Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளுக்கான பாடல்கள்
3 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
குழந்தைகளுக்கான பாடல்கள்
First topic message reminder :
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பூனைக்குட்டி பூனைக்குட்டி
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே
பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே
கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே
பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!
கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன்
கூட வராதே
பாலைக் குடித்து ஆட்டம் போடு
கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு
கூட வராதே
கோபப் பார்வை பார்க்க வேண்டாம்
கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன்
கூட வராதே
பள்ளிக்கூடம் போகின்றேன்
கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார்
கூட வராதே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
எலியே எலியே கதை கேளாய்!
வீட்டெலியே கதை கேளாய்!!
பூனையொன்று சுத்துது!
பசியால் பதறிக் கத்துது!!
உன்னைக் கண்டால் கவ்வுமே!
கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!
ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!
பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!
வீட்டில் உணவைத் திண்ணாதே!
உனக்கு வைத்த விஷம்மதுதான்!!
எலிப் பொறிக்குள் போகாதே!
நீ சாகப்போகும் இடம்மதுதான்!!
கவனமாக இருந்து விடு!
பல்லாண்டு வாழ்ந்து விடு!!
வீட்டெலியே கதை கேளாய்!!
பூனையொன்று சுத்துது!
பசியால் பதறிக் கத்துது!!
உன்னைக் கண்டால் கவ்வுமே!
கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!
ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!
பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!
வீட்டில் உணவைத் திண்ணாதே!
உனக்கு வைத்த விஷம்மதுதான்!!
எலிப் பொறிக்குள் போகாதே!
நீ சாகப்போகும் இடம்மதுதான்!!
கவனமாக இருந்து விடு!
பல்லாண்டு வாழ்ந்து விடு!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்
எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!
கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்
எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!
கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது
அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது
அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது
ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது
கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி
காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது
அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது
பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது
அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது
டிங்டாங் மணியோசை இப்போ
தெரு முனையில் கேட்குது
அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது
அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது
ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது
கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி
காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது
அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது
பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது
அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது
டிங்டாங் மணியோசை இப்போ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது
கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது
இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது
மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே
கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்
ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே
ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே
நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே
மரத்தின் மேலே ஏறுது
கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது
இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது
மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே
கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்
ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே
ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே
நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !
உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே
சிங்கார சிற்றெறும்பே !
உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தங்கை என்றன் தங்கை
தளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை.
பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை.
பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை
தளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை.
பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை.
பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வேண்டும் முயற்சி
சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!
தேனிக் கூட்டை பாருங்கள்
திறமை யோடு ஒற்றுமை
பேணி வீட்டைக் கட்டுமே
பெரிய முயற்சி வேண்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!
- பெருஞ்சித்திரனார்
சிலந்தி வலையை பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே!
தேனிக் கூட்டை பாருங்கள்
திறமை யோடு ஒற்றுமை
பேணி வீட்டைக் கட்டுமே
பெரிய முயற்சி வேண்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே!
- பெருஞ்சித்திரனார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மழை வருது மழை வருது
நெல்லு வாருங்கோ!
முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்கோ!
ஏரோட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்கோ!
சும்மா இருக்கும் மாமனுக்கு
சூடு வையுங்கோ!
நெல்லு வாருங்கோ!
முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்கோ!
ஏரோட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்கோ!
சும்மா இருக்கும் மாமனுக்கு
சூடு வையுங்கோ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நம்பிக்கை காக்கா
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்
அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்
அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்
சிறிய சிறிய கற்களை
***** கொண்டு போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்
நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம் (3
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்ததாம்
அங்குமிங்கும் தேடியே
வீடு நோக்கிச் சென்றதாம்
அங்கு சிறிய ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்ததாம்
எட்டி எட்டி பார்த்ததாம்
எட்டாமல் போனதாம்
சிறிய சிறிய கற்களை
***** கொண்டு போட்டதாம்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீர குடித்ததாம்
நம்பிக்கையுடைய காக்கா தான்
சந்தோஷமாய் பறந்ததாம் (3
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பாடல் - நல்லவனும் கெட்டவனும்
ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.
எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.
ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.
ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்
கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.
பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;
மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.
பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.
'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.
பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.
ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.
கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ
நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென
அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.
-----------------------
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபா
ராமு மிகவும் நல்லவனாம்,
நடத்தையில் மிக்க உயர்ந்தவனாம்.
எவருக்கும் அன்பாய் நடப்பவனாம்
இரக்கம் மிகவும் உடையவனாம்.
ஆயினும் நல்லவன் என்றவனை
அறிபவர் மிகமிகச் சிலரேதான்.
ஒருநாள் வீதியில் பெருங்கூட்டம்
ஒன்று கூடி நிற்பதை நான்
கண்டேன். உடனே, சென்றங்கே
காரணம் யாதெனக் கேட்டேன் நான்.
பாலு என்னும் ஒரு பையன்
பழக்கடை ஒன்றில் நுழைந்தானாம்;
மாம்பழம் ஒன்றை எடுத்தானாம்,
மறைத்து மடியில் வைத்தானாம்.
பார்த்ததும் உடனே கடைக்காரர்
'பட்'டென அறைகள் விட்டாராம்.
'திருடன், திருடன்' என்றவனைத்
திட்டினர் அங்கு யாவருமே.
பாலு கெட்டவன் என்றறியப்
பத்தே நிமிடம் ஆனதடா.
ராமு நல்லவன் என்றுணர
நாட்கள் பற்பல ஆகுமடா.
கெட்டவன் என்ற பெயரெடுக்க
'சட்'டென முடியும். ஆனாலோ
நல்லவன் என்ற பெயர் பெறவே
நாட்கள் மிகவும் ஆகுமென
அறிந்தேன், அன்று ஓர் உண்மை
அடைவோம் இதனால் பெரும் நன்மை.
-----------------------
எழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
பாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1
பாடலை அனுப்பியவர் : அக்கா துளசி கோபா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
காட்டில் யானை பெரியதாம்;
கண்கள் மட்டும் சிறியதாம்;
போட்ட ஊசி உலக்கை போல்
பூமி மேலே தெரியுமாம்!
மலையைப் போல வருவதால்
மற்ற விலங்கு மிரளுமாம்;
சிலைகளிலே அதிகமாய்
சிற்பி செதுக்கும் உருவமாம்!
கூட்டமாக மேகம் போல
குட்டியோடு பிளிறுமாம்;
காட்டமாகத் தாக்கி மரக்
கிளை முறித்துத் தின்னுமாம்!
துதிக்கை இரண்டு பக்கத்திலே
துருத்தி விமைத் தந்தமாம்;
மதிக்கும் நான்கு படையிலே
மதத்து யானை முதலிலாம்!
மனிதர் செய்யும் இன்னல்கள்
மனதுக் குள்ளே வைக்குமாம்;
கனிந்து காலம் வருகையில்
கருதும் பழியை வாங்குமாம்
கண்கள் மட்டும் சிறியதாம்;
போட்ட ஊசி உலக்கை போல்
பூமி மேலே தெரியுமாம்!
மலையைப் போல வருவதால்
மற்ற விலங்கு மிரளுமாம்;
சிலைகளிலே அதிகமாய்
சிற்பி செதுக்கும் உருவமாம்!
கூட்டமாக மேகம் போல
குட்டியோடு பிளிறுமாம்;
காட்டமாகத் தாக்கி மரக்
கிளை முறித்துத் தின்னுமாம்!
துதிக்கை இரண்டு பக்கத்திலே
துருத்தி விமைத் தந்தமாம்;
மதிக்கும் நான்கு படையிலே
மதத்து யானை முதலிலாம்!
மனிதர் செய்யும் இன்னல்கள்
மனதுக் குள்ளே வைக்குமாம்;
கனிந்து காலம் வருகையில்
கருதும் பழியை வாங்குமாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு
கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!
குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு
பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!
எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு
இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!
கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு
கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!
பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது
சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!
பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்
சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!
பக்கம் வந்து தேடுச்சு
கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!
குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு
பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!
எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு
இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!
கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு
கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!
பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது
சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!
பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்
சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
காட்டில் ஒரு திருமணம்
கருங்குருவி வீட்டில்
ஒரு கலியாணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்
கருங்குருவி வீட்டில்
ஒரு கலியாணம் நடந்ததாம்
காட்டில் உள்ள பறவையெல்லாம்
கலந்து வேலை செய்திற்றாம்
ஒரு ஊர்க்குருவி ஓடி ஓடி
ஊருக்கெல்லாம் சொல்லிற்றாம்
இரண்டுக் குயில் பறந்து வந்து
இனிமையாகப் பாடிற்றாம்
மூன்று மயில் நடந்து வந்து
முனைந்தழகாய் ஆடிற்றாம்
நான்கு அன்னம் நடந்து வந்து
நாட்டியங்கள் செய்திற்றாம்
ஐந்துக் கிளி கூடிப் பெண்ணை
அலங்கரிக்கச் சென்றதாம்
ஆறு புறா கூடிப்பிள்ளை
அழகுச்செய்ய போயிற்றாம்
ஏழு மைனா கூடிக்கொண்டு
விருந்தினரை அழைத்ததாம்
எட்டுக் காடை கூடிக்கொண்டு
கொட்டுமேளம் கொட்டிற்றாம்
ஒன்பது காக்கை கூடிக்கொண்டு
உறவினரை அழைத்தாம்
பத்து கொக்கு பறந்து வந்து
பந்தல் வேலை பார்ததாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
கூவும் குயிலின் குஞ்சு
கூவக் கற்ப தெப்படி?
கூவும் குயிலைக் கண்டு
கூவக் கற்கும் அப்படி!
ஆடும் மயிலின் குஞ்சு
ஆடக் கற்ப தெப்படி?
ஆடும் மயிலைக் கண்டு
ஆடக் கற்கும் அப்படி!
துள்ளும் மானின் குட்டி
துள்ளக் கற்ப தெப்படி?
துள்ளும் மானைக் கண்டு
துள்ளக் கற்கும் அப்படி!
நீந்தும் மீனின் குஞ்சு
நீந்தக் கற்ப தெப்படி?
நீந்தும் மீனைக் கண்டு
நீந்தக் கற்கும் அப்படி!
பாடம் கற்கும் சிறார்கள்
பாடம் கற்ப தெப்படி?
பாட ஆசான் சொல்ல
பாடம் கற்பார் அப்படி!
தந்தை போல வாழ
தனயன் கற்ப தெப்படி?
தந்தை வாழ்வைக் கண்டு
தனயன் கற்பான் அப்படி
கூவக் கற்ப தெப்படி?
கூவும் குயிலைக் கண்டு
கூவக் கற்கும் அப்படி!
ஆடும் மயிலின் குஞ்சு
ஆடக் கற்ப தெப்படி?
ஆடும் மயிலைக் கண்டு
ஆடக் கற்கும் அப்படி!
துள்ளும் மானின் குட்டி
துள்ளக் கற்ப தெப்படி?
துள்ளும் மானைக் கண்டு
துள்ளக் கற்கும் அப்படி!
நீந்தும் மீனின் குஞ்சு
நீந்தக் கற்ப தெப்படி?
நீந்தும் மீனைக் கண்டு
நீந்தக் கற்கும் அப்படி!
பாடம் கற்கும் சிறார்கள்
பாடம் கற்ப தெப்படி?
பாட ஆசான் சொல்ல
பாடம் கற்பார் அப்படி!
தந்தை போல வாழ
தனயன் கற்ப தெப்படி?
தந்தை வாழ்வைக் கண்டு
தனயன் கற்பான் அப்படி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
குழந்தைக்கான தாயின் தாலாட்டுப் பாடல்:
ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!
மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!
அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!
தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!
(இத்தலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)
யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!
ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!
மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!
அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!
தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!
(இத்தலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)
யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மழை பெய்த வாசலிலே
மைந்தன் அடி காணலையே!
பூக்கிற காலத்திலே
பூமாறிப்போனேனே!
காய்கிற காலத்திலே
காய்மாறிப் போனேனே!
(தான் பெறாத பிள்ளைக்காக பாடிய தாயின் தாலாட்டில் எவ்வளவு வேதனை புதைந்து கிடக்கிறது - தாலாட்டைக் கேட்கும்போது, கண்கள் குளமாவதைத் தவிர்க்க முடியவில்லை)
மைந்தன் அடி காணலையே!
பூக்கிற காலத்திலே
பூமாறிப்போனேனே!
காய்கிற காலத்திலே
காய்மாறிப் போனேனே!
(தான் பெறாத பிள்ளைக்காக பாடிய தாயின் தாலாட்டில் எவ்வளவு வேதனை புதைந்து கிடக்கிறது - தாலாட்டைக் கேட்கும்போது, கண்கள் குளமாவதைத் தவிர்க்க முடியவில்லை)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தினால் தவித்தது
தேடித் தேடிப் பார்த்தது
வீட்டுப் பக்கம் சென்றது
அங்கே ஒரு ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்தது
எட்டி எட்டிப் பார்த்தது
எட்டாமல் போனது
சின்னச் சின்னக் கற்களை
எடுத்து அதிலே போட்டது
தண்ணி மேலே வந்தது
தாகம் தீரக் குடித்தது
சந்தோஷமாய்ப் பறந்தது
சுப்சேகர்
தாகத்தினால் தவித்தது
தேடித் தேடிப் பார்த்தது
வீட்டுப் பக்கம் சென்றது
அங்கே ஒரு ஜாடியில்
கொஞ்சம் தண்ணீர் இருந்தது
எட்டி எட்டிப் பார்த்தது
எட்டாமல் போனது
சின்னச் சின்னக் கற்களை
எடுத்து அதிலே போட்டது
தண்ணி மேலே வந்தது
தாகம் தீரக் குடித்தது
சந்தோஷமாய்ப் பறந்தது
சுப்சேகர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
ஒரு ஏழைத் தாயின் தலாட்டு
முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!
வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?
ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே
தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ
தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?
முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!
வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?
ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே
தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ
தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
நன்றியுள்ள விலங்கு நான்
நன்மை செய்யும் விலங்கு நான்!
என்னை நம்பி எதையுமே
எளிதில் விட்டுச் செல்லலாம்!
வாலை ஆட்டி மகிழுவேன்
வந்து காலை நக்குவேன்!
காலை மாலை இரவினில்
கண்கள் விழித்து சுற்றுவேன்!
வீட்டில் உள்ள எவருமே
வெளியில் சென்றால் தொடருவேன்!
காட்டில் எவரும் தொடர்பில்லை
கடமை செய்து வளர்கிறேன்!
எந்தப் பொருளும் பிறர் தொட
என்றுமே நான் இடம் கொடேன்!
அந்தப் பக்கம் பிறர் வந்தால்
அலறி ஓடத் துரத்துவேன்!
மக்கள் செய்யும் உதவியை
மனதில் எண்ணி வாழ்கிறேன்!
மிக்க நன்றி செய்வதால்
மென்மை யாக வளர்கிறேன்!
====================
முகத்தைப் பாரு முன்னாடி;
முதுகைப் பாரு பின்னாடி.
முகமும் முகமும் முன்னாடி;
முதுகும் முதுகும் பின்னாடி.
எதிரும் புதிரும் கண்ணாடி;
ஏண்டி படுத்தறே, அடி போடி!
====================
சர்க்கரைப் பாகிலே
தென்னங் கீற்றுகளைத்
தோய்த்துத் தோய்த்துப்
பந்தலாக வேய்ந்தால்
அதுதான் சர்க்கரைப் பந்தல்!
தேனடைகளை அள்ளி
மேக மூட்டங்களில்
திணித்துத் திணித்து
தேவர்கள் மழை பெய்வித்தால்
அதுதான் தேன் மாரி!
நன்மை செய்யும் விலங்கு நான்!
என்னை நம்பி எதையுமே
எளிதில் விட்டுச் செல்லலாம்!
வாலை ஆட்டி மகிழுவேன்
வந்து காலை நக்குவேன்!
காலை மாலை இரவினில்
கண்கள் விழித்து சுற்றுவேன்!
வீட்டில் உள்ள எவருமே
வெளியில் சென்றால் தொடருவேன்!
காட்டில் எவரும் தொடர்பில்லை
கடமை செய்து வளர்கிறேன்!
எந்தப் பொருளும் பிறர் தொட
என்றுமே நான் இடம் கொடேன்!
அந்தப் பக்கம் பிறர் வந்தால்
அலறி ஓடத் துரத்துவேன்!
மக்கள் செய்யும் உதவியை
மனதில் எண்ணி வாழ்கிறேன்!
மிக்க நன்றி செய்வதால்
மென்மை யாக வளர்கிறேன்!
====================
முகத்தைப் பாரு முன்னாடி;
முதுகைப் பாரு பின்னாடி.
முகமும் முகமும் முன்னாடி;
முதுகும் முதுகும் பின்னாடி.
எதிரும் புதிரும் கண்ணாடி;
ஏண்டி படுத்தறே, அடி போடி!
====================
சர்க்கரைப் பாகிலே
தென்னங் கீற்றுகளைத்
தோய்த்துத் தோய்த்துப்
பந்தலாக வேய்ந்தால்
அதுதான் சர்க்கரைப் பந்தல்!
தேனடைகளை அள்ளி
மேக மூட்டங்களில்
திணித்துத் திணித்து
தேவர்கள் மழை பெய்வித்தால்
அதுதான் தேன் மாரி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!
பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!
வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!
உடலும் மனமும் வளர்வதற்கு
சின்ன பாப்பா -ஏற்
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!
பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!
பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!
வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!
உடலும் மனமும் வளர்வதற்கு
சின்ன பாப்பா -ஏற்
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!
பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சிந்திக்க நாளும் பழகிடு
சிறப்பை எய்திட உழைத்திடு
நிந்தை செய்வதை நிறுத்திடு
நிம்மதி வாழ்வைப் பெற்றிடு!
புதிய எண்ணம் எண்ணிடு
புரட்சிக் கருத்தைக் கூறிடு
நதியாய் பயனை விளைத்திடு
நன்மையைத் தொடர்ந்து செய்திடு!
கருத்தாய் கல்வி கற்றிடு
கடமையைச் செய்து உயர்ந்திடு
வருத்தம் வேண்டாம் விட்டிடு
வரலாறு படைக்கத் துணிந்திடு!
சிறப்பை எய்திட உழைத்திடு
நிந்தை செய்வதை நிறுத்திடு
நிம்மதி வாழ்வைப் பெற்றிடு!
புதிய எண்ணம் எண்ணிடு
புரட்சிக் கருத்தைக் கூறிடு
நதியாய் பயனை விளைத்திடு
நன்மையைத் தொடர்ந்து செய்திடு!
கருத்தாய் கல்வி கற்றிடு
கடமையைச் செய்து உயர்ந்திடு
வருத்தம் வேண்டாம் விட்டிடு
வரலாறு படைக்கத் துணிந்திடு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பாரத நாடு பழம்பெரு நாடு!
பாரினில் எங்கெனும் இதற்கில்லை ஈடு!
வீரம் செறிந்த வியத்தகு நாடு!
தீரம் நிறைந்த சீர்மிகு நாடு!
அன்னியன் ஆதிக்கம் ஒழித்திட்ட நாடு!
அகிம்சை வழியில் வென்றிட்ட நாடு!
அன்பெனும் போர்வையில் பிணைந்திட்ட நாடு!
அமைதி தவழும் அன்னை பாரத நாடு!
இமயம், குமரியாய் இணைந்திட்ட நாடு!
இமைபோல் நம்மை காத்திடும் நாடு!
இதிகாசம், இலக்கியங்கள் தோன்றிட்ட நாடு!
இவ்வையம் போற்ற வாழ்ந்திடும் நாடு!
சாதி, மத, பேதங்கள் ஒழிந்திட்ட நாடு!
சமாதானம் என்றென்றும் நிலைத்திடும் நாடு!
நீதி நெறி தவறாது நிலைத்திட்ட நாடு!
நிகழ்கால வல்லரசாய் திகழ்ந்திடும் நாடு
பாரினில் எங்கெனும் இதற்கில்லை ஈடு!
வீரம் செறிந்த வியத்தகு நாடு!
தீரம் நிறைந்த சீர்மிகு நாடு!
அன்னியன் ஆதிக்கம் ஒழித்திட்ட நாடு!
அகிம்சை வழியில் வென்றிட்ட நாடு!
அன்பெனும் போர்வையில் பிணைந்திட்ட நாடு!
அமைதி தவழும் அன்னை பாரத நாடு!
இமயம், குமரியாய் இணைந்திட்ட நாடு!
இமைபோல் நம்மை காத்திடும் நாடு!
இதிகாசம், இலக்கியங்கள் தோன்றிட்ட நாடு!
இவ்வையம் போற்ற வாழ்ந்திடும் நாடு!
சாதி, மத, பேதங்கள் ஒழிந்திட்ட நாடு!
சமாதானம் என்றென்றும் நிலைத்திடும் நாடு!
நீதி நெறி தவறாது நிலைத்திட்ட நாடு!
நிகழ்கால வல்லரசாய் திகழ்ந்திடும் நாடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
எதிர்நீச்சல்- தன்னம்பிக்கை பாடல்
=====================
தன்நம்பிக்கை - கொண்டு
தடைகளைத் தகர்த்திடு!
அவ நம்பிக்கைக்கு என்றும்
அடிமையாகாதிருந்திடு!
தடந்தோள்கள் - கொண்டு
தரணியில் உயர்ந்திடு!
தடைக்கற்களை - வாழ்வின்
படிக்கற்களாக்கிடு!
முயற்சியின் வேகத்தை
முன்னேற்றத்தில் காட்டிடு!
தளர்ச்சியால் துவளாது
வளர்ச்சிக்கு வழி வகுத்திடு!
சோதனைகளை கடந்து
சாதனைகள் படைத்திடு!
சோம்பலை வென்று
சுறுசுறுப்பை மீட்டிடு!
வெற்றியில் திளைத்து
விவேகமாய் நடந்திடு!
தோல்வியைக் கண்டு
துவளாதிருந்திடு!
அறிவுப் பாதை நோக்கி
கல்விப் பயணம் தொடர்ந்திடு!
ஆன்மீகப் பாதை கண்டு
ஆத்ம திருப்தி கொண்டிரு!
=====================
தன்நம்பிக்கை - கொண்டு
தடைகளைத் தகர்த்திடு!
அவ நம்பிக்கைக்கு என்றும்
அடிமையாகாதிருந்திடு!
தடந்தோள்கள் - கொண்டு
தரணியில் உயர்ந்திடு!
தடைக்கற்களை - வாழ்வின்
படிக்கற்களாக்கிடு!
முயற்சியின் வேகத்தை
முன்னேற்றத்தில் காட்டிடு!
தளர்ச்சியால் துவளாது
வளர்ச்சிக்கு வழி வகுத்திடு!
சோதனைகளை கடந்து
சாதனைகள் படைத்திடு!
சோம்பலை வென்று
சுறுசுறுப்பை மீட்டிடு!
வெற்றியில் திளைத்து
விவேகமாய் நடந்திடு!
தோல்வியைக் கண்டு
துவளாதிருந்திடு!
அறிவுப் பாதை நோக்கி
கல்விப் பயணம் தொடர்ந்திடு!
ஆன்மீகப் பாதை கண்டு
ஆத்ம திருப்தி கொண்டிரு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
ஏரிக்கரை
=======
குஞ்சு மீன்கள் கரையினிலே
வந்து தவழுது! அதைக்
கண்ட கொக்கு அலகினாலே
கவ்வி விழுங்குது!
ஊர்க்குருவி ஈச்சை மரத்தில்
ஊஞ்சல் ஆடுது! - அதை
வேட்டையாட பருந்து ஒன்று
விரைந்து வருது!
நீர்க்கோழி கரையோரம்
நீந்தி வருகுது! - அதைக்
கூர்ந்து பார்த்த நண்டுகள்
குழியில் பதுங்குது!
தவளையெல்லாம் தகர டப்பாத்
`தாளம்' போடுது! - அங்கே
எமனைப் போல நீர்ப்பாம்பு
எட்டிப் பார்க்குது!
வெள்ளிக் கெண்டை மீன்களெல்லாம்
துள்ளி குதிக்குது! - அங்கே
உள்ளான் போன்ற பறவைகளும்
உயரப் பறக்குது!
வானத்திலே கழுகுப் படை
வட்ட மிடுகுது!- மேலும்
காண பல காட்சிகளும்
கனிந்து கிடக்குது!
=======
குஞ்சு மீன்கள் கரையினிலே
வந்து தவழுது! அதைக்
கண்ட கொக்கு அலகினாலே
கவ்வி விழுங்குது!
ஊர்க்குருவி ஈச்சை மரத்தில்
ஊஞ்சல் ஆடுது! - அதை
வேட்டையாட பருந்து ஒன்று
விரைந்து வருது!
நீர்க்கோழி கரையோரம்
நீந்தி வருகுது! - அதைக்
கூர்ந்து பார்த்த நண்டுகள்
குழியில் பதுங்குது!
தவளையெல்லாம் தகர டப்பாத்
`தாளம்' போடுது! - அங்கே
எமனைப் போல நீர்ப்பாம்பு
எட்டிப் பார்க்குது!
வெள்ளிக் கெண்டை மீன்களெல்லாம்
துள்ளி குதிக்குது! - அங்கே
உள்ளான் போன்ற பறவைகளும்
உயரப் பறக்குது!
வானத்திலே கழுகுப் படை
வட்ட மிடுகுது!- மேலும்
காண பல காட்சிகளும்
கனிந்து கிடக்குது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» குழந்தைகளுக்கான தளம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum