சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Khan11

குழந்தைகளுக்கான பாடல்கள்

3 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 17:56

First topic message reminder :

சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)


காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)


எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:34

படிப்பு நம் சொத்து

ஓரோன் ஒன்று
உன்பேர் சொல்லு!

ஈரோன் இரண்டு
இந்தா கல்கண்டு!

மூவோன் மூன்று
முன்னேறு நன்று!

நாலோன் நான்கு
நல்லபேர் வாங்கு!

ஐயோன் ஐந்து
அடிக்கலாம் பந்து!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:35

காற்று

காற்று எங்கே இருக்குது?

காற்று எங்கும் இருக்குது!

ஆற்றல் உள்ள மரங்களும்

அசையும் போது இருக்குது!


காற்றாடி சுற்றும் போதும்

காற்று அங்கே இருக்குது!

தெற்கில் இருந்து வீசுது

தென்றல் காற்று வீசுது!


வடக்கில் இருந்து வருகுது

வாடைக் காற்று அடிக்குது!

கிழக்கில் இருந்து வீசுது

கொண்டல் காற்று குளிருது!


மேற்கில் இருந்து வீசுது

மேலைக் காற்று எரிக்குது!

சுழன்று தரையில் சுற்றுது

சூறாவளிக் காற்று அது!


கடலில் இருந்து வருகுது

கடுமைப் புயலாம் காற்றது!

காற்று எங்கும் இருக்குது

கண்டு கொள்வாய் நீயுமே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:35

வீட்டுத் தோட்டம்

சின்னச் சின்ன பூச்செடிகள்

வீட்டைச் சுற்றி நட்டிடுவோம்

பூக்கள் அதில் தினம் சிரிக்கும்

பார்க்கும் நம்மனம் உடன் மலரும்!


காய்கறி விதைகளும் தூவிடுவோம்

பாத்திகட்டி நீர் விடுவோம்

பக்குவமாய் அதுபலனைத் தரும்

பகிர்ந்துண்டால் பலத்தைத் தரும்!


கனிவகைச் செடிகளும் நாம் வளர்ப்போம்

நெடிய மரங்களும் தான் வளர்ப்போம்

கனிகள் நமக்கு உணவாகும்

காற்றும் நமக்கு சுகமாகும்!


தூய்மை வீட்டை சூழ்ந்து நிற்கும்

தேங்காமல் தண்ணீர் பலனளிக்கும்

வீடே காட்சிக்கு எழிலாகும்

வீட்டுத் தோட்டம் நாம் அமைப்போம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:36

மழையைப் பற்றி சில வரிகள்

மழையே மழையே வா வா
மாந்தர் மகிழ மழையே வா
உளமது களித்திட ஓடியே வா
உழவர் மகிழ்ந்திட நீயே வா
உண்டி பெருகிட உள்ளம் நிறைந்திட
ஒடி வெள்ளாமய் உலகம் தவிக்கமால்
வேண்டும் போது வேண்டுமாளவு
வேண்டுமிடத்தில் வேண்டிட நீ வா
விளையாடும் சிறுவர்க்கு
இடையூறு இல்லாமல்
மழையே மழையே வா வா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:36

மழையே மழையே போ போ
மக்கு மழையே போ போ
ராஜேஷ் பாப்பா வெள்ளாடணும்
இன்னிக்குப் போய் நாளைக்கு வா
மழையே மழையே போ போ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:36

மழை வருது மழைவருது
நெல் அள்ளுங்கோ
முக்காப்படி அரிசிபோட்டு
முறுக்கு சுடுங்கோ
ஏறி வர மாமனுக்கு
எடுத்து வையுங்கோ
சும்மா இருக்கற மாமனுக்கு
சூடு வையுங்கோ!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:37

குற்றாலம்
======

குற்றாலமாம் குற்றாலம்

குளுகுளுக்கும் குற்றாலம்!

சலசலக்கும் குற்றாலம்

சந்தோசம் தரும் குற்றாலம்!

வகை வகையாய் அருவிகள்

விதவிதமாய் ஓசைகள்!

தகதகவென பாய்ந்துவரும்

தடதடவென்று ஆர்ப்பரிக்கும்!

மனதைத் தொட்டிடும் பேரருவி

இனங்களின் சங்கமாகும் ஐந்தருவி!

புலியாய்ப் பாய்ந்து சீற்றங்காணாத

மெலிவாய் பாயும் புலியருவி!

தேனாய் இனிக்கும் தேனருவி

கண்ணைக் கவரும் செண்பகதேவி அருவி!

காணுவதற்கு அரிய சிற்றருவி

அருவிகள் பலவாய் இருந்தாலும்

அனைத்தும் அள்ளித்தரும் தனிசுகம்!

தருபவர் உள்ளம் உயர்ந்தாற்போல்

தருகின்ற சுகமும் தனிரகம்!

குரங்குகள் தொல்லைக்கோ அளவில்லை

மரங்கள் வகைக்கும் குறைவில்லை!

தரணியே போற்றும் குற்றாலம்

தந்திடும் சுகமோ அளவில்லை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:37

காலண்டர்

வீட்டு சுவற்றின் ஆணியிலே

அழகாய் தொங்கும் காலண்டர்

தினம் தோறும் தேதிகளை

ஞாபகப் படுத்தும் காலண்டர்!


வண்ண வண்ணக் காலண்டர்

வழங்கும் நிகழ்ச்சி ஏராளம்

எண்ணம் இனிக்கும் பண்டிகையும்

எழிலாய் காட்டும் தாராளம்!


நாட்கள் தேதி கிழமையும்

நமக்கு மாதம் காட்டிடும்

காட்டும் தேதியைக் கிழிப்பதால்

கரைந்து மெலிந்து போகுதாம்!


தேசத் தலைவர் படங்களும்

தெய்வ வகை படமுண்டு

ராசிப் பலன்கள் முதற்கொண்டு

பற்பல பலன்களும் அதிலுண்டு!


சட்டைப் பையின் டைரியில்

சிறப்பாய் இருக்கும் காலண்டர்

எட்டா தூரம் போனாலும்

எடுத்துப் பார்க்கத் தூண்டிடும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:38

தம்பியின் கைபேசி

அட்டைப் பெட்டி கைப்பேசியியுடன்

சின்னத் தம்பி நடக்கிறான்

யாரோ தன்னை அழைத்தது போல

பதில்கள் சொல்லிச் சிரிக்கிறான்!


நொடிக்கொரு தடவை காதில் வைத்து

ஏதோ கட்டளை இடுகிறான்

"நோ நோ', "எஸ் எஸ்', "ஓ கே' என்று

சொற்களை அள்ளி வீசுகிறான்!


"அங்கே என்ன மழையா?' என்று

கடலூர் அத்தையைக் கேட்கிறான்

"உடனே கிளம்பி ஊருக்கு வா'வென

பண்ருட்டி ஆயாவை அழைக்கிறான்!


நாயைக் குளிப்பாட்டி துடைத்தக் கதையை

சலிப்பில்லாமல் சொல்கிறான்

நட்டு வைத்த செடிகள் பூத்த

அதிசயம் காண அழைக்கிறான்!


பாடல் கேட்கும் வசதிகள் எல்லாம்

பேசியில் உண்டென அளக்கிறான்

தாளத்துக்குத் தக்க வகையில்

இடுப்பையும் உடலையும் வளைக்கிறான்!


அம்மா அப்பா அண்ணன் அக்கா

யாருக்கும் கொடுக்க மறுக்கிறான்

தம்பியின் பேசி தம்பிக்கே சொந்தம்

தரமாட்டேன் என்று சிரிக்கிறான்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:38

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கும் வழியாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:39

ஒழுக்கமே உயர்வு தரும்!


சின்னப் பாப்பா

என் செல்லப் பாப்பா

ஒழுக்கம் என்பதை

கற்றுக் கொள்

உயர்வு உனக்குண்டு

ஒத்துக்கொள்

உயர்ந்தோரும் பெரியோரும்

ஒழுக்கம் தன்னைப் பேணியதால்

உலகில் ஒப்பற்ற புகழ் பெற்றார்

வேதனைகளும் சோதனைகளும்

விலகி ஓடும்

வெற்றிகளும் விருதுகளும்

வீடு தேடி வரும் ஒழுக்கசீலருக்கு

சின்னப் பாப்பா

என் செல்லப் பாப்பா

அரும்பெரும் ஒழுக்கமதை

ஆடை போல் அணிந்துகொள்

ஆருயிர் போல் காத்துக்கொள்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:39

காற்றடிகாலம்

காற்றடி காலம் வந்தாலே

கஷ்டங்கள் பலவும் வந்திடுமே

ஓட்டு வீடுகளில்

ஓடு சரிந்து விழுந்திடுமே

கீற்றுக் கொட்டகை எல்லாம்

காற்றில் பறந்து சென்றிடுமே

பலமில்லாத மரங்களை எல்லாம்

நிலையில்லாது சாய்த்திடுமே

பாதை ஓரம் நடக்கையிலே

பார்வையில் மண்ணைத் தூவிடுமே

பாரவண்டி இழுப்போரெல்லாம்

சோர்வடைவர் எதிர் காற்றினிலே

என்றாலும் காற்று நன்றாய் வீசுவது

கனமழைக்கு அறிகுறியாமே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:39

பச்சைக்கிளி

பச்சைக் கிளியும் பறக்குது பார்!

பசுமை சிறகை அடிக்குது பார்!

இச்சைப் படியே திரியுது பார்!

இனிய இசை மொழி புரியுது பார்!


மாடி வீட்டை நாடாது

மரக்கிளை பொந்தே வீடாகும்

தேடிக் கனிகள் கொண்டு வரும்

தினமும் அதனை உண்டு வரும்!


சொல்லும் வார்த்தை மாறாமல்

சிறப்பாய் திரும்பிச் சொல்லி விடும்

செல்லும் பாதை எங்கும்

சந்த பாட்டொன்று சிந்தும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:40

மகிழ்ச்சி பொங்க
==========

எண்ணத்தில் உயர்வு வேண்டும்!

எதிலும் மனத் தெளிவு வேண்டும்!

எளியோரிடம் பரிவு வேண்டும்!

வாழ்வை எதிர்கொள்ளும் துணிவு வேண்டும்!


நம்பிக்கையில் உறுதி வேண்டும்!

நடத்தையில் நல்லொழுக்கம் வேண்டும்!

நமக்கு நாமே எனும் எண்ணம் வேண்டும்!

நல்லுறவை நாளும் பேண வேண்டும்!


ஏழ்மையிலும் நேர்மை வேண்டும்!

ஏற்றம் பெற நல்லுழைப்பு வேண்டும்!

ஏடுகள் பல கற்றிட வேண்டும்!

எழுத்தறிவற்றோர்க்கு உதவிட வேண்டும்!


வாய்மையுடன் நல்நட்பு வேண்டும்!

பொய்மையுடன் நாளும் பகைமை வேண்டும்!

தூய்மையான நற்சிந்தனை வேண்டும்!

தாய்மையை நாளும் போற்ற வேண்டும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:40

நாய்க்குட்டி
=========

நாய்க்குட்டி நாய்க்குட்டி

நன்றியுள்ள நாய்க்குட்டி

நாய்க்குட்டி நாய்க்குட்டி

நல்ல அழகு நாய்க்குட்டி!


தோழமை காட்டும் நாய்க்குட்டி

துரோகம் செய்யா நாய்க்குட்டி

காவல் காக்கும் நாய்க்குட்டி

கடமை தவறா நாய்க்குட்டி!


நன்றி என்ற ஒன்றையே

என்றும் காட்டும் நாய்க்குட்டி

போட்ட சோற்றுப் பருக்கைக்காக

பொழுதெல்லாம் காக்கும் நாய்க்குட்டி!


வீட்டைத் தினமும் சுற்றியே

வீரம் காட்டும் நாய்க்குட்டி

மோப்ப சக்தி மூலமே

மோசடி காணும் நாய்க்குட்டி!


விரலை ஆட்டி ஆட்டியே

வாஞ்சை காட்டும் நாய்க்குட்டி

மனிதர் மாறி நின்றாலும்

மனசு மாறா நாய்க்குட்டி!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:41

பள்ளிக்கூடம்
============

பள்ளிக்கு நாங்கள் செல்கின்றோம்

பழகி நட்பாய் வளர்கின்றோம்!


தமிழை நன்கு பயில்கின்றோம்

தனித்துவம் பெற்று திகழ்கின்றோம்!


மொழிகள் பிறவும் கற்கின்றோம்

முதன்மை வெற்றி பெறுகின்றோம்!


கணிதம் எளிதாய்ப் படிக்கின்றோம்

காலம் உணர்ந்து நடக்கின்றோம்!


அறிவியல் ஆழ்ந்து தெளிகின்றோம்

அறிவால் நன்மை அடைகின்றோம்!


சரித்திரம் கற்று தேர்கின்றோம்

சாதனைப் புரிந்து உயர்கின்றோம்!


புவியைப் பற்றி அறிகின்றோம்

புதிதாய் நம்பிக்கை கொள்கின்றோம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:41

ஆகஸ்டு 15
==========

ஆடிப் பறக்குது வண்ணக் கொடி -நன்றாய்

அசைந்து திகழும் மூவண்ணக் கொடி!

தேடி அடைந்த விடுதலைக்காய் செய்த

தியாகத்தைக் காட்டிடும் காவி நிறம்!


தூய்மையும் உண்மையும் கொள்கையெனக் கூறும்

தும்பைப் பூ போன்றது வெண்மை நிறம்!

வாய்மையே வெல்லும் என உரைக்கும் -நம்

வளமையைப் பேணிடும் பச்சை நிறம்!


ஓய்வு இல்லாமலே நாம் உழைக்கத் தூண்டும்

உருண்டோடும் சக்கரம் அசோகச் சின்னம்!

தாய் நாடு விடுதலைப் பெற்ற நன்னாள்! -கொடி

தன்னை வணங்குவோம்! வாழ்த்திடுவோம்!


மாறுபட்ட மூன்று நிறம் எனினும் -சேர்ந்தே

மகிழ்வுடன் ஆடுது நமது கொடி!

வேறுபட்ட மதம் இனம் ஆயிடினும் -ஒன்றாய்

விளங்கிடும் பாரதம் வாழியவே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:42

வெல்க பாரதம்
==============

தேசப்பிதா காந்தி மகான்

புகழைப் பாடுவோம்!

தேசம் காக்க ஒற்றுமையாய்

உறுதி பூணுவோம்!


தேசம் காத்த தலைவர்களை

வணங்கிப் போற்றுவோம்!

தேசீயம் தழைக்க நாளும்

நாம் வழியைக் கோலுவோம்!

மதங்களால் வரும்

மாச்சர்யங்களைத்

தடுத்து நிறுத்துவோம்!


இனங்களால் இந்தியர் நாம் எனும்

ஒருமைப்பாட்டைப் போற்றுவோம்!


சாதி சமய பேதங்களை

வேரோடு சாய்ப்போம்!

சாதிக்கப் பிறந்தோம் எனச்

சூளுரை கொள்வோம்!


தீண்டாமை அரக்கனைத்

தீண்டாது ஒழிப்போம்!

தீது சூது வாது - நம்மைத்

தீண்டாது காப்போம்!

இதயமாய் நாட்டைக் காக்க அரணாய் இருப்போம்!

இரத்த நாளங்களாய் நதிகளை ஒன்றாய் இணைப்போம்!

இந்தியாவின் நிலை உயர ஓயாது உழைப்போம்!

இமாலயச் சாதனைபோல் புகழினைக் குவிப்போம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:42

வெண்ணிலா

வட்டவட்ட வெண்ணிலா

வானில் நீந்தும் வெண்ணிலா

பட்டொளியைப் புவியிலே

பாய்ச்சும் பளிங்கு வெண்ணிலா!


பாதி நாட்கள் வளர்வதாய்

பாதி நாட்கள் தேய்வதாய்

மாதம் ஒருநாள் மறைவதாய்

மாயம் புரியும் வெண்ணிலா!


மேகக் கூட்டம் மோதவும்

மீன்கள் கூட்டம் சூழவும்

போகும் அந்த வெண்ணிலா

போவதெங்கே காலையில்?


பாப்பாவுக்குச் சோறு ஊட்ட

பரிந்து அம்மா அழைக்கிறாள்

எப்போது இறங்கி வருவாயோ?

எனக்கு மட்டும் சொல்லு வெண்ணிலா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:42

எங்க வீட்டுப் பூனை

பூனை... வெள்ளைப் பூனை

மீசை வைச்ச பூனை

ஆசையோடு எலியைத்

தாவிப் பிடிக்கும் பூனை!


பூனை... கறுப்புப் பூனை

கண்கள் மின்னும் பூனை

சன்னல் கம்பி வழியே

உள்ளே நுழையும் பூனை!


பூனை... குட்டிப் பூனை

உலவித் திரியும் பூனை

சட்டிப் பானைக்குள்ளே

தலையை உருட்டும் பூனை!


பூனை... செல்லப் பூனை

செவல வண்ணப் பூனை

சுவரில் எளிதாய் ஏறி

தாவிக் குதிக்கும் பூனை!


பூனை... மியாவ் பூனை

பானை வயிற்றுப் பூனை

பாலைப் பார்த்தால் போதும்

பாய்ஞ்சு வரும் பூனை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:43

தமிழில் முதன்மை பெற
===============

அன்புக் குழந்தை நீ தமிழ் படிக்கணும்; நல்

அழகுத் தமிழை தெள்ளுர கற்கணும்!

தாய்மொழி தமிழ் அடிப்படையாகும்; நம்

தாய்நாடëடின் பண்பாடு காக்கும் செம்மொழியாகும்!

தேனë சுவை தமிழில் மணமிருக்கு; அறிவு

தேடல் மிக அதிக வழியிருக்கு!

தெய்வீக பக்தியை தெரிவூட்டும்; நல்

தெளிவான சக்திக்கு தமிழ் முனைப்பூட்டும்!

தெளிந்தேன்- தேர்ந்தேன் எனëபது பலனாகுமா?

பகர்ந்தேன் பகுத்தறிந்தேனë என்பதாலே பயனாகும்!

புரிந்து கற்றால் பலன் தரும்; காலை

புலர்ந்ததும் படித்தால் மனதில் பதியும்!

எந்த வகுப்பு எந்தப் பள்ளி முக்கியமல்ல

எளிய தமிழ் கற்று பள்ளியில் நீ முதன்மை பெறு!

தூய தமிழ் பேசி நீ பழகணும்; அதனால்

சுபமாய் மலர்ந்து வாழ்க்கை இனிதாகும்!

சிறந்த மாணவனென்று பெயர் பெறு

சீரார்ந்த தமிழ் கற்று பாராட்டுப் பெறு!

மதிப்பெண் நூறு வாங்கி மாண்புறணும்

நூறாண்டாகியும் உனது பெயர் நிற்கணும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:44

கண்ணாமூச்சி..!


சின்ன பாப்பா நீயுமே

சிரித்து விளையாடுவாய்

குட்டித் தம்பி உன்னுடன்

கை குலுக்கி மகிழுவான்!


அன்னம் போல நடந்துமே

ஆசை தீர பேசுவான்

கொஞ்சிக் கொஞ்சி அவனுமே

மனசைக் கொள்ளை கொள்ளுவான்!

மணலில் வீடு கட்டுவான்

பசிக்குச் சோறும் பொங்குவான்

கண்ணாமூச்சி ஆடுவான்

கண்ணில் மண்ணைத் தூவுவான்!


ஆட்டம் போடும் சிறுவனும்

தெருவில் ஓடி மகிழுவான்

ஆடிப் பாடி சிரித்துமே

அன்பை அவனும் வெல்லுவான்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:44

எலிகள்

எங்கிருந்து வந்தன?

எங்கள் வீட்டிற்கு எலிகளும்

தங்க வளைகள் தோண்டின

வீட்டின் தரையைக் கெடுத்தன!


இருட்டு வேளை தன்னிலே

யாவரும் அறியா நேரத்தில்

திருட்டுத் தொழிலே செய்தன

தின்று நன்கு பெருத்தன!


கொடியில் தொங்கும் துணிகளில்

கும்மாளந்தான் போட்டன

கடித்துக் குதறி உடைகளை

கெடுத்துக் கிழித்து எறிந்தன!


உழைத்துக் கொணர்ந்த உணவினை

உண்டு எச்சில் செய்தன

இரவும் பகலும் எப்போதும்

களித்து மகிழ்வு கொண்டன!


சுட்டித் தனங்கள் செய்வதில்

சூரப் புலியாய் ஆயின

உழைப்ப இன்றி உண்டிடும்

எலிகளின் பிழைப்பை கேலி பண்ணுவோம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:44

கிறிஸ்துமஸ் தாத்தா


உலகம் எல்லாம் கிறிஸ்துமஸ் தாத்தா

ஓடித்தேடி வருகிறார்!

உற்சாகமாய் ஆடிப்பாடி

ஒவ்வொரு பரிசு தருகிறார்

நீண்ட அங்கி! தலையில் குல்லா!

நெடியதாடி மீசையும்

நிறையப் பேருக்குக் கொடுக்க மூட்டை

நிறையப் பரிசும் சுமக்கிறார்

தேவதூதன் தாத்தா வந்தால்

சிறுவர் பாடி மகிழ்கிறார்!

இயேசு கிறிஸ்து கிருபை என்றே

தினமும் நெஞ்சம் நெகிழ்கிறார்!

எப்போதும் புன்சிரிப்பு

இனிய வார்த்தை கொண்டவர்

எத்தனையோ பலூன்கள் கையில்

ஏந்திப் பவனி வருகிறார்!

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மாதம்

அவர் வருகை நிச்சயம்!

ஆண்டவரின் தூதர் தாத்தா

அன்பு என்றும் பரிச்சயம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Sat 22 Jan 2011 - 0:45

புத்தாண்டு
==========

இனிது பிறந்தது புத்தாண்டு

இரண்டா யிரத்து எட்டாண்டு

மனது மகிழ்ந்திடும் நல்லாண்டு

மகிமை தவழ்ந்திடும் பல்லாண்டு!


செவ்வாய்க்கிழமை முதல் தேதி

செழித்திடப் பிறப்பதே நற்சேதி

ஒவ்வோர் ஆண்டிலும் ஜனவரியில்

உலகில் தோன்றிடும் புத்தாண்டு!


உலகம் செழித்திட வாழ்த்திடுவோம்

ஒற்றுமை ஓங்கிட வழி வகுப்போம்

கலகம் பசிதுயர் இன்றியே தான்

களிப்புற இறைவனை நாம் துதிப்போம்!


ஒருவருக் கொருவர் நல்வாழ்த்து

உவப்புடன் கூறுவோம் நம் வாழ்த்து

பெருமை நிறைந்த நல்லாண்டு எனப்

பேசிட வைப்போம் நித்தம் நித்தம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 8 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum