Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளுக்கான பாடல்கள்
3 posters
Page 7 of 9
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
குழந்தைகளுக்கான பாடல்கள்
First topic message reminder :
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
சின்ன சின்ன வயசிலே
செல்லமான வயசிலே
சொன்ன பேச்சை கேட்க வேண்டும்
அம்மா அப்பா, சொன்ன பேச்சை கேட்க வேண்டும். (2)
காலையிலே எழுந்திருக்க பழக வேண்டும்
கடவுளையே என்னாலும் வணங்க வேண்டும்.
கல்வி கற்க பள்ளி கூடம் போக வேண்டும் (2)
நல்ல கருத்துடனே பாடங்களை படிக்க வேண்டுக் (2) - (சின்ன)
எறும்பு போலே துறுதுறுப்பாய் இருக்க வேண்டும்.
எதிலையுமே பரபரப்பாய் நடக்க வேண்டும்
துரும்பு போல சமயத்திலே உதவ வேண்டும்.(2)
சூது வாது பொய்களங்கள் மறக்க வேண்டும் (2) - (சின்ன)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
கொடி பறக்குது!
*கொடி பறக்குது பாரப்பா...
கோணல் இல்லா கம்பத்திலே!
*சாதியில்லா கொடியிது
மதமில்லா கொடியிது
*மானம் காக்கும் கொடியிது
மகிழ்ச்சி தரும் கொடியிது
*பச்சை நிறம் சொல்லுது
பகையை மறக்கச் சொல்லுது
*வெள்ளை நிறம் சொல்லுது
வெறுப்பை மறக்கச் சொல்லுது
*காவி நிறம் சொல்லுது
கலக்கம் மறக்கச் சொல்லுது
*அசோகச் சக்கரம் சொல்லுது
அநீதி எதிர்க்கச் சொல்லுது
*எல்லா மத மக்களும்
ஏற்றி வைத்த கொடியிது
*நம் நாட்டு கொடியிது
நடு வானில் பறக்குது..
*கொடி பறக்குது பாரப்பா...
கோணல் இல்லா கம்பத்திலே!
*சாதியில்லா கொடியிது
மதமில்லா கொடியிது
*மானம் காக்கும் கொடியிது
மகிழ்ச்சி தரும் கொடியிது
*பச்சை நிறம் சொல்லுது
பகையை மறக்கச் சொல்லுது
*வெள்ளை நிறம் சொல்லுது
வெறுப்பை மறக்கச் சொல்லுது
*காவி நிறம் சொல்லுது
கலக்கம் மறக்கச் சொல்லுது
*அசோகச் சக்கரம் சொல்லுது
அநீதி எதிர்க்கச் சொல்லுது
*எல்லா மத மக்களும்
ஏற்றி வைத்த கொடியிது
*நம் நாட்டு கொடியிது
நடு வானில் பறக்குது..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
விளையாடு
=========
தம்பி தம்பி விளையாடு!
தாவிக் குதித்து விளையாடு!
எம்பிக் குதித்து நண்பர்கள்
எல்லா ரோடும் விளையாடு!
மாலைப் பொழுது இனிதாகும்!
மனதை மயக்கும் அழகாகும்!
சோலை ஓரம் பாடல்கள்
சொல்லிக் கொண்டு விளையாடு!
அந்தி வெளிச்சம் உடம்புக்கு
அரிதாய்க் கிடைக்கும் மருந்தாகும்
முந்திச் சுற்றும் பூங்காற்று
மூச்சாய் மாறும் சுகமாகும்!
இந்த வயது இளம்வயது!
எல்லாம் பழகும் சிறுவயது!
சந்தம் பாடி மகிழ்ந்தாடி
சாதிக் கின்ற ஒருவயது!
ஆடி முடித்தால் உடல்வேர்க்கும்!
அதுவும் குளித்தால் சரியாகும்!
ஓடிச் சென்று வீட்டுக்கு!
உறக்கம் கொள்வாய் இரவுக்கு
=========
தம்பி தம்பி விளையாடு!
தாவிக் குதித்து விளையாடு!
எம்பிக் குதித்து நண்பர்கள்
எல்லா ரோடும் விளையாடு!
மாலைப் பொழுது இனிதாகும்!
மனதை மயக்கும் அழகாகும்!
சோலை ஓரம் பாடல்கள்
சொல்லிக் கொண்டு விளையாடு!
அந்தி வெளிச்சம் உடம்புக்கு
அரிதாய்க் கிடைக்கும் மருந்தாகும்
முந்திச் சுற்றும் பூங்காற்று
மூச்சாய் மாறும் சுகமாகும்!
இந்த வயது இளம்வயது!
எல்லாம் பழகும் சிறுவயது!
சந்தம் பாடி மகிழ்ந்தாடி
சாதிக் கின்ற ஒருவயது!
ஆடி முடித்தால் உடல்வேர்க்கும்!
அதுவும் குளித்தால் சரியாகும்!
ஓடிச் சென்று வீட்டுக்கு!
உறக்கம் கொள்வாய் இரவுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அணில்
உயரமான மரத்திலே நீ
ஏறிப் போவ தெப்படி?
பயமே இன்றி நீயுமே
பாய்ந்து மேலே போவதேன்?
கனிந்த பழத்தைக் கண்டதும்
கடித்துச் சுவைக்க ஆசையா?
குனிந்து பார்த்தால் நானுமே
நின்றி ருப்பதைக் கண்டாயா?
உன்னைப் போலே மரத்திலே
உயரே ஏறிப் போகவே
எண்ண மெல்லாம் ஆசையே
எப்படி என்று சொல்வாயோ!
நித்தம் உன்னைக் காணவே
வந்து சொல்வேன் நானுமே
சத்தமின்றி முத்தம் எனக்கு
நீயும் தந்து செல்வாயோ!
உயரமான மரத்திலே நீ
ஏறிப் போவ தெப்படி?
பயமே இன்றி நீயுமே
பாய்ந்து மேலே போவதேன்?
கனிந்த பழத்தைக் கண்டதும்
கடித்துச் சுவைக்க ஆசையா?
குனிந்து பார்த்தால் நானுமே
நின்றி ருப்பதைக் கண்டாயா?
உன்னைப் போலே மரத்திலே
உயரே ஏறிப் போகவே
எண்ண மெல்லாம் ஆசையே
எப்படி என்று சொல்வாயோ!
நித்தம் உன்னைக் காணவே
வந்து சொல்வேன் நானுமே
சத்தமின்றி முத்தம் எனக்கு
நீயும் தந்து செல்வாயோ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அணில்
உயரமான மரத்திலே நீ
ஏறிப் போவ தெப்படி?
பயமே இன்றி நீயுமே
பாய்ந்து மேலே போவதேன்?
கனிந்த பழத்தைக் கண்டதும்
கடித்துச் சுவைக்க ஆசையா?
குனிந்து பார்த்தால் நானுமே
நின்றி ருப்பதைக் கண்டாயா?
உன்னைப் போலே மரத்திலே
உயரே ஏறிப் போகவே
எண்ண மெல்லாம் ஆசையே
எப்படி என்று சொல்வாயோ!
நித்தம் உன்னைக் காணவே
வந்து சொல்வேன் நானுமே
சத்தமின்றி முத்தம் எனக்கு
நீயும் தந்து செல்வாயோ!
உயரமான மரத்திலே நீ
ஏறிப் போவ தெப்படி?
பயமே இன்றி நீயுமே
பாய்ந்து மேலே போவதேன்?
கனிந்த பழத்தைக் கண்டதும்
கடித்துச் சுவைக்க ஆசையா?
குனிந்து பார்த்தால் நானுமே
நின்றி ருப்பதைக் கண்டாயா?
உன்னைப் போலே மரத்திலே
உயரே ஏறிப் போகவே
எண்ண மெல்லாம் ஆசையே
எப்படி என்று சொல்வாயோ!
நித்தம் உன்னைக் காணவே
வந்து சொல்வேன் நானுமே
சத்தமின்றி முத்தம் எனக்கு
நீயும் தந்து செல்வாயோ!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
:];: :];:உமா wrote: ##*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சித்திரைத் திருவிழா
ஆற்றில் அழகர் இறங்குகிறார் வாங்க!
அனைவரும் சென்றுதான் சேவிக்கலாம்!
வீற்று இருப்பார் அவர் குதிரையிலே! -கோடை
விடுமுறை நாளில் மதுரையிலே!
வைகை ஆற்றில் எங்கும் மக்கள் வெள்ளம்
வந்து குவிந்திடும் பக்தி உள்ளம்!
கைகளைத் தூக்கி உயர்த்தியே கும்பிட்டு
அழகரைக் காணவே கூட்டம் தவமிருக்கும்!
மதுரை மீனாட்சிக்குச் சித்திரா பவுர்ணமி
மாலைச் சூடி கல்யாணம் நடக்கும் விழா!
குதூகலம் பொங்க திருவிழாக் காணவே
குவிந்திடும் பக்தர்கள் மிக அதிகம்!
தினம் தினம் வீதியில் ஆட்டம் பாட்டம்!
எட்டுத் திசையிலிருந்து கூடும் மக்கள் கூட்டம்!
இனம் ஜாதி மதம் யாவும் கடந்து ஒன்றாய்க் கூடி
இரவும் பகலுமே இணைந்து நிற்கும்!
காணக் கண் கோடிதான் வேணும் அம்மா!
அந்தக் கள்ளழகர் எதிர் சேவைக் காண அம்மா!
ஆற்றில் அழகர் இறங்குகிறார் பாருங்க!
நாமும் சென்று தரிசிக்கலாம் வாங்க
ஆற்றில் அழகர் இறங்குகிறார் வாங்க!
அனைவரும் சென்றுதான் சேவிக்கலாம்!
வீற்று இருப்பார் அவர் குதிரையிலே! -கோடை
விடுமுறை நாளில் மதுரையிலே!
வைகை ஆற்றில் எங்கும் மக்கள் வெள்ளம்
வந்து குவிந்திடும் பக்தி உள்ளம்!
கைகளைத் தூக்கி உயர்த்தியே கும்பிட்டு
அழகரைக் காணவே கூட்டம் தவமிருக்கும்!
மதுரை மீனாட்சிக்குச் சித்திரா பவுர்ணமி
மாலைச் சூடி கல்யாணம் நடக்கும் விழா!
குதூகலம் பொங்க திருவிழாக் காணவே
குவிந்திடும் பக்தர்கள் மிக அதிகம்!
தினம் தினம் வீதியில் ஆட்டம் பாட்டம்!
எட்டுத் திசையிலிருந்து கூடும் மக்கள் கூட்டம்!
இனம் ஜாதி மதம் யாவும் கடந்து ஒன்றாய்க் கூடி
இரவும் பகலுமே இணைந்து நிற்கும்!
காணக் கண் கோடிதான் வேணும் அம்மா!
அந்தக் கள்ளழகர் எதிர் சேவைக் காண அம்மா!
ஆற்றில் அழகர் இறங்குகிறார் பாருங்க!
நாமும் சென்று தரிசிக்கலாம் வாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தொலைபேசி
=========
தொலைபேசி நல்ல தொலைபேசி!
தொலை தகவல்கள் தரும் மொழிபேசி!
அலை பாயும் பல கடல் கடந்து-
அனுதினமும் செய்தி தரும் தொலைபேசி!
"கிரகாம்பெல்லின்' நுண்ணறிவால்
சிரமம் இன்றி செய்திகளை -நேர
விரயம் ஏதுமில்லாமல்
விரைந்து தருவது தொலைபேசி!
அன்னைநாடு தனை மறந்து
அயல்நாடு சென்று உழைப்போர்க்கும்
அவசரச் செய்திதனை உடனுக்குடன்
அசுரவேகத்தில் தருவது தொலைபேசி!
இரவு பகல் பாராது
இமைப்பொழுது நேரத்தில்
இனிதே தகவல்தரும் தொலைபேசி
இல்லந்தோறும் அவசியமே!
=========
தொலைபேசி நல்ல தொலைபேசி!
தொலை தகவல்கள் தரும் மொழிபேசி!
அலை பாயும் பல கடல் கடந்து-
அனுதினமும் செய்தி தரும் தொலைபேசி!
"கிரகாம்பெல்லின்' நுண்ணறிவால்
சிரமம் இன்றி செய்திகளை -நேர
விரயம் ஏதுமில்லாமல்
விரைந்து தருவது தொலைபேசி!
அன்னைநாடு தனை மறந்து
அயல்நாடு சென்று உழைப்போர்க்கும்
அவசரச் செய்திதனை உடனுக்குடன்
அசுரவேகத்தில் தருவது தொலைபேசி!
இரவு பகல் பாராது
இமைப்பொழுது நேரத்தில்
இனிதே தகவல்தரும் தொலைபேசி
இல்லந்தோறும் அவசியமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அழகு
====
மண்ணிற்கு மரம் அழகு
மரத்திற்கு பூக்கள் அழகு
பூக்களுக்குக் காய்கள் அழகு
காய்களுக்குக் கனி அழகு!
பூமிக்குக் கடல் அழகு
கடலுக்குத் தண்ணீர் அழகு
தண்ணீருக்குச் சிப்பி அழகு
சிப்பிக்கு முத்து அழகு!
பூமிக்கு வானம் அழகு
வானத்திற்கு இரவு அழகு
இரவிற்கு நிலா அழகு
நிலாவிற்கு நட்சத்திரங்கள் அழகு!
விவசாயிக்கு மண் அழகு
மண்ணிற்கு விதை அழகு
விதைக்குப் பயிர் அழகு
பயிறுக்கு அறுவடை அழகு!
மண்ணிற்கு உயிரினங்கள் அழகு
உயிரினங்களில் மனிதர் அழகு
மனிதற்கு ஆறறிவு அழகு
ஆறறிவில் பகுத்தறிவு பேரழகு!
====
மண்ணிற்கு மரம் அழகு
மரத்திற்கு பூக்கள் அழகு
பூக்களுக்குக் காய்கள் அழகு
காய்களுக்குக் கனி அழகு!
பூமிக்குக் கடல் அழகு
கடலுக்குத் தண்ணீர் அழகு
தண்ணீருக்குச் சிப்பி அழகு
சிப்பிக்கு முத்து அழகு!
பூமிக்கு வானம் அழகு
வானத்திற்கு இரவு அழகு
இரவிற்கு நிலா அழகு
நிலாவிற்கு நட்சத்திரங்கள் அழகு!
விவசாயிக்கு மண் அழகு
மண்ணிற்கு விதை அழகு
விதைக்குப் பயிர் அழகு
பயிறுக்கு அறுவடை அழகு!
மண்ணிற்கு உயிரினங்கள் அழகு
உயிரினங்களில் மனிதர் அழகு
மனிதற்கு ஆறறிவு அழகு
ஆறறிவில் பகுத்தறிவு பேரழகு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வாழை போல் பயன்படுவோம்
வாழைக் கன்றை வைத்தேதான்
வாழை மரத்தைப் பயிரிடுவோம்!
வாழை மரமோ வளர்ந்துவிடும்!
வளவளப் பாக ஜொலித்திடும்!
நான்கு திசைகளை நோக்கித்தான்
இலைகள் விரிந்தே படர்ந்திருக்கும்!
வாழை இலைகள் போட்டேதான்
வகையாய் விருந்து படைத்திடலாம்!
கொத்துக் கொத்தாய் வாழைக்காய்
குருமா குழம்புடன், வறுத்திடலாம்!
வாழைப் பூவில் வடைசெய்தால்
வாசம் பிடித்தே சாப்பிடலாம்!
வாழைத் தண்டின் சாறெடுத்து
மருந்தாய் நாமும் அருந்திடலாம்!
கிட்னியில் உள்ள கற்களையும்
எளிதில் கறையச் செய்திடுமே!
வாழைப் பழங்கள் உட்கொண்டால்
வயிற்றுச் சிக்கல் தோன்றாதே!
வாழை மரத்தின் பாகங்கள்
எல்லாம் இங்கே பயன்படுமே
நாளும் வாழை மரம்போல
நாமும் நாட்டுக்கு பயன்படுவோம்!
வாழைக் கன்றை வைத்தேதான்
வாழை மரத்தைப் பயிரிடுவோம்!
வாழை மரமோ வளர்ந்துவிடும்!
வளவளப் பாக ஜொலித்திடும்!
நான்கு திசைகளை நோக்கித்தான்
இலைகள் விரிந்தே படர்ந்திருக்கும்!
வாழை இலைகள் போட்டேதான்
வகையாய் விருந்து படைத்திடலாம்!
கொத்துக் கொத்தாய் வாழைக்காய்
குருமா குழம்புடன், வறுத்திடலாம்!
வாழைப் பூவில் வடைசெய்தால்
வாசம் பிடித்தே சாப்பிடலாம்!
வாழைத் தண்டின் சாறெடுத்து
மருந்தாய் நாமும் அருந்திடலாம்!
கிட்னியில் உள்ள கற்களையும்
எளிதில் கறையச் செய்திடுமே!
வாழைப் பழங்கள் உட்கொண்டால்
வயிற்றுச் சிக்கல் தோன்றாதே!
வாழை மரத்தின் பாகங்கள்
எல்லாம் இங்கே பயன்படுமே
நாளும் வாழை மரம்போல
நாமும் நாட்டுக்கு பயன்படுவோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
பட்டணமாம் பட்டணம்!
பட்டனமாம் பட்டாணம்
பார்த்து மகிழும் பட்டணம்!
கடற்கரைக்குப் போகலாம்
களிப்பாய் காற்று வாங்கலாம்!
பூங்காவுக்குப் போகலாம்
பொழுதை நன்றாய்க் கழிக்கலாம்!
மிருகக் காட்சி சாலையிலே
மகிழ்ச்சி பொங்க ரசிக்கலாம்!
அருங்காட்சி சாலையிலே
அலசி அலசிப் பார்க்கலாம்!
அழகு அழகாய் ஆகாய ரயில்
அங்கும் இங்கும் ஓடுது!
சிற்றெறும்பு வரிசை போல்
சிறிய காரு பறக்குது!
சர்க்கஸ் கூடாரத்தில்
சகல வித்தையும் நடக்குது!
பட்டணமாம் பட்டணம்
பார்த்து மகிழும் பட்டணம்!
பட்டனமாம் பட்டாணம்
பார்த்து மகிழும் பட்டணம்!
கடற்கரைக்குப் போகலாம்
களிப்பாய் காற்று வாங்கலாம்!
பூங்காவுக்குப் போகலாம்
பொழுதை நன்றாய்க் கழிக்கலாம்!
மிருகக் காட்சி சாலையிலே
மகிழ்ச்சி பொங்க ரசிக்கலாம்!
அருங்காட்சி சாலையிலே
அலசி அலசிப் பார்க்கலாம்!
அழகு அழகாய் ஆகாய ரயில்
அங்கும் இங்கும் ஓடுது!
சிற்றெறும்பு வரிசை போல்
சிறிய காரு பறக்குது!
சர்க்கஸ் கூடாரத்தில்
சகல வித்தையும் நடக்குது!
பட்டணமாம் பட்டணம்
பார்த்து மகிழும் பட்டணம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வாழை!
வாழை நல்ல வாழை
வாழ்க்கைச் சான்று வாழை
கொண்ட உடல் முழுதும்
கொடுக்கும் பிறர்க்கு வாழை!
தண்டைக் கூட சமைக்கலாம்
பூவைப் பொறியல் செய்யலாம்
பூக்கள் தொடுக்க வாழையின்
நார்கள் கூட உதவுமே!
பட்டை தன்னை வெட்டியே
தட்டு அழகாய் செய்யலாம்
காய்ந்த சருகைப் பின்னியே
தொன்னை செய்து விற்கலாம்!
விருந்து உணவு தன்னையே
வாழை இலையில் போடலாம்
ஒற்றை வாழை நட்டிடில்
மற்றது அருகில் முளைத்திடும்!
முக்கனியில் மூன்றாம் இடம்
வகிக்கும் வாழைப் பழமுமே
வாழை மரம் அனைவருக்கும்
வகை வகையாய் செய்யுது உதவிகள்
ஏழையோர்க்கும் செய்திடில்
வையம் போற்ற நாளுமே
வாழை போல நாமுமே
வாழ்ந்து காட்டிச் செல்லலாம்!
வாழை நல்ல வாழை
வாழ்க்கைச் சான்று வாழை
கொண்ட உடல் முழுதும்
கொடுக்கும் பிறர்க்கு வாழை!
தண்டைக் கூட சமைக்கலாம்
பூவைப் பொறியல் செய்யலாம்
பூக்கள் தொடுக்க வாழையின்
நார்கள் கூட உதவுமே!
பட்டை தன்னை வெட்டியே
தட்டு அழகாய் செய்யலாம்
காய்ந்த சருகைப் பின்னியே
தொன்னை செய்து விற்கலாம்!
விருந்து உணவு தன்னையே
வாழை இலையில் போடலாம்
ஒற்றை வாழை நட்டிடில்
மற்றது அருகில் முளைத்திடும்!
முக்கனியில் மூன்றாம் இடம்
வகிக்கும் வாழைப் பழமுமே
வாழை மரம் அனைவருக்கும்
வகை வகையாய் செய்யுது உதவிகள்
ஏழையோர்க்கும் செய்திடில்
வையம் போற்ற நாளுமே
வாழை போல நாமுமே
வாழ்ந்து காட்டிச் செல்லலாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வெளவால்
பாரு பாரு வெளவால் பாரு!
பாலை ஊட்டும் பறவை பாரு!
பார்வை மிகக் குறைவு பாரு!
பறவையில் விநோதம் பாரு!
இரண்டு நீண்ட கைகள் பாரு!
இன்னும் அதன் விரல்கள் பாரு!
விரல்கள் இடையில் "ஜவ்' தோல் பாரு!
வெளவால் இறக்கை அதுவே பாரு!
இரண்டு கால்கள் இருக்கும் பாரு!
எனினும் நடக்க உதவிடாமல்
இருட்டில் தலை கீழாய்த் தொங்க
இரண்டும் உதவி செய்யும் பாரு!
பூட்டியுள்ள வீடு கோயில்
பெரிய மரம் தண்ணில் எல்லாம்
கூட்டமாகத் தொங்கும் பாரு!
கனிகள் பூச்சி உண்ணும் பாரு!
சுண்டெலிபோல் உடலில் ஒன்று
சேர்ந்த மயிர் அடர்த்தி பாரு!
பகலில் தூங்கி அது
இரவில் உணவு தேடும் பாரு!
எழுப்பும் உயர் சக்தி ஒலி
எதிரில் சென்று மோதித் திரும்பும்
வழியை வெளவால் அறியும் பாரு!
வேகமாகப் பறக்கும் பாரு!
வெளவால் பறக்கும் விதத்தைப் பார்த்து
விஞ்ஞானியும் கருவி ஒன்û
அவ்விதமே செய்தான் பாரு!
அதுவே "ராடார்' கருவி பாரு!
விண்ணில் எங்கோ பறப்பவற்û
விரைந்து ராடார் அறியும் பாரு!
கண்ணுக்கு எட்டாத் தூரத்தையும்
கச்சிதமாய் அளக்கும் பாரு!
பாரு பாரு வெளவால் பாரு!
பாலை ஊட்டும் பறவை பாரு!
பார்வை மிகக் குறைவு பாரு!
பறவையில் விநோதம் பாரு!
இரண்டு நீண்ட கைகள் பாரு!
இன்னும் அதன் விரல்கள் பாரு!
விரல்கள் இடையில் "ஜவ்' தோல் பாரு!
வெளவால் இறக்கை அதுவே பாரு!
இரண்டு கால்கள் இருக்கும் பாரு!
எனினும் நடக்க உதவிடாமல்
இருட்டில் தலை கீழாய்த் தொங்க
இரண்டும் உதவி செய்யும் பாரு!
பூட்டியுள்ள வீடு கோயில்
பெரிய மரம் தண்ணில் எல்லாம்
கூட்டமாகத் தொங்கும் பாரு!
கனிகள் பூச்சி உண்ணும் பாரு!
சுண்டெலிபோல் உடலில் ஒன்று
சேர்ந்த மயிர் அடர்த்தி பாரு!
பகலில் தூங்கி அது
இரவில் உணவு தேடும் பாரு!
எழுப்பும் உயர் சக்தி ஒலி
எதிரில் சென்று மோதித் திரும்பும்
வழியை வெளவால் அறியும் பாரு!
வேகமாகப் பறக்கும் பாரு!
வெளவால் பறக்கும் விதத்தைப் பார்த்து
விஞ்ஞானியும் கருவி ஒன்û
அவ்விதமே செய்தான் பாரு!
அதுவே "ராடார்' கருவி பாரு!
விண்ணில் எங்கோ பறப்பவற்û
விரைந்து ராடார் அறியும் பாரு!
கண்ணுக்கு எட்டாத் தூரத்தையும்
கச்சிதமாய் அளக்கும் பாரு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
வண்ணத்துப்பூச்சி
வண்ண வண்ண வண்ணங்களை
உடலில் கொண்ட பூச்சியே
வண்ணம் வந்த காரணம்
நீயும் கொஞ்சம் சொல்வாயா..?
எங்களைப் போன்ற மனிதரிலே
நிறங்களாலே பிரிவினை தான்
எப்படிப் போக்குவது தெரியலையே
நீயும் கொஞ்சம் சொல்வாயா..?
உடலில் இருக்கும் நிறத்தாலே
உள்ளத்தில் ஏதும் பேதமில்லை
என்றுணரும் நாள் எப்போ
நீயும் கொஞ்சம் சொல்வாயா..?
உண்ணும் உணவும் பலவகை
உடுத்தும் உடையும் பலவகை
ஓடும் ரத்தம் ஒரே நிறம்
மனிதரில் பேதம் தேவையில்லை!
உலகில் உள்ள பேதங்களை
அறிவின் துணையால் உணர்ந்தேதான்
பேதமின்றி வாழ்ந்து காட்டி
பொறுப்போடு செயல்படுவோம்!
வாழும் காலம் எத்தனையோ
யாரும் ஏதும் அறிகிலார்
வாழும் மட்டும் மகிழ்ச்சியாய்
உன்னைப் போல வாழ்ந்திடணும்!
வண்ண வண்ண வண்ணங்களை
உடலில் கொண்ட பூச்சியே
வண்ணம் வந்த காரணம்
நீயும் கொஞ்சம் சொல்வாயா..?
எங்களைப் போன்ற மனிதரிலே
நிறங்களாலே பிரிவினை தான்
எப்படிப் போக்குவது தெரியலையே
நீயும் கொஞ்சம் சொல்வாயா..?
உடலில் இருக்கும் நிறத்தாலே
உள்ளத்தில் ஏதும் பேதமில்லை
என்றுணரும் நாள் எப்போ
நீயும் கொஞ்சம் சொல்வாயா..?
உண்ணும் உணவும் பலவகை
உடுத்தும் உடையும் பலவகை
ஓடும் ரத்தம் ஒரே நிறம்
மனிதரில் பேதம் தேவையில்லை!
உலகில் உள்ள பேதங்களை
அறிவின் துணையால் உணர்ந்தேதான்
பேதமின்றி வாழ்ந்து காட்டி
பொறுப்போடு செயல்படுவோம்!
வாழும் காலம் எத்தனையோ
யாரும் ஏதும் அறிகிலார்
வாழும் மட்டும் மகிழ்ச்சியாய்
உன்னைப் போல வாழ்ந்திடணும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
ஆழப்பதிந்துகொள்
நெஞ்சில் துணிவைத் தேக்கிக் கொள் -உன்
நினைவில் தூய்மை சேர்த்துக் கொள்
வஞ்சம் இல்லா நட்பு எனில் -உன்
வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்!
பெற்றவர் சொற்கள் கேட்டுக்கொள் -வரும்
பயன்பல கோடி ஒப்புக் கொள்
உற்றநல் உறவைத் தழுவிக் கொள் -பிறர்க்கு
உதவும் பண்பினை வளர்த்துக் கொள்!
உடல்நலம் தன்னைக் காத்துக் கொள் -உண்ணும்
உணவில் மிகவும் கவனம் கொள்
படபடப் பெதிலும் கொள்ளாமல் -எங்கும்
பொறுமை காக்கும் பண்பைக் கொள்!
முடியாது என்னும் ஒரு சொல்லை -உன்
மனத்தில் இருந்தே அகற்றிக் கொள்
கடிதாய் இருப்பினும் கல்விதனை -உன்
கருத்தில் ஆழப் பதித்துக் கொள்!
தனித்த திறமைகள் கூட்டிக் கொள் -குற்றம்
சிறிதாய் இருக்கையில் கழித்துக் கொள்
மனிதநேயத்தைப் பெருக்கிக் கொள் -உன்
வாழ்வில் இலட்சியம் வகுத்துக் கொள்!
நெஞ்சில் துணிவைத் தேக்கிக் கொள் -உன்
நினைவில் தூய்மை சேர்த்துக் கொள்
வஞ்சம் இல்லா நட்பு எனில் -உன்
வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்!
பெற்றவர் சொற்கள் கேட்டுக்கொள் -வரும்
பயன்பல கோடி ஒப்புக் கொள்
உற்றநல் உறவைத் தழுவிக் கொள் -பிறர்க்கு
உதவும் பண்பினை வளர்த்துக் கொள்!
உடல்நலம் தன்னைக் காத்துக் கொள் -உண்ணும்
உணவில் மிகவும் கவனம் கொள்
படபடப் பெதிலும் கொள்ளாமல் -எங்கும்
பொறுமை காக்கும் பண்பைக் கொள்!
முடியாது என்னும் ஒரு சொல்லை -உன்
மனத்தில் இருந்தே அகற்றிக் கொள்
கடிதாய் இருப்பினும் கல்விதனை -உன்
கருத்தில் ஆழப் பதித்துக் கொள்!
தனித்த திறமைகள் கூட்டிக் கொள் -குற்றம்
சிறிதாய் இருக்கையில் கழித்துக் கொள்
மனிதநேயத்தைப் பெருக்கிக் கொள் -உன்
வாழ்வில் இலட்சியம் வகுத்துக் கொள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
சிறுசேமிப்பே சிறப்பு
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு
தேவையான செலவை
தேடிச் செய்வதே சிக்கன வாழ்வு
திட்டமிட்டுச் செலவிடும் உள்ளம்
மட்டில்லா பேரின்பம் தங்கும் இல்லம்
கடன் பட்டுக் களி நடனமாடினால்
உடன் தங்கும் வறுமை ஓடோடி வரும்
சிற்றெறும்பைக் கொஞ்சம் நோக்கி
சிறுகச் சிறுகச் சேர்க்கும் அதன் அழகைப் பார்
மழையடித்தாலும் வெயிலடித்தாலும்
மலைப்பில்லாமல் உண்ணும் சீரைப் பார்
சஞ்சாயிகாவில் சேரும் பணமும்
அஞ்சலகத்தில் வளரும் நிதியும்
வங்கியில் வைப்பு நிதியும் முதிர்வடைய
முதிர் வாழ்வில் சதிராடி மகிழலாம்
சிக்கனமும் சேமிப்பும்
நம்மை தக்கபடி வாழவைக்கும்
அருமை சேமிப்பு வீட்டின் வறுமை நீக்கும்
ஊரு போற்றும் பெருமை உன்னைச் சேரும்.
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு
தேவையான செலவை
தேடிச் செய்வதே சிக்கன வாழ்வு
திட்டமிட்டுச் செலவிடும் உள்ளம்
மட்டில்லா பேரின்பம் தங்கும் இல்லம்
கடன் பட்டுக் களி நடனமாடினால்
உடன் தங்கும் வறுமை ஓடோடி வரும்
சிற்றெறும்பைக் கொஞ்சம் நோக்கி
சிறுகச் சிறுகச் சேர்க்கும் அதன் அழகைப் பார்
மழையடித்தாலும் வெயிலடித்தாலும்
மலைப்பில்லாமல் உண்ணும் சீரைப் பார்
சஞ்சாயிகாவில் சேரும் பணமும்
அஞ்சலகத்தில் வளரும் நிதியும்
வங்கியில் வைப்பு நிதியும் முதிர்வடைய
முதிர் வாழ்வில் சதிராடி மகிழலாம்
சிக்கனமும் சேமிப்பும்
நம்மை தக்கபடி வாழவைக்கும்
அருமை சேமிப்பு வீட்டின் வறுமை நீக்கும்
ஊரு போற்றும் பெருமை உன்னைச் சேரும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கும் வழியாம்
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கும் வழியாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
விரல்கள்
=======
இரண்டு கைகள் சேர்ந்திங்கே
இதமாய் வணக்கம் செய்கையிலே
எதிரில் இருப்போர் முன்பாக
இருந்தன இரண்டு சுண்டுவிரல்!
ஆதலால் நாங்களே விரலுக்குள்
ஓதும் முதற்புகழ் பெற்றதென
மோதல் கருத்தைத் தூண்டியதால்
மோதிர விரல்கள் பேசினவே!
விலை உயர்ந்த மோதிரத்தை
நிலையாய் அணியும் தரத்தாலே
மோதிர விரல்கள் எனப்பட்டோம்
மோதா தீரெனச் சொல்லினவே!
அதற்குள் நடுவிரல் ஆர்ப்பரித்துப்
பொதுவாய் நாங்களே உயரத்தால்
பொதிய மலைபோல் இருப்பதினால்
எதுவும் எம்கீழ் சென்றனவே!
சும்மா இருந்த ஆள் காட்டிவிரல்
சுட்டி ஒன்றைக் கூறுதற்குச்
சுகமாய் உங்களுள் யாரென்று
சுருக்காய்த் தம்மைப் புகழ்ந்தனவே!
இதனைக் கேட்ட கட்டைவிரல்
எழுத உண்ண இவைபோல
எதனைச் செயினும் எமையின்றி
எதுவும் நடக்கா தென்றனவே!
இப்படி யாக விரல்களெல்லாம்
செப்பிய தனித்தனிப் பண்பாலே
ஒப்புயர் வெல்லாம் வளர்ந்திடுமோ?
ஒப்பிடும் ஒற்றுமை இல்லாமல்!
விரல்கள் புகட்டிய பாடத்தை
விரிந்த உலகில் மனிதரெல்லாம்
உரசல் இன்றி உணர்ந்திட்டால்
உறவுடன் ஒற்றுமை ஓங்கிடுமே!
=======
இரண்டு கைகள் சேர்ந்திங்கே
இதமாய் வணக்கம் செய்கையிலே
எதிரில் இருப்போர் முன்பாக
இருந்தன இரண்டு சுண்டுவிரல்!
ஆதலால் நாங்களே விரலுக்குள்
ஓதும் முதற்புகழ் பெற்றதென
மோதல் கருத்தைத் தூண்டியதால்
மோதிர விரல்கள் பேசினவே!
விலை உயர்ந்த மோதிரத்தை
நிலையாய் அணியும் தரத்தாலே
மோதிர விரல்கள் எனப்பட்டோம்
மோதா தீரெனச் சொல்லினவே!
அதற்குள் நடுவிரல் ஆர்ப்பரித்துப்
பொதுவாய் நாங்களே உயரத்தால்
பொதிய மலைபோல் இருப்பதினால்
எதுவும் எம்கீழ் சென்றனவே!
சும்மா இருந்த ஆள் காட்டிவிரல்
சுட்டி ஒன்றைக் கூறுதற்குச்
சுகமாய் உங்களுள் யாரென்று
சுருக்காய்த் தம்மைப் புகழ்ந்தனவே!
இதனைக் கேட்ட கட்டைவிரல்
எழுத உண்ண இவைபோல
எதனைச் செயினும் எமையின்றி
எதுவும் நடக்கா தென்றனவே!
இப்படி யாக விரல்களெல்லாம்
செப்பிய தனித்தனிப் பண்பாலே
ஒப்புயர் வெல்லாம் வளர்ந்திடுமோ?
ஒப்பிடும் ஒற்றுமை இல்லாமல்!
விரல்கள் புகட்டிய பாடத்தை
விரிந்த உலகில் மனிதரெல்லாம்
உரசல் இன்றி உணர்ந்திட்டால்
உறவுடன் ஒற்றுமை ஓங்கிடுமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
கல்வராயன் மலையிலே..!
===================
எல்லை இல்லா அழகிலே
இயற்கை அன்னை ஓவியம்
முல்லை உனக்குத் தெரியுமா?
முத்து உனக்குத் தெரியுமா?
கல்வ ராயன் மலையென
கல்லக் குறிச்சி அருகிலே
செல்ல நாமும் சுற்றுலா
சிறந்த தான இடமுண்டு!
வெள்ளி ஓடைப் போலவே
விழுது விட்டு மலையிலே
துள்ளி விழும் அருவிகள்
தொடரும் நதியும் அழகடா!
அள்ளி அள்ளிப் பருகிட
அழகின் சிரிப்பு தன்னிலே
கொள்ளைக் கொள்ளும் உள்ளமே
கோடைக்கேற்ற தலமிதே!
நீண்டு நெளிந்து சென்றிடும்
நீளமான சாலைகள்
தூண்டும் இன்பம் இன்பமே
தொடரும் பயணம் மலையிலே!
நீண்டு உயர்ந்து வானையே
நெட்டித் தள்ளிப் பார்க்குதோ?
தாண்டி, கடுக்காய் மரங்களும்
தானே வளர்ந்து நிற்குது!
கனி குலுங்கும் தோட்டங்கள்
கல்வ மலையின் வனத்திலே
இனிய பலா தேனுடன்
எங்கும் காணக் கிடைக்குதே!
மனதை இனிக்கச் செய்திடும்
மலையின் அழகுக் காட்சிகள்
தினமும் கண்டு மகிழலாம்
தேகம் குளிர உலவலாம்!
===================
எல்லை இல்லா அழகிலே
இயற்கை அன்னை ஓவியம்
முல்லை உனக்குத் தெரியுமா?
முத்து உனக்குத் தெரியுமா?
கல்வ ராயன் மலையென
கல்லக் குறிச்சி அருகிலே
செல்ல நாமும் சுற்றுலா
சிறந்த தான இடமுண்டு!
வெள்ளி ஓடைப் போலவே
விழுது விட்டு மலையிலே
துள்ளி விழும் அருவிகள்
தொடரும் நதியும் அழகடா!
அள்ளி அள்ளிப் பருகிட
அழகின் சிரிப்பு தன்னிலே
கொள்ளைக் கொள்ளும் உள்ளமே
கோடைக்கேற்ற தலமிதே!
நீண்டு நெளிந்து சென்றிடும்
நீளமான சாலைகள்
தூண்டும் இன்பம் இன்பமே
தொடரும் பயணம் மலையிலே!
நீண்டு உயர்ந்து வானையே
நெட்டித் தள்ளிப் பார்க்குதோ?
தாண்டி, கடுக்காய் மரங்களும்
தானே வளர்ந்து நிற்குது!
கனி குலுங்கும் தோட்டங்கள்
கல்வ மலையின் வனத்திலே
இனிய பலா தேனுடன்
எங்கும் காணக் கிடைக்குதே!
மனதை இனிக்கச் செய்திடும்
மலையின் அழகுக் காட்சிகள்
தினமும் கண்டு மகிழலாம்
தேகம் குளிர உலவலாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தாய் மொழி
தாயின் மொழி
தமிழை படி
யாரும் இதை
அறியப் படி
இன்பத் தமிழ்
இதனை படி
வண்ண தமிழ்
வளரப் படி
தாயின் மொழி
தமிழை படி
யாரும் இதை
அறியப் படி
இன்பத் தமிழ்
இதனை படி
வண்ண தமிழ்
வளரப் படி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
தமிழைப் படிப்பேன்].
அன்பாய் நானும் இருப்பேனே,
ஆசையாகப் படிப்பேனே!
இனிய சொற்கள் சொல்வேனே,
ஈவு,இரக்கம் கொள்வேனே!
உழைத்தே நாளும் பிழைப்பேனே,
ஊர்தியில் மெதுவாய்ச் செல்வேனே!
என்றும் தமிழை படிப்பேனே,
ஏற்றத் தாழ்வை மறப்பேனெ!
ஐ.நா.சபைக்கு செல்வேனே,
ஒற்றுமையாக வாழ்வேனே!
ஓடும் நதிகளை இணைப்பேனே,
ஒளவையாரைத் துதிப்பேனே,
அஃறினை உயிர்களை மதிப்பேனே
அன்பாய் நானும் இருப்பேனே,
ஆசையாகப் படிப்பேனே!
இனிய சொற்கள் சொல்வேனே,
ஈவு,இரக்கம் கொள்வேனே!
உழைத்தே நாளும் பிழைப்பேனே,
ஊர்தியில் மெதுவாய்ச் செல்வேனே!
என்றும் தமிழை படிப்பேனே,
ஏற்றத் தாழ்வை மறப்பேனெ!
ஐ.நா.சபைக்கு செல்வேனே,
ஒற்றுமையாக வாழ்வேனே!
ஓடும் நதிகளை இணைப்பேனே,
ஒளவையாரைத் துதிப்பேனே,
அஃறினை உயிர்களை மதிப்பேனே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
ஏழு நாளும் காய்கறி
திங்கள் கிழமை தக்காளி!
செவ்வாய் கிழமை சிறுகீரை!
புதன் கிழமை புடலங்காய்!
வியாழக் கிழமை வாழைக்காய்!
வெள்ளி கிழமை வெண்டைக்காய்!
சனி கிழமை சுண்டைக்காய்!
ஞாயிறு காரட் பீட்ரூட்டு!
வார நாட்கள் ஏழாகும்,
உணவில் காய்கறி நலமாகும்!
ஊட்டமான காய்கறிதான்
உயிரைக் காக்கும் மருந்தாகும்!
திங்கள் கிழமை தக்காளி!
செவ்வாய் கிழமை சிறுகீரை!
புதன் கிழமை புடலங்காய்!
வியாழக் கிழமை வாழைக்காய்!
வெள்ளி கிழமை வெண்டைக்காய்!
சனி கிழமை சுண்டைக்காய்!
ஞாயிறு காரட் பீட்ரூட்டு!
வார நாட்கள் ஏழாகும்,
உணவில் காய்கறி நலமாகும்!
ஊட்டமான காய்கறிதான்
உயிரைக் காக்கும் மருந்தாகும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
மழை தரும் மேகம்
வானத்திலே பஞ்சு மேகம்
வந்து வந்து செல்லுது!
வட்டநிலா கிட்டவந்து
தொட்டு பேசிக் கொள்ளுது!
ஆவியாகும் நீரை மேகம்
அள்ளி அள்ளி உண்ணுது!
அமுதமழை ஊருக்கெல்லாம்
அள்ளித் தந்து செல்லுது!
வானத்திலே பஞ்சு மேகம்
வந்து வந்து செல்லுது!
வட்டநிலா கிட்டவந்து
தொட்டு பேசிக் கொள்ளுது!
ஆவியாகும் நீரை மேகம்
அள்ளி அள்ளி உண்ணுது!
அமுதமழை ஊருக்கெல்லாம்
அள்ளித் தந்து செல்லுது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
திருவள்ளுவர்
வள்ளுவரு திருக்குறளை
உலகத்துக்கே தந்தாரு!
வெள்ளிநிலா போல அறிவு
வெளிச்சமதைத் தந்தாரு!
மழலையிலே பேசுவதை
மகிழ்ந்து பாடிச் சென்றாரு!
குழலும் யாழும் எங்களுக்குப்
பிறகு என்றே சொன்னாரு!
வள்ளுவரு திருக்குறளை
உலகத்துக்கே தந்தாரு!
வெள்ளிநிலா போல அறிவு
வெளிச்சமதைத் தந்தாரு!
மழலையிலே பேசுவதை
மகிழ்ந்து பாடிச் சென்றாரு!
குழலும் யாழும் எங்களுக்குப்
பிறகு என்றே சொன்னாரு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளுக்கான பாடல்கள்
எந்தச் சுவை பிடிக்குது?
கரும்பு வெல்லம் இனிக்குது!
கடல் உப்புக் கரிக்குது!
புளியங்காய் புளிக்குது!
பாகற்காய் கசக்குது!
கொய்யாக்காய் துவர்க்குது!
குட்டி மிளகு உறைக்குது!
அறுசுவையும் இருக்குது!
எந்த சுவை பிடிக்குது?
கரும்பு வெல்லம் இனிக்குது!
கடல் உப்புக் கரிக்குது!
புளியங்காய் புளிக்குது!
பாகற்காய் கசக்குது!
கொய்யாக்காய் துவர்க்குது!
குட்டி மிளகு உறைக்குது!
அறுசுவையும் இருக்குது!
எந்த சுவை பிடிக்குது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» குழந்தைகளுக்கான தளம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» :குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum