சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Khan11

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 12 Jan 2015 - 9:39

சிலை

வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில்  பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Mon 12 Jan 2015 - 13:49

விடாமுயற்சின்னு சொல்லிக்கிட்டு இன்னும் எத்தனை பாறைகளை உடைக்கபோறீங்க (தமாசு)

நான் பசங்களுக்கு கூட இவ்வளவு கடினமான வீட்டு பாடம் கொடுத்ததில்லை. ரொம்ப யோசிச்சி எழுதியிருக்கீங்க காயத்ரி. 

பாராட்டுக்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:55

தாய்மொழி என்ற அளவில் தமிழ் அறிவேன். எழுத்துலகைப் பொறுத்தவரை யாம் அகரம் படிப்பதற்காய் கலைமகளின் கதவருகே காத்திருக்கும் குழந்தையே. இக்குழந்தையின் எழுத்துக்களில் பிழையிருப்பின் சுட்டிக்காட்டி எம்மை மெருகேற்றிக்கொள்ள உதவவேண்டுகிறேன். wrote:

இப்படி சொன்னவங்க எப்படி எழுதி இருக்காங்க ....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Mon 12 Jan 2015 - 15:03

வளி வழிவரும் சமாதானம்

அருமை, அசத்தல் என்பதை விட வார்த்தை ஜாலம்  சூப்பர்..   வலி தந்தாலும் வளி வழியாய் சமாதானம் செய்து கொண்டே   பலர் ரசிக்கும் அற்புதமான சிலையை செதுக்கியபின் வரும் மகிழ்ச்சியின் முன் வலி பறந்து போயிருமே!

சிலை வடிக்க வளி இடை நின்றால் சிலை சரியாய் வராதாம் என்பர். அப்படித்தான்  வழியில் வளியாய் வரும் வலிகளை  வலிந்தெடுக்கலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 12 Jan 2015 - 17:03

பானுஷபானா wrote:

இப்படி சொன்னவங்க எப்படி எழுதி இருக்காங்க ....
ஹஹ்ஹா... பானு..குழந்தை கோடு போடும்பொழுதே ரவிவர்மாவின் ஓவியமாய் ரசிக்கும் அன்னையைப்போல் கூறியுள்ளீர்கள்..நன்றி..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 12 Jan 2015 - 17:05

Nisha wrote:
வளி வழிவரும் சமாதானம்

வலி தந்தாலும் வளி வழியாய் சமாதானம் செய்து கொண்டே   பலர் ரசிக்கும் அற்புதமான சிலையை செதுக்கியபின் வரும் மகிழ்ச்சியின் முன் வலி பறந்து போயிருமே!
 உண்மைதான்... சிலையைக்காணும் முயற்சியில் வலியை வளியிடத்தே வலுக்கட்டாயமாக அனுப்பிவிடுவோம்..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty முது(தனி)மை...!!

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 14 Jan 2015 - 8:49

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் 1619221_707965082568924_726814233_n
சுறுங்கிய தோலும்
இடுங்கிய கண்ணும்
நடுங்கும் கரங்களுடன்
வயோதிகத்திலும் 
சோறுவடிக்கும் - இவள்
அன்று பெய்த பாசமழை
விழலுக்கு இறைத்த நீராய்
வீணாகிப்போனதோ இன்று..??!!

தாய்க்கும் தாரத்திற்குமான
இடைத்தேர்தலில்
வெற்றிகொண்ட தாரத்தின்பொருட்டு
தரணியில் இவளும்
தனித்து விடப்பட்டாளோ
மனிதம் தொலைத்தவர்களால் ..??

இன்றும்..
விரும்பியவனை எண்ணியே
வெந்து தணிகிறாளோ ..?!

தனிமையை விரும்பியேற்ற இவளும்
வீட்டிற்கு வந்தவள்
வீதியிள் விட்டாளென
விருது வழங்கினாளோ..??

வெந்ததைத் தின்றே
விதிநோக்கியிருக்கும் இவள்
வீதியோரத்தை வீடாக்கிக்கொண்டாளோ..?

விதியோ..?
சமூகத்தின் சதியோ..?

விதியையும், சதியையும் முறியடிக்க
முதுமையிலும் போராடும்
இவள் போராட்டத்தின்
வெற்றிதான் எதுவோ..??!

இவளின் வெற்றிகண்டிடவே
விரும்பியழைக்கிறேன்
மனிதம் தொலைத்தவர்களை
மறுபரிசீலனை செய்திடவே...!
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by பானுஷபானா Wed 14 Jan 2015 - 13:01

இது உலக நியதி போல ஆகிடுச்சு

ஊன் உற்க்கம் மறந்து  பிறப்பிற்கு அர்த்தம் குடுத்தவளை இடையில் வந்தவள் வென்று விடுகிறாள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Thu 15 Jan 2015 - 0:43

முரண்பட்ட சிந்தனைகள்..

சிலை..!!

மழலையர் உலகம்..

என தனித்தனியே  திரி தொடங்காமல் பொதுத்தலைப்பொன்றை இட்டு அதில் இவைகளை  உபதலைப்பாய் இட்டு தொடரலாமே!

உதாரணமாக...
காயத்ரிவைத்தியநாதனின்கவிதைகள்...முது(தனி)மை...!!

பொதுத்தலைப்பாய் நீங்கள் விரும்பிய தலைப்புடன் ஒவ்வொரு பதிவின் போது தலைப்பில்  மாற்றம் செய்தால் போதுமே! உங்கள் கவிதைகள்  ஒரே பதிவில்  பின்னூட்டங்களோடு  பதியும் போதெல்லாம் அனைத்து கவிதைகளும் மேலே வரும் வாய்ப்பும்  ஒரே தொகுப்பாய் தேடலுக்கு கிடைக்கும் வாய்ப்பும் கிடைக்குமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by ahmad78 Thu 15 Jan 2015 - 8:27

உண்மைதான். முதுமையை பேணாதவர்கள் மனிதம் தொலைத்தவர்கள்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu 15 Jan 2015 - 11:52

Nisha wrote:முரண்பட்ட சிந்தனைகள்..

சிலை..!!

மழலையர் உலகம்..

என தனித்தனியே  திரி தொடங்காமல் பொதுத்தலைப்பொன்றை இட்டு அதில் இவைகளை  உபதலைப்பாய் இட்டு தொடரலாமே!

உதாரணமாக...
காயத்ரிவைத்தியநாதனின்கவிதைகள்...முது(தனி)மை...!!

பொதுத்தலைப்பாய் நீங்கள் விரும்பிய தலைப்புடன் ஒவ்வொரு பதிவின் போது தலைப்பில்  மாற்றம் செய்தால் போதுமே! உங்கள் கவிதைகள்   ஒரே பதிவில்  பின்னூட்டங்களோடு  பதியும் போதெல்லாம் அனைத்து கவிதைகளும் மேலே வரும் வாய்ப்பும்  ஒரே தொகுப்பாய் தேடலுக்கு கிடைக்கும் வாய்ப்பும் கிடைக்குமே!
ஓ.... இவையெல்லாம் எம் பதிப்புகளுக்கான தலைப்பாகக்கொண்டேன்.வலைப்பூவில் பதிவதுபோல்.. சொந்தக்கவிதை என்பதில் தலைப்பு தனித்தனியாக கொடுக்கலாம் என்றுபுரிந்துகொண்டேன்.  சரி..இனி தாங்கள் கூறுவதுபோல் தலைப்பு ஒன்றாகக் கொடுத்துத்துவங்குகிறேன்.
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள்... சிந்திய வார்த்தை.

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 17 Jan 2015 - 10:35

நான்
கருணையின்றி கொலைசெய்த 
வார்த்தைகள் 
கண்முன்னேத் தோன்றி 
வினாவாயிரம் எழுப்ப...

கோபத்தில் திராவகமாய்
விழுந்த கொடிய வார்த்தைகள்...!

பாசத்தில்  நெகிழ்ந்து
நெஞ்சம் தழுவிய வார்த்தைகள்..

தோழமைகளோடான

கேலி வார்த்தைகள்...

பக்தியில் நெக்குறுகிய 
வார்த்தைகள்..

காதலில்
கனிரசம் சிந்திய வார்த்தைகள்..

கருணையில் உருகி
கசிந்த வார்த்தைகள்..

அலட்சியப் படுத்துவோரிடம் 

அறிவுரை வார்த்தைகள்...

புரிதலற்றோரிடம்

புரியவைக்க விரயமாகிப்போன 
வார்த்தைகளை...

மௌனமாய் 
அடைகாத்திருந்தால்
இயல்பில் இருந்து
என்றேனும்
தன் பலம் நிரூபிக்க
தரணியில் நிலைத்து

முத்தாய் மிளிர்ந்திருக்கலாம்..!

சிந்திய வார்த்தைகளை
மீட்டெடுக்க முடியா சோகத்தில்
கொலைசெய்யப்பட்ட
வார்த்தைகளுக்கு
கண்ணீர் அஞ்சலி 
செலுத்தப்படுகிறது

சிலபலநேரங்களில்...​..!!
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Sat 17 Jan 2015 - 13:00

சிந்திய வார்த்தைகளை
மீட்டெடுக்க முடியா சோகத்தில்
கொலைசெய்யப்பட்ட
வார்த்தைகளுக்கு
கண்ணீர் அஞ்சலி 
செலுத்தப்படுகிறது

சிலபலநேரங்களில்.

ஆம் சிந்திய வார்த்தைகளை மீட்டெடுக்க முடிவதில்லை தான். கவிதை அருமை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by பாயிஸ் Sat 17 Jan 2015 - 13:24

மௌனமே வார்த்தையானால் கண்ணீருக்கு இடமில்லை அருமையான கவிதை இன்னும் தொடருங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 20:42

சிந்திய வார்த்தைகள் அத்தனையும் பட்டைதீட்டிய வைரங்கள்.

Last edited by *சம்ஸ் on Sat 17 Jan 2015 - 20:58; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சே.குமார் Sat 17 Jan 2015 - 20:55

அருமை அக்கா... வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Sat 17 Jan 2015 - 21:33

அடடா பேசாம இருந்தாலும் தப்பா@ 

அழகிய வார்த்தைகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Jan 2015 - 7:01

நாகாத்து நானிலம் வென்றிடுவோம் 
அருமையான கவிதை வார்த்தைகளை கொட்டுமுன் அளந்து பாவித்தல் சிறப்பு அறிவுரைக் கவிதை பாராட்டுகள் தொடருங்கள்

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள்... #அவனதிகாரம்..

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 19 Jan 2015 - 7:49

 யாதுமாய் யாவற்றிலும் தோன்றி எனை ஆட்கொள்ளும் யாதுமானவன்.:)
**
மௌனத்தால் கொன்று, வார்த்தைகளால் கொள்பவன்.
***
அவன், வாழ்வியலின் அழகியலை இரசிக்க கற்றுக்கொடுப்பவன். 
***
அவன் தன் கோபத்திலும் அன்பை வெளிப்படுத்தும் அற்புதன்.
**
அவன் தன் கொந்தளிக்கும் கோபத்தையும் மௌனத்தில் வெளிப்படுத்தும் அழகியல் கற்றவன்.
**
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன்..:)
***
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Mon 19 Jan 2015 - 7:52

ஆக அவங்க ரென்டு பேரும் சண்டையே போட்டுக்கல

சூப்பர்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 19 Jan 2015 - 7:59

சுறா wrote:ஆக அவங்க ரென்டு பேரும் சண்டையே போட்டுக்கல

சூப்பர்
ஹஹ்ஹா....  இங்கு மௌனமே பதிலாய்... :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Mon 19 Jan 2015 - 8:53

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:ஆக அவங்க ரென்டு பேரும் சண்டையே போட்டுக்கல

சூப்பர்
ஹஹ்ஹா....  இங்கு மௌனமே பதிலாய்... :)

இங்கும் மௌனமே பதிலா? அருமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Farsan S Muhammad Tue 20 Jan 2015 - 15:52

வார்த்தை ஜாலம் வசீகரிக்கும் கவி வரிகள் அருமை
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள்... முரண்...

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 21 Jan 2015 - 9:50

விதைக்கப்படும் அன்பு 
அன்பாக சிலநேரமும், 
கோபமும், வெறுப்புமாக சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட..

விதைக்கப்பட்ட வெறுப்பும், கோபமும் 
அன்பாக சிலநேரமும், 
வெறுப்பும், கோபமுமாகவே சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட...
அறுவடை.. 
விதைக்கப்படும் 
விதையைப் பொறுத்தில்லாமல்
விதைக்கப்படும் 
நிலத்தின் தன்மைக்கேற்பவே அமை(யும்)கிறது...
‪#‎சிலபலநேரங்களில்‬.. smile emoticon
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by பானுஷபானா Wed 21 Jan 2015 - 9:56

கவிதை சூப்பர்...

Last edited by பானுஷபானா on Wed 21 Jan 2015 - 10:45; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum