ஏவு கணைத் தீ
அழிவைத் தெரியுமா?
மாடென்றால் செல்வ மென்ற
மகிமை தெரியுமா? - பெண்ணே!
மாடுகொம்பால் குத்திச் சாய்க்கும்
மரணம் தெரியுமா?
ஆறென்றால் அடித்துச் செல்லும்
அலையைத் தெரியுமா? -
பெண்ணே!
ஆறெனிலோ வழியைச் சொல்லும்
அதனைத் தெரியுமா?
ஓடு போட்ட வீட்டுக் கூரை
தீப்பிடிக்குமா? - பெண்ணே
ஓடென்றே விரட்டும் போது
நிற்க முடியுமா?
ஆடென்றால் நாட்டி யம்தான்
மாற்ற முடியுமா? - பெண்ணே!
ஆடென்றால் வேலி தாண்டி
மேயும் தெரியுமா?
நாடென்றால் விருப்பம் அந்த
பொருளைத் தெரியுமா? - பெண்ணே!
நாடுதாண்டும் ஏவு கணைத் தீ
அழிவைத் தெரியுமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பாப்பா...பாப்பா...
தங்கமே பாப்பா.
சிங்கமே பாப்பா.
தரணியில் நீயே.
இமயம் பாப்பா!
பொன்னே பாப்பா,
பூவே பாப்பா.
தரணியில் நீயே.
சிகரம் பாப்பா!
மணியே பாப்பா.
கனியே பாப்பா.
தரணியில் நீயே.
மணியோசை பாப்பா!
நெஞ்சமே பாப்பா.
நேர்மையே பாப்பா.
தரணியில் நீயே.
நிஜமாவாய் பாப்பா!
இசையே பாப்பா.
இனிமையே பாப்பா
தரணியில் நீயே.
நல்நாதம் பாப்பா!
மலரே பாப்பா
தேனே பாப்பா
தரணியில் நீயே
சுவையாவாய் பாப்பா!
வாசமே பாப்பா
நேசமே பாப்பா
தரணியில் நீயே
தேசமாவாய் பாப்பா!
தங்கமே பாப்பா.
சிங்கமே பாப்பா.
தரணியில் நீயே.
இமயம் பாப்பா!
பொன்னே பாப்பா,
பூவே பாப்பா.
தரணியில் நீயே.
சிகரம் பாப்பா!
மணியே பாப்பா.
கனியே பாப்பா.
தரணியில் நீயே.
மணியோசை பாப்பா!
நெஞ்சமே பாப்பா.
நேர்மையே பாப்பா.
தரணியில் நீயே.
நிஜமாவாய் பாப்பா!
இசையே பாப்பா.
இனிமையே பாப்பா
தரணியில் நீயே.
நல்நாதம் பாப்பா!
மலரே பாப்பா
தேனே பாப்பா
தரணியில் நீயே
சுவையாவாய் பாப்பா!
வாசமே பாப்பா
நேசமே பாப்பா
தரணியில் நீயே
தேசமாவாய் பாப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பால் முகங்கள்
பாலென கறக்கும் போது
பார்க்கும் முகம் ஒன்று!
பக்குவமாய்க் காய்ச்சித் தயிர்
ஆக்கும் முகம் இரண்டு!
சீலமுடன் கடையும் மோரில்
சிரிக்கும் முகம் மூன்று!
சிக்கெனவே திரண்டு வெண்ணெய்
சேர்க்கும் முகம் நான்கு!
காலமதில் உருக்கும் நெய்யில்
காட்டும் முகம் ஐந்து!
கவிழுமவை உமது முகம்
கண்ட வுடன் தொய்ந்து!
கோல முகக் குழந்தை களே
கூடி வாழ்தல் நன்று!
கொள்கையுடன் பயனை நல்கும்
குணத்தில் பாலை வென்று!
பாலென கறக்கும் போது
பார்க்கும் முகம் ஒன்று!
பக்குவமாய்க் காய்ச்சித் தயிர்
ஆக்கும் முகம் இரண்டு!
சீலமுடன் கடையும் மோரில்
சிரிக்கும் முகம் மூன்று!
சிக்கெனவே திரண்டு வெண்ணெய்
சேர்க்கும் முகம் நான்கு!
காலமதில் உருக்கும் நெய்யில்
காட்டும் முகம் ஐந்து!
கவிழுமவை உமது முகம்
கண்ட வுடன் தொய்ந்து!
கோல முகக் குழந்தை களே
கூடி வாழ்தல் நன்று!
கொள்கையுடன் பயனை நல்கும்
குணத்தில் பாலை வென்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நிலா
வட்ட வட்ட நிலாவே
வானில் மிதக்கும் நிலாவே
எட்டி நீயும் நிற்பதேன்
ஏக்கமாகப் பார்ப்பதேன்
வளர்ந்து வளர்ந்து குறைவதேன்
மாதத்தின் ஒரு நாள் மறைவதேன்
குட்டி குட்டி விண்மீனுடன்
கூடி விளையாடப் போனாயோ!
கண்டு பிடித்தேன் உன்னையே
காட்டிக் கொடுத்தது பௌர்ணமியே
வாழ்வும் தாழ்வும் நமக்குண்டு
எனக்குச் சொன்ன வான்நிலவே
விண்னை விட்டு இறங்கி வா
என்னுடன் கூட ஆட வா
என்னை விட்டுப் பிரிந்தாலும்
உன்னை நானும் மறப்பேனோ
வட்ட வட்ட நிலாவே
வானில் மிதக்கும் நிலாவே
எட்டி நீயும் நிற்பதேன்
ஏக்கமாகப் பார்ப்பதேன்
வளர்ந்து வளர்ந்து குறைவதேன்
மாதத்தின் ஒரு நாள் மறைவதேன்
குட்டி குட்டி விண்மீனுடன்
கூடி விளையாடப் போனாயோ!
கண்டு பிடித்தேன் உன்னையே
காட்டிக் கொடுத்தது பௌர்ணமியே
வாழ்வும் தாழ்வும் நமக்குண்டு
எனக்குச் சொன்ன வான்நிலவே
விண்னை விட்டு இறங்கி வா
என்னுடன் கூட ஆட வா
என்னை விட்டுப் பிரிந்தாலும்
உன்னை நானும் மறப்பேனோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தீபாவளி
தீபாவளி வருது பார்
தீபம் வீட்டில் சிரிக்கும் பார்
வாழ்க்கை இருட்டின் துயரமெலாம்
பட்டாசு வெடியில் தெரியும் பார்.
நரகாசூரன் அழிந்தானா
நாம எல்லாம் பார்க்கல
நல்லது கெட்டது எதுவுமே
நமக்கு இப்ப தெரியல
தூங்கி எழுந்து குளித்துமே
புது ஆடை உடுத்துவோம்
பாங்குடனே பட்டாசையும்
வெடித்து நாமும் சிரித்திடுவோம்.
ஊது வத்தி கொண்டு வா
ஊசி பட்டாசு வெடிக்கலாம்
உளுந்த வடை சுடுகின்ற
அம்மாவையும் அழைத்து வா
நீட்டு பென்சில் கொளுத்தினால்
பூவாய்ப் பறக்கும் நீளமாய்
கலர் கலராய் பூக்களைக்
கண்டு மனமும் துள்ளுமே
காசு கேட்டு வாங்கியே
கேப் வெடி வாங்கலாம்
பாசத்தோடு நாமுமே
பகிர்ந்து வைத்து வெடிக்கலாம்
தீபாவளிப் பட்டாசில்
தீப ஒளி மறையுதே
வெடித்து நின்னு பார்த்தாக்கா
வீதியெங்கும் வெளிச்சமே.
தீபாவளி வருது பார்
தீபம் வீட்டில் சிரிக்கும் பார்
வாழ்க்கை இருட்டின் துயரமெலாம்
பட்டாசு வெடியில் தெரியும் பார்.
நரகாசூரன் அழிந்தானா
நாம எல்லாம் பார்க்கல
நல்லது கெட்டது எதுவுமே
நமக்கு இப்ப தெரியல
தூங்கி எழுந்து குளித்துமே
புது ஆடை உடுத்துவோம்
பாங்குடனே பட்டாசையும்
வெடித்து நாமும் சிரித்திடுவோம்.
ஊது வத்தி கொண்டு வா
ஊசி பட்டாசு வெடிக்கலாம்
உளுந்த வடை சுடுகின்ற
அம்மாவையும் அழைத்து வா
நீட்டு பென்சில் கொளுத்தினால்
பூவாய்ப் பறக்கும் நீளமாய்
கலர் கலராய் பூக்களைக்
கண்டு மனமும் துள்ளுமே
காசு கேட்டு வாங்கியே
கேப் வெடி வாங்கலாம்
பாசத்தோடு நாமுமே
பகிர்ந்து வைத்து வெடிக்கலாம்
தீபாவளிப் பட்டாசில்
தீப ஒளி மறையுதே
வெடித்து நின்னு பார்த்தாக்கா
வீதியெங்கும் வெளிச்சமே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» குழந்தைகளுக்கான தளம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum