சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Khan11

குழந்தைகளுக்கான பாடல்கள்

3 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 17:56

First topic message reminder :

சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)


காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)


எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:28

பேசப்பழகு!
========

பேசப்பழகு! பேசிப்பழகு!

புரிந்து பேசு! புரியும்படி பேசு!

உணர்ந்து பேசு! உரக்க பேசு!

தெளிந்து பேசு! தெளிவாகப் பேசு!

பேசப்பழகு! பேசிப்பழகு!

பார்த்துப் பேசு! பக்குவமாய்ப் பேசு!

அவையறிந்து பேசு! அழகாய்ப் பேசு!

அன்னைமொழி பேசு! ஆங்கிலம் பேசு!

பேசப்பழகு! பேசிப்பழகு!

படித்துப்பேசு! படிக்கப் பேசு!

அறிந்து பேசு! அறிவியல் பேசு!

ஆய்ந்து பேசு! ஆற்றலோடு பேசு!

பேசப்பழகு! பேசிப்பழகு!

முயன்று பேசு! முழுமையாய்ப் பேசு!

நட்பைப் பேசு! நண்பனாகப் பேசு!

நாடிப் பேசு! நாட்டைப் பேசு!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:28

நிலா
===

வட்ட வட்ட நிலா - இது

வானில் மின்னும் நிலா

மஞ்சள் வண்ண நிலா - இது

மனதை அள்ளும் நிலா

இரவில் வரும் நிலா - இது

இதயம் விரும்பும் நிலா

அழகிய தங்க நிலா- இது

அகிலம் புகழும் நிலா

பந்து போன்ற நிலா- இது

பலரும் பார்க்கும் நிலா!

ஒளி வெள்ள நிலா- இது

ஓடி மறையும் நிலா!

அழகு பாப்பா வாவாவா!

அழகு நிலாவை பார்க்கவா!

சின்ன பாப்பா வாவாவா!

சிரிக்கும் நிலாவை பார்க்கவா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:29

முயன்றால் முடியும்!
=============

திராட்சை தொங்கும் தோட்டத்தில்

சிலிர்த்துச் சென்றது குள்ளநரி!

திராட்சைக் கொத்தைக் கண்டதுமே

சிரித்துக் குதித்துத் துள்ளியதே!

ஆசை கொண்ட குள்ளநரி

அதனைப் பிடிக்கத் தாவியதே!

தவ்வித் தவ்விப் பார்த்து விட்டு

தரையில் சோர்ந்து நின்றதுவே!

இந்தப் பழங்கள் புளிக்குமென்று

எண்ணிய நரியோ ஓடியது!

எட்டாக் கனியாய் இருந்தாலும்

எட்டுவதெப்படி சிந்திப்போம்!

முயன்றால் முடியும் தளராதே!

முயற்சியால் தொடலாம் சிகரத்தை!

நரியைப் போல ஓடாதே!

நாளும் தோற்றால் வாடாதே!

தாழ்வு மனதைத் தூக்கியெறி!

தரணியைக் கையில் தூக்கிப்பிடி!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:29

முயல்
====

எம்பியெம்பி பந்து போலத்
துள்ளி ஓடுமாம்; -முயல்
பம்மிபம்மி ஆளைக் கண்டால்
பயந்து ஒதுங்குமாம்!

ஆடுதொடா செடி இலைபோல்
காது இருக்குமாம்; -முயல்
வீடுகளின் புல்வெளியில்
விரைந்து ஓடுமாம்!

அமர்ந்து உண்ணும் அழகினிலே
ஆளை இழுக்குமாம்; -முயல்
தமக்கு முகம் அணில் முகத்தைத்
தழுவி நிற்குமாம்!

கத்திடவே அறிந்திடாமல்
காலம் தள்ளுமாம்; -முயல்
கத்தி யாரும் பார்த்ததில்லை
கண்ட உண்மையாம்!

வெள்ளை, கருப்பு, அரக்குகளில்
வண்ணம் இருக்குமாம்; -முயல்
அள்ளி விரும்பி முள்முருங்கை
இலையைத் தின்னுமாம்!

அழகுக் கண்கள் சிவந்திருக்கும்
கோப மில்லையாம்; -முயல்
பழகும் தம்பி, பாப்பாவுக்கே
அதிகம் சொந்தமாம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:30

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

***

சரித்திரம் இடம் தரும்!
கரும்பு போல இனிக்கும் படிப்பு
இமயம் போல அதுதான் உயர்வு
உயர உயர உயர்ந்திட நினைத்து
ஓதிட நிதமும் நேரம் ஒதுக்கு

விருப்பம் போலப் படிப்பைத் தேர்ந்திடு
விரும்பி படிப்பில் கவனம் செலுத்திடு
ஆசான் சொல்வதை அவசியம் கேட்டிடு
ஆசான் கடவுள் என்று நீ வணங்கிடு

சந்தே கங்களை அன்றாடம் போக்கிடு
தேர்வுகளில் உன் திறமை காட்டிடு
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிடு
நல்ல பற்பல பரிசுகள் வாங்கிடு

பெற்றோர் மகிழ பட்டங்கள் வென்றெடு
பிறந்த நாட்டைக் கண்ணாய் போற்றிடு
கற்றோர் மற்றோர் போற்றிட வாழ்ந்திடு
சரித்திரம் உனக்கு இடம் தரும் நம்பிடு!

***

எல்லாம் அவன் செயல்
அழகான காட்டிலொரு
ஆலமரம் இருந்ததாம்
அனைவருக்கும் நிழல்தந்து
அன்போடு காத்ததாம்
ஒரு நாளில் அந்த வழியே
வழிப் போக்கன் சென்றானாம்
வெய்யில் வெம்மை தாங்காமல்
மரத்தடியில் அமர்ந்தானாம்
பசி வயிற்றை கிள்ளவே
சோற்று மூட்டையை அவிழ்த்தானாம்
கட்டுச் சோறு அமுதமாய்
வயிறு புடைக்க தின்றானாம்
ஆலமரக் காற்றை ரசித்து
அண்ணாந்து பார்த்தானாம்
பவளம் போன்ற பழத்தைக் கண்டு
படைத்தவனை நகைத்தானாம்
பெரிய மரத்தில் சிறிய பழம்
பூசனிக் கொடியில் பெரிய பழம்
கடவுளுக்கு மதியில்லை என
நினைத்தபடி உறங்கினான்
பலத்த காற்று அடித்தது
பழம் நெற்றியில் விழுந்தது
ஆலம் பழம் விழுந்தது போல
பூசணி நெற்றில் விழுந்திருந்தால்
எந்தன் கதி என்னவாகும்
நினைத்து நெஞ்சம் நடுங்கினான்!
எல்லாம் வல்ல இறைவனே
என்னை நீயும் மன்னிப்பாய்
உந்தன் படைப்பின் மேன்மையை
உணர்ந்து விட்டேன் நானுமே
என்று இறையை வணங்கியே
இனிதாய் வழி சென்றான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:31

இளநீர்
====

தென்னை மரத்து இளநீரூ -நல்ல

தேன்போல இனிக்கும் சுவைநீரு

என்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்

ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!


பானத்தில் இளநீர் அரியவகை -எந்த

காலமும் நமக்கு நல்ல துணை

விலையோ ஒன்றும் அதிகமில்லை -இங்கு

இதுபோல் பானம் வேறு இல்லை.


இயற்கை தந்தது இளநீரு -நல்ல

இன்சுவை தந்திடும் இளநீரு

உடலின் வெப்பம் தணித்திடுமே -நம்

உள்ளம் தனிலே நிறைந்திடுமே!


கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே -நம்

அனைவரின் தாகம் தீர்த்திடுமே!

அனைவரும் நாளும் குடித்திடலாம் -வரும்

ஆனந்தம் தனிலே திளைத்திடலாம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:31

விடியல்
=====

காட்டுப் பறவை சிலிர்க்குதாம்!

கறுத்த வானம் வெளுக்குதாம்!

கூட்டுச் சேவல் விழிக்குதாம்!

கொக்க ரக்கோ கூவுதாம்!


காக்கைக் கூட்டம் கரையுதாம்!

காலைப் பொழுது விடியுதாம்!

பாப்பா கண்ணைத் திறக்குதாம்!

பல்லைக் காட்டி சிரிக்குதாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:32

வெற்றி தந்திடுமே!

சொல்லும் செயலும் ஒன்றாகிச்

சோர்வே யின்றி உழைத்திட்டால்

வெல்லும் வழிகள் தானாக

வெற்றி தன்னைத் தந்திடுமே!

உள்ளம் தூய்மை பெற்றிட்டால்

உரைக்கும் வார்த்தை மெய்யாகும்;

அள்ளி அன்பைச் சொரிந்திட்டால்

அண்டா தென்றும் பகை நம்மை!

அறிவோ டன்பும் இணைந்திட்டால்

அல்லல் வாழ்வில் இல்லையென்றும்:

குறிக்கோ ளுடனே வாழ்முறைமை

கொண்டு வாழ்ந்தால் உயர்ந்திடலாம்!

சாதி பேதம் கொள்ளாமல்

சமமாய் வாழப் பழகிட்டால்

மோதி முட்டிச் சண்டையிடும்

முனைப்பே முகிழ்க்கா தெந்நாளும்!

இயற்கை யோடே நாமொன்றி

இயைந்து வாழ முனைந்திட்டால்

பயமோ பதைப்போ நமக்கில்லை;

பாழாய் வாழ்வும் போவதில்லை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:32

வாழ்க்கைப் பாடம்

அன்புத் தம்பி எழும்பிடு

அதிகாலையில் படித்திடு

அம்மாவுக்கு உதவிடு

சுமையைக் கொஞ்சம் குறைத்திடு

படிப்போடு தந்தையுடன்

தொழிற்கல்வி கற்றிடு

தொழிலும் தெய்வமென

மெய்யாக நம்பிடு

சுறுசுறுப்பாய் சென்றிடு

ஆசான் சொல்வதை கற்றிடு

உன்னைப் போல் குழந்தையுடன்

அன்பாகப் பழகிடு

அன்புத் தாத்தா அழைத்தாலும்

ஆசையுடன் சென்றிடு

பாட்டி கூறும் கதைகளை

பணிவுடனே கேட்டிடு

பொறுமையாக இருந்திடு

பொறுப்பதனை அறிந்திடு

வெற்றி மந்திரம் முழங்கிடு

சாதனை நிறைய செய்திடு

படிப்புக் கல்வி போதாது

வாழ்க்கைக் கல்வியும் கற்றிடு

வாழ்க்கைப் பாடம் உணர்ந்திடு

வளமாக வாழ்ந்திடு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:32

பாட்டுக்குப் பாட்டு

கிளியே! கிளியே பறந்து வா!

கிழக்கில் சூரியன் உதிப்பதைப் பார்!

மேகமே! மேகமே கலைந்து வா!

மேற்கில் சூரியன் மறைவதைப்பார்!

தளிர் நிலவே! நிலவே தவழ்ந்து வா!

தமிழ்மொழியின் அழகை தரணிக்குத் தா!

குயிலே! குயிலே கூவிவா!

குறளின் இரண்டடி சிறப்பைப்பார்!

வண்ண மயிலே! மயிலே அகவிவா!

வளமான பாரதத்தின் வனப்பைப் பார்!

காக்கா! காக்கா கரைந்து வா!

காக்கும் ஒற்றுமையைக் கற்றுத் தா!

மலையே! மலையே இங்கே வா!

மனித மனத்தில் உயர்வைத் தா!

அலையே! அலையே அமைதியாய் வா!

அலைபாயும் நெஞ்சுக்கு நிறைவைத்தா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:33

வேண்டும்

நல்லதே எண்ண வேண்டும்

நன்மையே பண்ண வேண்டும்

பொல்லாததை நீக்க வேண்டும்

புதுமைகள் சேர்க்க வேண்டும்

கல்லாமை ஒழிய வேண்டும்

கயமைகள் அழிய வேண்டும்

இல்லாமை அகல வேண்டும்

இனியசொல் புகல வேண்டும்

உண்மையே பேச வேண்டும்

உள்ளொளி வீச வேண்டும்

பெண்மையை போற்ற வேண்டும்

பெரும்புகழ் ஈட்ட வேண்டும்

திண்மையாய் வாழ வேண்டும்

தீமைகள் மாள வேண்டும்

விண்சுடர் கதிரோன் போல

விளங்கிடும் வாழ்க்கை வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:33

கர்மவீரர் காமராஜர்
==============

கல்விக் கண் திறந்த மகான் காமராஜர்!
கடமையிலே கர்ம வீரர் காமராஜர்!
ஏழைப் பங்காளர் என பெயரும் பெற்றார்!
ஏணியாய் ஏற்றம் பெற தானுழைத்தார்!


விருதுநகர் கண்டெடுத்த விற்பன்னரவர்!
விருதுகள் பல பெற்ற அறிஞரவர்! இனப் -
பழுதுகள் பல நீக்கிப் புகழும் பெற்றார்!


உழுதுண்டு வாழ்வோர்க்கும் ஏற்றம் தந்தார்!


எளிமைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவரவர்!
எளியோர்க்கு உதவிய வள்ளலவர்!
தனிமைக்குத் துணையாகத் தானிருந்தார்!


தகைமைசால் பண்பாளராய் பெயரும் பெற்றார்!


மதிநுட்ப பேராற்றல் பெற்றிருந்தார்!
மதிய உணவளித்து மனம் மகிழ்ந்தார்!
மகத்தான முதல்வரென மதிக்கப் பெற்றார்!
மண்ணுலகில் இறவாப் புகழ் தானடைந்தார்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:34

தவளை சங்கீதம்
============

தாளம் ராகம் போடடுத்தான்

தவளை பாடும் சங்கீதம்!

நாளும் இரவில் கேட்டுத்தான்

நாமும் மகிழும் பாட்டுத்தான்!


மேலும் உச்ச சத்தத்தில்

மிகவும் ஜாலி யாகத்தான்

நாலா புறமும் கேட்டுத்தான்

ரசிக்க வைக்கும் கச்சேரி!


என்ன பாட்டோ தெரியாது!

இசைதான் எதுவோ புரியாது!

ஒண்ணும் தவளை அறியாது!

ஒழுங்காய் ஒலிக்கும் சேர்ந்திசை தான்!

திருநாள் போல அவையாவும்

திரண்டே பாடுதல் செவிக்கின்பம்!

ஒரு நாள் கேட்டால் தினம் கேட்கும்

உற்சாகம் தான் பெருகிவிடும்!


திருவையாறு இசை விழாவில்

திரண்டே பாடும் வித்வான் போல்

ஒரே நேரத்தில் தவளையெல்லாம்

உலகம் ரசிக்க இசை பாடும்!

ஒரு நாள் கேட்டுப் பாருங்கள்!

ஒவ்வொரு நாளும் கேட்பீர்கள்!

மறுநாள் மறுநாள் மனம் தூண்டும்!

மகிமை புரியும் ரசிப்பீர்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:34

குரு வணக்கம்
==========================

அன்பினாலே கல்வியை

அறியச் சொல்லித் தருபவர்

பண்பும் அறிவும் பயன் பெற

படிக்கச் செய்யும் குரு அவர்

கல்லுங் கூட கனியுமே

சொல்லுகின்ற முறையிலே

முள்ளுங்கூட மெத்தை தான்

உணர வைக்கும் வகையிலே

அன்னை தந்தை இருவரும்

முன்னறிந்த தெய்வமே

எண்ணும் எழுத்தும் அறிந்திட

செய்தவரும் தெய்வமே

ஏறிச் செல்லும் படிகளாய்

என்று மிங்கே இருப்பவர்

எரிய வைக்கும் திரியென

ஒளியைச் சுமந்து நிற்பவர்

கற்க கற்க கசடற

கற்றது போல் நடந்திட

சொல்லில் சுவை சேர்த்திடும்

சூட்சமத்தின் சாவியே

ஞானம் தந்த மனிதரை

நாளும் நாமும் வணங்குவோம்

நாமும் அவரைப் போலவே

உலகம் உய்ய வாழுவோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:34

சிட்டுக் குருவி
==========================

வீட்டின் முகட்டில் கூடுகட்டி

வாழும் சிட்டே வா... வா... வா...!

நாட்டுக் குள்ளே வாழ்வோர்க்கு

நட்பை விளங்க வைத்திடவா!

ஒன்றாய்க் கூட்டில் வசிக்கின்றாய்

ஒற்றுமை யாக இருக்கின்றாய்

நன்றாய் நீயும் உழைக்கின்றாய்

நாளும் நீரில் குளிக்கின்றாய்!

காட்டை நோக்கிப் பறக்கின்றாய்

கம்பு, சோளம் உண்கின்றாய்

வாட்டம் இன்றி வாழ்கின்றாய்

வருத்தம் என்ப தில்லையே!

தத்தித் தத்தி நடக்கின்றாய்

தன்னல மின்றி இருக்கின்றாய்

கத்தித் தானே திரிகின்றாய்

கள்ளம் கபடம் இல்லையே!

ஏற்றத் தாழ்வு என்பதுவே

என்றும் இல்லை உன்னிடமே

தோற்றம் சிறிதாய் இருந்தாலும்

தொடர்ந்து நாளும் உழைக்கின்றாய்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:35

அம்மா
=====================

அல்லும் பகலும் நம்மையே சுற்றும்

அன்புச் சூரியன் அம்மா!

அன்று பிறந்த குழந்தை கையிலும்

அகப்படும் வானம் அம்மா!

கல்முள் நமது காலில் படாது

காக்கும் பூமி அம்மா!

கண்ணீர் அலையில் கலங்க விடாத

கருணைக் கடலும் அம்மா!

பல்லக் கெனவே பரிவாய்ச் சுமந்து

பாலும் தருபவள் அம்மா!

பன்னீர் மலரின் மிருதாய்த் துலங்கும்

பாசத் துளி அம்மா!

இல்லம் அழகுக் கோயில் அதனுள்

ஏற்றிய தீபம் அம்மா!

எண்ணும் பொழுது கண்முன் தெரியும்

எளிமைத் தெய்வம் அம்மா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:35

படிப்பதே கடமை!

நன்றி உள்ள நாயே வா!
நாமும் மகிழ்ந்தே ஆடிடலாம்!
உன்னைப் போல அன்புள்ள
ஒருவர் எனக்குக் கிடைப்பாரா?
என்னை வளர்க்கும் எஜமானின்
வீட்டைக் காக்க வேண்டுமப்பா!
இந்தக் கடமை கண்ணாகும்!
மாலையில் வந்தால் நான் வருவேன்!
குருவி! குருவி! வருவாயா!
கூடிப் பாடி ஆடிடலாம்!
அருமை யான நண்பன்தான்
அருகில் வாராய் அன்புடனே!
கூட்டைக் கட்டி முடித்தால்தான்
குஞ்சும் நானும் வாழ்ந்திடலாம்!
ஆட்டம் போட நேரமில்லை!
அருமைக் கடமை அழைக்கிறது!
கழுதை நண்பா! பாடிடலாம்!
கைகள் கோர்த்தே ஆடிடலாம்!
அழுக்கைச் சுமந்தது போதுமப்பா!
ஆடிப் பாட வந்துவிடு!
சுமப்பது எனது கடமையப்பா!
சுமைதான் எனக்கே வாழ்க்கையப்பா!
அந்தோ! கடமை அழைக்கிறது!
அருமை நண்பா சென்றுவிடு!
ஆகா! இவர்கள் அனைவருமே
அவரவர் கடமை செய்கின்றார்!
எனது கடமை படிப்பதுதான்!
இன்றே பள்ளிக்கு நான் செல்வேன்!
பெற்றோர் கனவை நினைவாக்கி
பெருமை யோடு புகழ் பெறுவேன்!
நாட்டை வீட்டை முன்னேற்றி
நல்ல இந்தியன் ஆகிடுவேன்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:36

உதவி

இரவில் வெண்ணிலா வருகிறது
குளிரொளி எங்கும் தருகிறது!
மரமோ சுவைமிகு கனிகள் பல
யாவரும் உண்ணத் தருகிறது!
அழகாய்ப் பூத்த நறுமலரை
செடிகொடி தினமும் தருகிறது!
கலகலப் பாக ஓடும் நதி
தண்ணீர் தந்து உதவிடுது!
காற்றே கண்ணுக்குத் தெரிவதில்லை
அது இல்லாமல் வாழ்வில்லை!
பார்க்கப் பார்க்க வியப்பூட்டி
பலபல பலன், மலை தருகிறது!
நான்கொடுத் தேன் எனச் சொல்வதில்லை
எதையும் அவை எதிர் பார்ப்பதில்லை
தான்எனப் பெருமை கொள்வதில்லை
தனக்கெனப் பதுக்கி மறைப்பதில்லை!
இப்படியாகச் செயல் மூலம்
சொல்வது `உதவி செய்' எனும் பாடம்
தப்பா மல் அதைக் கடைப்பிடித்தால்
எப்போ தும்புகழ், நலம் கூடும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:36

உயர்வுக்கு வழி!

இளமையில் கல்வி கற்றிட வேண்டும்!
இறவாப் புகழ் - நீ எய்திட வேண்டும்!
இன்பத்தமிழ் மொழி காத்திட வேண்டும்
இயல் இசை நாடகம் பயின்றிட வேண்டும்!
காலையில் தினமும் எழுந்திட வேண்டும்!
கண்டிப்பாய் வீட்டுப் பாடம் செய்திட வேண்டும்!
கடமையில் கருத்தாய் இருந்திட வேண்டும்!
கண்ணியமாய் நாளும் திகழ்ந்திட வேண்டும்!
அன்னை தந்தை சொல் மதித்திட வேண்டும்!
அன்பினை நெஞ்சினில் விதைத்திட வேண்டும்!
பழகுவதில் இனிமை இருந்திட வேண்டும்!
பண்பும்-பயனும் நிறைந்திட வேண்டும்!
ஆசிரியர் சொல்படி நடந்திட வேண்டும்!
ஆலயம் தொழுது நீ சிறந்திட வேண்டும்!
ஆடி-ஓடி நாளும் உழைத்திட வேண்டும்!
ஆங்கோர் ஏழைக்கு உதவிட வேண்டும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:36

அன்பிற்கோர் ஆலயம்

யமுனை நதியின் கரையினிலே
யாவரும் வியக்கும் வகையினிலே
அமைதி தவழும் சூழலிலே
அழகுடன் திகழும் மாளிகையாம்!
இருபது ஆயிரம் தொழிலாளர்
இருபத்து இரண்டு ஆண்டுகளாய்
இரவும் பகலும் பாடுபட்டு
எழுப்பிய பளிங்குக் கோபுரமாம்?
அன்பு மனைவி மும்தாஜின்
அகலா நினைவாய் ஆக்ராவில்
என்றும் நிலைக்க சாஜகானும்
எடுத்து நிறுத்திய ஆலயமாம்!
நிலவும், முகிலும், சூரியனும்
நின்றே முகமன் கூறிடவே
உலகின் அதிசயம் ஏழினிலே
ஒன்றாய் அமைந்த தாஜ்மகாலாம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:37

நல்ல நாடு


நாடு நல்ல நாடு
நம் தாய்த் திரு நாடு
நல்லோர் பலர் பிறந்த
நல்ல தொரு நாடு
தியாகிகளை பெற்றெடுத்த
தெய்வத் திரு நாடு
வீரர்கள் பலர் பிறந்த
வெற்றித் திருநாடு
யாருக்கும் அடிமையில்லை
யாரும் நமக்கு அடிமையில்லை
பார் போற்றும் மக்களாட்சி
பேணிக்காக்கும் பாரத நாடு
பல பல ஜீவ நதி
பாய்ந்தோடும் நாடு
ஜலத்திற்கு பஞ்சமில்லாத
பயிர் செழிக்கும் நாடு
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
ஓயாது உழைத்திடுவோம்
வன்முறை, தீவிரவாதம்
வளரஅனுமதியோம்
ஒருநாள் வல்லரசாய் மாறிடுவோம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:38

வெற்றியின் விலாசம்


கனிவுடன் அன்பு,
கருணை, இரக்கம்,
கடமையில் கண்ணும்
கருத்தாய் இருத்தல்,
பணிவுடன் உண்மை
பகர்தல் ******ம்,
பண்புடன் இன் சொல்
பாராட்டும் பழக்கம்,
நினைவினைச் செம்மை
நெறிவயப்படுத்தல்,
நீதியை நம்பி
நேர்வழிநடத்தல்,
துணிவுடன் உள்ளம்
துவளா உழைப்பு,
தொட்டதில் எல்லாம்
வெற்றியை அளிக்கும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:38

மரங்கொத்தி


கொண்டையை கொண்டையை
ஆட்டிவரும் மரங்கொத்தியே
உன் கொண்டைக்கு நான் பூ தருவேன்
அருகில் பறந்துவா!
தலையில் உள்ள தொப்பி
உனக்கு யார் கொடுத்தது?
பல நிறத்தில் சிறகுகள்
எங்கே கிடைத்தன!
பறந்து பறந்து மரத்தை கொத்தி
பூச்சி பிடிக்கிறாய்
உன் பசிக்கு இரையாக
வேறு ஏதும் கிடைக்கலையா?
உளியை போல நீளமான
அலகிருக்குதே
கொட்டைகளை உடைத்து தின்றால்
பசிஅடங்காதா?
பட்டைக்குள்ளே ஒளிந்திருக்கும்
பூச்சி புழுக்களை
பயங்கரமாத் தின்னுகிறாயே
பாவமில்லையா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:39

வீட்டுத்தோட்டம்


வீட்டுத்தோட்டம் அமைத்திடுவோம்!
வித வித விதைகள் விதைத்திடுவோம்!
ஊட்டும் நறுமணம் பூச்செடிகள்!
உணவுக்கு தவும் காய்கறிகள்!
வெற்றிடம் எங்கும் நன்கு கொத்தி
வெய்யிலில் காய்ந்ததும் நீர் செலுத்தி
நட்டே செடி கொடி வளர்ப்பதனால்
நற்பயன் நமக்கும் கிடைத்திடுமே!
கண்டதைக் கண்டு வீண் பொழுது
போக்குதல் வாழ்க்கை சீரழிவு!
வெண்டை, கத்தரி, கீரைவகை
வெவ்வேறு கறிகாய் தேவையவை!
மங்கையர் கூந்தலுக்கெழில் சேர்க்கும்
மல்லிகை ரோஜா தினம் பூக்கும்!
எங்கனும் நறுமணம் கமழுவதால்
இயற்கை காற்றே சுகம் ஆகும்!
மரங்கள் செடிகள் வளர்ப்பதனால்
மனதில் மகிழ்வும் கிடைத்திடுமே!
பயனும் நிழலும் கிடைப்பதினால்
வாழும் வீடும் செழிப்பாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 18:39

திருக்குறள்
========

திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
தெய்வப்புலவர் வள்ளுவரின்
திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
திருக்குறள் படித்தால் உருப்படலாம்!

உண்மை பேசும் அவசியத்தை
உணர்த்திக் காட்டும் திருக்குறளாம்!
எண்ணப் படியே செயலாற்றும்
இயல்பைத் தருவது திருக்குறளாம்!

தினமும் ஒரு குறள் படிப்பதனால்
தெரியும் நன்மை தீமையெல்லாம்!
மனதில் பிறரைத் தம்மைப் போல்
மதிக்கச் சொல்லும் திருக்குறளாம்!

யார்க்கும் நன்மை செய்வதெனும்
அன்பை வளர்க்கும் திருக்குறளாம்
வேர்க்க உழைக்கும் மனிதர்களே
வெல்வார் என்னும் திருக்குறளாம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளுக்கான பாடல்கள் - Page 3 Empty Re: குழந்தைகளுக்கான பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum